News November 29, 2024

மேலும் 1 மாவட்டத்திற்கு விடுமுறை

image

சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. புதுச்சேரி மாநிலத்திலும் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News November 29, 2024

சிக்கலில் ‘சூர்யா 44’ பட டைட்டில்?

image

‘சூர்யா 44’ பட டைட்டிலுக்கு சிக்கல் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘கல்ட்’ என்ற தலைப்பை படக்குழு யோசித்துள்ளதாம். ஆனால், அந்த தலைப்பை நடிகர் அதர்வா தான் இயக்கும் புதிய படத்திற்காக பதிவு செய்து வைத்துள்ளாராம். விஷயம் அறிந்த படக்குழு, அதர்வாவை தொடர்பு கொண்ட போது, அவர் தலைப்பை தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

News November 29, 2024

கனடாவை Gun Pointஇல் வைக்கும் இந்தியா

image

இந்தியா – கனடா இடையிலான உறவு இன்னும் சிக்கலானதாகவே உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பார்லிமென்ட் குழுவிற்கு அளித்த தகவலில், இரு நாடுகளுக்கு இடையிலான நிலையான உறவுக்கு பிராந்திய ஒற்றுமை மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும் என கனடாவிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது. பிரிவினைவாதிகளுக்கு கனடா அடைக்கலம் கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

News November 29, 2024

காலையில் எழுந்தவுடன் இதையெல்லாம் பார்த்துறாதீங்க

image

காலையில் எழுந்ததும் சில விஷயங்களைப் பார்க்கக்கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரங்கள் * கண்ணாடியில் முகத்தைப் பார்க்காதீர்கள் பார்க்கவேண்டாம் * சேதமடைந்த, உடைந்த கடிகாரங்களைப் பார்க்கக்கூடாது * ஆக்ரோஷமான வன விலங்குகள், போர், வன்முறை ஆகியவற்றின் ஓவியங்கள் அல்லது புகைப்படங்களைப் பார்க்க வேண்டாம். இவை நமக்கு எதிர்மறை சிந்தனையை கொடுக்கும் என்பதால் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

News November 29, 2024

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை முன்னெச்சரிக்கையாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த். மேலும், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரி மாநிலத்திற்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

News November 29, 2024

நிபந்தனை தளர்வு கோரி கஸ்தூரி மனு

image

தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நிபந்தனை தளர்வு கோரி நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கஸ்தூரி நிபந்தனை ஜாமினில் உள்ளார். அவர் நாள்தோறும் காலை 10 மணிக்கு எழும்பூர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வருகிறார்.

News November 29, 2024

CM முடிவு கண்டிக்கத்தக்கது: தமிழிசை

image

விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தாத CM ஸ்டாலினின் முடிவு கண்டிக்கத்தக்கது என தமிழிசை தெரிவித்துள்ளார். Xஇல் பதிவிட்டுள்ள அவர், பாரம்பரிய கைவினை கலைஞர்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக எதிர்த்து திமுக அரசு அநீதி செய்வதாகக் கூறியுள்ளார். முன்னதாக இந்த திட்டம், சாதி ரீதியில் தொழில்முறையை வலுப்படுத்தும் என்பதால் செயல்படுத்த மாட்டோம் என CM நேற்று கூறியிருந்தார்.

News November 29, 2024

குளிர்காலத்தில் இளநீர் அவசியம் குடிங்க

image

குளிர் காலத்தில் இளநீர் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இளநீர் ஒரு ஆரோக்கியமான பானமாகும். அதில் உள்ள வைட்டமின் சி குளிர்காலங்களில் வைரஸ் மற்றும் பாக்டீரியாவிடம் இருந்து உடலை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. குளிர் காலத்தில் பொதுவாகவே தாக்கம் இல்லாமல் இருக்கும், இதனால் நீரிழப்பு ஏற்படலாம். இளநீர் குடிப்பதால் இப்பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்.

News November 29, 2024

உடல் எடையைக் குறைக்கும் கொத்தமல்லி விதை டீ!

image

கொத்தமல்லி விதை டீ உடல் எடையைக் குறைக்க உதவும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, அஜீரண பிரச்னைகளைச் சரி செய்யும் எனவும், உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் என்றும் கூறுகின்றனர். ஒரு கிளாஸ் நீரில் 2 ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை சேர்த்து, பாதியாக வற்றும் வரை கொதிக்க விடவும். இதை வடிகட்டினால் கொத்தமல்லி விதை டீ ரெடி.

News November 29, 2024

மத சுதந்திரம் பாதுகாக்கப்படணும்: ஷேக் ஹசீனா

image

வங்கதேசத்தில் இந்து மதத்தலைவர் கைது செய்யப்பட்டதற்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்துள்ளார். வங்கதேச கொடியை அவமதித்ததாகக் கூறி சம்மிலிதா சனாதனி ஜோதே என்ற இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய ஹசீனா, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றார். மேலும், மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!