India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் டிச.2 வரை கனமழை முதல் மிகக் கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
முக்கால் கப் சர்க்கரையை மிக்சி ஜாரில் அரைத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அதனுடன் மைதா மாவு (1 கப்), ஏலக்காய் தூள், தயிர் (1/4 கப்), சிட்டிகை பேக்கிங் சோடா, உப்பு, நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் மாவை சிறு உருண்டைகளாக பொரித்து எடுக்கவும். எண்ணெய் வடிந்த பின் அதை சர்க்கரைப்பாகில் தோய்த்து எடுத்தால் சுவையான பால்பன் தயார்.
வக்ஃபு சட்டத்திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கெடு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தொடரின் கடைசி நாள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை ஆராய கூடுதல் அவகாசம் தேவை என்பதால், நாடாளுமன்ற கூட்டுக் குழு பதவிக் காலத்தை நீட்டிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.
IMDB-யின் இன்றைய வாரத்திற்கான டாப் இந்திய பிரபலங்கள் லிஸ்ட்டில் சமந்தா முதலிடம் பிடித்துள்ளார். உலகம் முழுவதும் 20 கோடி பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா -5, ராஷி கண்ணா 15ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். முன்னதாக, சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘Citadel: Honey Bunny’ வெப்சீரிஸ் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆஸி. அணிக்கு எதிரான BGT தொடரில் விராட் கோலி ரன்களை குவிப்பார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கணித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு பேட்டியளித்த அவர், “சில மாதங்களுக்கு முன் SAஇல் விளையாடிய போது நன்றாக பேட்டிங் செய்தார். BGT தொடரின் முதல் போட்டி நடந்த கடினமான ஆடுகளத்திலும் அவர், சதமடித்தது நம்பிக்கை அளிக்கிறது. கோலியிடம் ஆஸி. அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.
ஜெயலலிதா மறைந்த போது, 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இது தங்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக சிறப்பு நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்தது. ஆனால், இதை எதிர்த்து ஐகோர்ட்டில் அப்பாவு வழக்கு தொடர்ந்த நிலையில், அதிமுகவின் வழக்கு தள்ளுபடியானது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக தற்போது மேல்முறையீடு செய்துள்ளது.
காலையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீடுகள், தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. Nifty 223 புள்ளிகள் சரிந்து 24,051 ஆகவும், SENSEX 783 புள்ளிகள் சரிந்து 79,450 ஆகவும் வர்த்தகமானது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ₹4 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு பணவீக்கம், பெடரல் வட்டி விகிதக் குறைப்பு & பங்குகளின் ஹெவிவெயிட் விற்பனை காரணங்களாக கூறப்படுகிறது.
EVKS இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனதாகவும், திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், டிச.9ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவையில், இளங்கோவன் உரையாற்றுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாடவில்லை என்றால், PAK அணி இனிமேல் இந்தியா செல்லாது என PCB தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய அணி PAK வர மறுப்பு தெரிவிக்கும்போது, PAK அணி மட்டும் ஏன் இந்தியா செல்ல வேண்டும்? ICC தலைவராக பதவியேற்ற பிறகு ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட்டின் நலன் குறித்து சிந்திப்பார் என்று அனைவரும் நம்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவச லேப் டாப் வழங்குவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. அதில், இலவச லேப் டாப் வழங்க இருப்பதாக வலைதளங்களில் வரும் செய்தி பொய்யானது என்று தெரிவித்துள்ளது. அதுபோல திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. ஆதலால் அத்தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.