News November 28, 2024

உடனுக்குடன் மின் இணைப்புகள்: செந்தில் பாலாஜி

image

திமுக ஆட்சியில் புதிய வேளாண் மின் இணைப்புகள் உடனுக்குடன் வழங்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 1,38,592 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த 3 வருட திமுக ஆட்சியில் 1,69,564 புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விவசாயிகளுக்கு கெடுபிடிகள் இன்றி மின் இணைப்பு தரப்படுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

News November 28, 2024

தற்காலிக புயல் என்றால் என்ன?

image

பெங்கல் புயல் இன்று மாலை முதல் நாளை காலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை தற்காலிக புயல் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில், புயல் வடிவில் அது இலங்கையை முதலில் கடக்கிறது. பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து காரைக்கால்- மகாபலிபுரம் இடையே 30ஆம் தேதி கரையை கடக்கிறது. அதனாலேயே அதற்கு தற்காலிக புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

News November 28, 2024

நாமக்கல்லில் கூண்டோடு விலகிய நாதக நிர்வாகிகள்

image

நாமக்கல் மாவட்ட நாதக முன்னாள் செயலாளர் உட்பட 50 பேர் கட்சியில் இருந்து கூண்டோடு விலகியுள்ளனர். கட்சியில் யாருக்கும் மரியாதை இல்லை என்றும், சீமானை சந்திக்கவே முடியவில்லை எனவும் அவர்கள் குமுறியுள்ளனர். குறிப்பாக நடிகர் ரஜினியை சந்தித்த பிறகு, சீமான் மதவாதத்தை ஆதரிக்கும் போக்கில் பேசி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாதகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது தொடர் கதையாகி வருகிறது.

News November 28, 2024

இணையத்தில் கசிந்த கேரள நடிகை வீடியோ!

image

இணையத்தில் கசிந்த ஆபாச வீடியோ தொடர்பாகக் கேரள நடிகை திவ்யா விளக்கம் அளித்துள்ளார். பாயல் கபாடியா இயக்கத்தில் கடந்த 22ம் தேதி வெளியான ‘All We Imagine as Light’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச வீடியோ வெளியாகியுள்ளது. அதில் நடித்துள்ள நடிகை திவ்யா பிரபா, வீடியோவை சேர் செய்யும் 10% நபர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது. கதைக்காக மட்டுமே இப்படி நடித்தேன், புகழுக்காக இல்லை எனக் கூறியுள்ளார்.

News November 28, 2024

சீமானுக்கு ‘செக்’.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

image

சீமான் மீதான வழக்கை விரைந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு, இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது 2018-இல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

News November 28, 2024

சென்னை மக்களுக்கு அலர்ட்.. இரவு முதல் மழை

image

எதிர்காற்று வீசுவதால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவுக்குள் தற்காலிக புயலாக உருவெடுக்கும். புயலாக மாறி மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நவ.30இல் மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கும். இதனால், சென்னையில் இன்று இரவு முதலே மழை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.

News November 28, 2024

அமித்ஷா தலைமையில் செயல்படும் குண்டர்கள்?

image

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தலைமையின்கீழ் குண்டர்கள் செயல்படுவதாக AAP தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், 1990களில் மும்பையில் நிலவிய நிழலுலக தாதாக்களின் ஆதிக்கத்தை போல, இப்போது டெல்லியிலும் குண்டர் ராஜ்ஜியம் நடக்கிறது. வணிகர்களை மிரட்டுவது, துப்பாக்கிச் சூடு & வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சட்டம், ஒழுங்கு சீர்கேட்டிற்கு அமித்ஷாவே காரணம் என சாடினார்.

News November 28, 2024

பாடல்களுக்கு AI குரல்… ஒப்புக்கொள்ளாத SPB சரண்?

image

மறைந்த பழம்பெரும் பாடகர்களின் குரலை AI மூலம் பயன்படுத்துவது சரியல்ல என்று பாடகரும் நடிகருமான SPB சரண் தெரிவித்துள்ளார். தனது தந்தையும், பாடகருமான SPBஇன் குரலைப் பயன்படுத்த பலர் தன்னை அணுகியதாகக் கூறிய அவர், அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றார். ஒரு பாடலைப் பாடுவது பாடகரின் விருப்பம் என்றும், நாம் விரும்பும் பாடல்களுக்கு இல்லாத ஒருவரின் குரலைப் பயன்படுத்தக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

News November 28, 2024

இன்னும் ஒரே விக்கெட்: உலக சாதனையின் விளிம்பில் பும்ரா

image

டெஸ்டில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருக்கும் பும்ரா, புதிய சாதனை ஒன்றின் விளிம்பில் உள்ளார். டிச.6ம் தேதி தொடங்கும் ஆஸி.க்கு எதிரான 2-வது டெஸ்டில் அவர் 1 விக்கெட்டை வீழ்த்தினால், இந்த காலண்டர் ஆண்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். அவருக்கு அடுத்த இடத்தில், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 50 விக்கெட்டுகளை எட்டுவதற்கு இன்னும் 4 விக்கெட்டுகள் தேவை.

News November 28, 2024

கே.பாலகிருஷ்ணன் ஹாஸ்பிடலில் அட்மிட்

image

உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜிவ் காந்தி அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். சளி மற்றும் தொண்டை வலியால் அவதியடைந்து வரும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையை மூத்த மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. எனினும், சிகிச்சை முறை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

error: Content is protected !!