India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
DC நிர்வாகத்திடம் இருந்து மரியாதையையும், அன்பையும் கே.எல்.ராகுல் எதிர்பார்ப்பதாக அந்த அணியின் ஓனர் பார்த் ஜிண்டால் கூறியுள்ளார். மேலும், தானும், டெல்லியும் இதுவரை IPL கோப்பையை வெல்லவில்லை, இந்த முறை இருவரும் இணைந்து அதற்காக போராடலாம் என ராகுல் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, LSG அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, ராகுலிடம் பொதுவெளியில் கடுமையாக நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள் தங்கள் வீடுகளில் ரூ.193 லட்சம் கோடி மதிப்புக்கு தங்க நகைகளை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக தங்க மதிப்பீடு கவுன்சில் அறிக்கையில், இந்தியர்கள் 23,537 டன் தங்கம் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. தங்கம் மீதான இந்தியர்களின் ஆசையையே அவர்கள் இருப்பு வைத்துள்ள தங்கத்தின் மதிப்பீடு வெளிப்படுத்துகிறது. நீங்க உங்கள் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துள்ளீர்கள்? கீழே கமெண்ட்ஸ் பதிவிடுங்க.
பருவநிலை மாறுபாடால் ஏற்படும் காட்டுத்தீ மற்றும் விவசாய கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக, உலகம் முழுவதும் ஆண்டுக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், இவை வளரும் நாடுகளையே அதிகம் பாதிப்பதும் தெரியவந்துள்ளது.
1) தெற்கின் பிரிட்டன் என அழைக்கப்படும் நாடு எது? 2) GCC என்பதன் விரிவாக்கம் என்ன? 3)இமயமலை தொடரின் நீளம் என்ன? 4) சமதளப் பரப்பளவைத் தொகுத்தளிக்க உதவும் கருவி எது? 5) தங்கத்தின் வேதியியலின் பெயர் என்ன? 6) ‘அபிஞான சாகுந்தலம் ‘ நூலின் ஆசிரியர் யார்? 7) இலங்கையின் தேசிய மலர் எது? 8) சர்வதேச நாணய நிதியம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
கர்நாடகாவில் ஹிந்தி மொழிக்கு எதிராக கடும் எதிர்வினைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை என RCBயை ரசிகர்கள் விமர்சிக்கும் சூழலில், மற்றுமொரு பிரச்னை வந்துள்ளது. அண்மையில் RCB அணி X தளத்தில் RCBhindi என்ற கணக்கை தொடங்கியது. இதற்கு கன்னட ஆதரவாளர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இருக்குற பிரச்னை பத்தாதுன்னு இது தேவையா?
‘நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ டாக்குமெண்ட்ரியை பிரபல எழுத்தாளர் ஷோபா டே கடுமையாக விமர்சித்துள்ளார். 45 நிமிட வீடியோவில் ரசிக்கும்படியாக எதுவும் இல்லை என தெரிவித்துள்ள அவர், திருமணத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் போக்கு என்றும் சாடியுள்ளார். ஷோபா டேவின் இந்த விமர்சனத்தை பலரும் லைக் செய்து வரும் நிலையில், இது நயன்தாராவின் தனிப்பட்ட உரிமை என சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் Ex அமைச்சர்கள் முன்னிலையில் மதுரை உள்ளிட்ட இடங்களில் கட்சி நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், சேலத்தில் நாளை அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு Ex அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி தலைமை தாங்க இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை வர வேண்டாம் எனக் கூறிவிட்டு, இபிஎஸ் தலைமை தாங்கி நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடனான சந்திப்பை வைகோ பகிர்ந்துள்ளார். மதிமுக சார்பில் நடைபெற்ற மாவீரர் தினக் கூட்டத்தில் பேசிய அவர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை முன்பு சந்தித்தபோது, அவர் வைத்திருந்த சயனைட் குப்பியை தன்னிடம் அளித்ததாக தெரிவித்தார். அந்த குப்பியை இன்னும் தாம் பத்திரமாக வைத்திருப்பதாகவும் வைகாே கூறினார்.
நலிவடைந்த மக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை சுருட்டினால் என்னவென சொல்வது. கேரள அரசு மாதம் 62 லட்சத்திற்கு ரூ.1,600வழங்கும் ஓய்வுதியம் தகுதியுடையவர்களுக்கு தான் செல்கிறதா? என ஆய்வு செய்ய, இதில் 1,498 பேர் சிக்கியுள்ளார்கள். இவர்களெல்லாம் அரசாங்கத்தின் உயரதிகாரிகள். சிலர் கல்லூரி பேராசிரியர்கள் வேறு. இவர்களுக்கு தண்டனையாக சுருட்டிய காசுக்கு வட்டி போட்டு வசூலிக்க முடிவெடுத்துவிட்டது அரசு.
ஆஸி.க்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சியின் போது இடது கட்டை விரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில், முழுமையாக உடல் நலம் பெற அவரை 10 – 14 நாட்கள் வரை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.