News August 27, 2025

BREAKING: விஜய் மீது பதிவானது முதல் கிரிமினல் வழக்கு

image

மதுரை மாநாட்டில் <<17484937>>தொண்டரை பவுன்சர் தூக்கி வீசிய<<>> சம்பவத்தில் விஜய் மீது முதல் கிரிமினல் வழக்கு பதிவாகியுள்ளது. தவெகவின் சரத்குமார், பெரம்பலூர் SP ஆபிஸில் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். FIR 346/2025-ல் கொலை மிரட்டல், கூட்டு தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக விஜய், மேலும், பவுன்சர்கள் 10 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

News August 27, 2025

அனைத்து ரேஷன் கார்டுக்கு ₹5,000… வெளியான புது தகவல்

image

வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹5,000 ரொக்கப் பரிசு வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.

News August 27, 2025

வாக்கு திருட்டு விவகாரம்: நெல்லையில் காங்., மாநாடு

image

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து பிஹாரில் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். இந்நிலையில், வாக்கு திருட்டு குறித்து விளக்குவதற்காக நெல்லையில் செப்.7-ம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த காங்., தலைவர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News August 27, 2025

700 வருடங்களாக மக்களை காக்கும் எரிமலை கணேசன்!

image

எரிமலை வெடித்து மக்களை துன்புறுத்தாமல் இருக்க, 700 ஆண்டுகளாக ஒரு சிறு விநாயகர் சிலை காப்பாற்றி வருவது உங்களுக்கு தெரியுமா? இந்தோனேசியாவின் ஈஸ்ட் ஜாவாவில் உள்ள ப்ரோமோ எரிமலையின் விளிம்பில் உள்ள விநாயகர் சிலையால் தான், இதுவரை எரிமலை வெடிக்கவில்லை என மக்கள் நம்புகின்றனர். எரிமலை குறித்து பயமின்றி மக்கள், விநாயகருக்கு பூ, பழம் சமர்ப்பித்து வழிபாடும் செய்து வருகின்றனர். SHARE IT.

News August 27, 2025

BREAKING: இளைஞர் கடத்தல்.. பிரபல தமிழ் நடிகை ஓட்டம்

image

ஐடி ஊழியர் கடத்தல் விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகி உள்ளார். எர்ணாகுளத்தில் மதுபான விடுதியில் ஒன்றாக மது அருந்தும்போது, ஐடி ஊழியருக்கும், லட்சுமி மேனன் தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனையடுத்து, அந்த ஐடி ஊழியரை காரில் கடத்திச் சென்று, லட்சுமி மேனன் தரப்பு கடுமையாக தாக்கியுள்ளது. இதுதொடர்பாக, போலீசார் விசாரணைக்கு அழைத்த நிலையில், அவர் தப்பி ஓட்டம்பிடித்துள்ளார்.

News August 27, 2025

பொது அறிவு வினா- விடை!

image

1. அஸ்வின் எந்த ஆண்டு IPL-ல் அறிமுகமானார்?
2. இந்தியாவில் முதல்முறையாக ஆஸ்கார் விருது பெற்றவர் யார்?
3. தமிழக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கான இடஒதுக்கீடு எவ்வளவு?
4. ஜப்பான் நாட்டின் நாணயத்தின் பெயர்?
5. டைட்டானிக் கப்பல் மூழ்கிய ஆண்டு?
கேள்விகளுக்கு சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.

News August 27, 2025

இன்ஜினியரிங்கில் AI கட்டாயம்: அண்ணா பல்கலை

image

நடப்பு கல்வியாண்டு (2025 – 2026) முதல் அண்ணா பல்கலைக்கு உள்பட்ட பொறியியல் கல்லூரிகளில், BE படிப்புகளில் டேட்டா சயின்ஸ், AI பாடத்திட்டங்கள் நேரடி பயிற்சியுடன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆங்கில மொழியுடன் ஜெர்மன், ஜப்பான் (அ) கொரிய மொழிகளில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டும். Emotional Intelligence, Positivity ஆகியவற்றை கற்கும் வகையில் உடற்கல்வி பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

தமிழ்நாடு முழுவதும் கட்டுப்பாடு அமல்

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை வைத்து வழிபாடு செய்ய காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. தடையில்லா சான்று பெற்று விநாயகர் சிலையை நிறுவ வேண்டும். பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலைகளை நிறுவ கூடாது. சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள், கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

News August 27, 2025

BREAKING: ஓய்வு பெற்றார் அஸ்வின்

image

IPL போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர வீரர் அஸ்வின் சற்றுமுன் அறிவித்துள்ளார். 2009-ல் CSK அணிக்காக களமிறங்கிய அவர், RR, DC உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி, 187 (IPL) விக்கெட்டுகள், 833 ரன்களை எடுத்துள்ளார். கடந்த ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றிருந்தார். கடந்த IPL சீசனில் CSK-வில் இடம்பெற்ற அவர், சரியாக விலையாடவில்லை என சர்ச்சை எழுந்தது.

News August 27, 2025

SPORTS ROUNDUP: துப்பாக்கி சுடுதலில் மேலும் ஒரு தங்கம்!

image

◆ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் சிப்ட் கவுர் கம்ரா தங்கம் வென்றார்.
◆உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரணாய் மற்றும் பிவி சிந்து ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
◆அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார் வீனஸ் வில்லியம்ஸ்.

error: Content is protected !!