News November 30, 2024

BREAKING: மின்கட்டணம் குறித்து அரசு முக்கிய அறிவிப்பு

image

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக 4 மாவட்டங்களில்
EB கட்டணம் செலுத்த அரசு கால அவகாசம் அளித்துள்ளது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் அதிகனமழை வெளுத்து வாங்கி வருவதால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் மின்கட்டணம் செலுத்த டிச.10ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: உதயநிதி

image

புயல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என துணை முதல்வர் உதயநிதி கேட்டுக்கொண்டுள்ளார். பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், அரசு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளதால் புயலால் ஏற்படும் பாதிப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது என்றார். தாழ்வானப் பகுதிகளில் தேங்கும் மழை நீர் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டு வருவதால், விரைவில் இயல்பு நிலை திரும்பும் எனவும் தெரிவித்தார்.

News November 30, 2024

புயலால் கிழிந்த தேசியக் கொடி

image

புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் பறக்கும் தேசியக்கொடி கிழிந்தது. பலத்த மழை தொடர்வதால், கொடியை சரிசெய்யும் பணிகளை தொடங்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். மழை ஓரளவு குறைந்ததும் உடனடியாக தேசியக்கொடி இறக்கப்படும் என்றும், மழை முழுவதும் நின்ற பிறகு புதிய தேசியக் கொடி மீண்டும் ஏற்றப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 30, 2024

அறுந்து விழுந்த மின்கம்பி அருகில் போகாதீங்க

image

மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். *டிவி ஆன்டனா, ஸ்டே ஒயர், கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம். *வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.

News November 30, 2024

மணிக்கு 7 கிலோ மீட்டர்.. புயல் நகரும் வேகம் குறைந்தது

image

ஃபெஞ்சல் புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் முன்பு நகர்ந்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்தப் புயல் நகரும் வேகம் மணிக்கு 7 கிலோ மீட்டராக குறைந்துள்ளது. கடந்த 6 மணி நேரமாக புயல் 7 கிலோ மீட்டர் வேகத்திலேயே நகர்ந்து வருவதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. மகாபலிபுரம், காரைக்கால் இடையே இன்று மாலை புயல் கரையைக் கடக்கையில் புயல் மேலும் வேகம் குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News November 30, 2024

WARNING: மறந்து கூட இதை செய்துவிடாதீர்

image

*ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். *வீட்டின் உட்புற சுவர் ஈரமாக இருந்தால், மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக்கூடாது. *நீரில் நனைந்த ஃபேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க கூடாது. *மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக் கூடாது. குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம்.

News November 30, 2024

சென்னையை மேலும் நெருங்கியது புயல்

image

ஃபெஞ்சல் புயல் சற்றுமுன்பு 100 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த புயல் 90 கிலாே மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், மகாபலிபுரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

News November 30, 2024

நாளை வங்கித் தேர்வுகள் நடைபெறாது

image

சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையின் பல இடங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதேபோல், நாளையும் கனமழை நீடிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதை கவனத்தில் காெண்டு, வங்கித் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும், புதிய தேதி பிறகு அறிவிக்கப்படும் என்றும் IIB&F அமைப்பு அறிவித்துள்ளது.

News November 30, 2024

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் வதந்தி: துரைமுருகன்

image

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க TN அரசு ஒப்புதல் அளித்ததாக வதந்தி பரப்பப்படுவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய எந்த சுரங்கப் பணிக்கும் அரசு அனுமதியளிக்காது எனவும் விளக்கமளித்தார். சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்யக்கோரி CM கடிதம் எழுதியுள்ளதாகவும், இத்திட்டம் நிறைவேறாது என்றும் தெரிவித்தார்.

News November 30, 2024

சொன்னா கேக்கணும்; இல்லனா பாக்., இருக்காது: ICC வார்னிங்

image

சாம்பியன்ஸ் கோப்பை (CT) தொடரை வேறு நாட்டுக்கு மாற்றுவோம் என பாகிஸ்தானுக்கு ICC எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுப்பதால் ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்துவது குறித்து ஆலோசிக்கும்படி ICC கேட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் அதற்கு பதிலளிக்கவில்லை. இதையடுத்து, ஹைபிரிட் மாடலை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் பாகிஸ்தான் இல்லாமல் போட்டியை நடத்துவோம் என ICC எச்சரித்துள்ளது.

error: Content is protected !!