India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயல், மழையால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில், இன்று மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் 200 மருத்துவ முகாம்களும் மற்ற 6 மாவட்டங்களில் தலா 50 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், இதில் காய்ச்சல், சளி பரிசோதனை, ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு தமிழகத்தில் சனி, ஞாயிறுக்கிழமைகளுடன் சேர்த்து மொத்தம் 8 நாள்கள் விடுமுறை ஆகும். அதை தெரிந்து கொள்வோம்.
* டிசம்பர் 1 *டிசம்பர் 8
*டிசம்பர் 14 * டிசம்பர் 15
*டிசம்பர் 22 *டிசம்பர் 25
*டிசம்பர் 28 *டிசம்பர் 29.
Prime Minister’s XI அணிக்கு எதிரான இந்தியாவின் 2 நாள் பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் மழையால் நேற்று தடைப்பட்டது. இந்நிலையில் இன்று பிங் பால் டெஸ்ட் ஆட்டத்திற்கு பதிலாக 50 ஓவர்கள் கொண்ட white ball கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளனர். IND-AUS இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இம்மாதம் 6ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெற உள்ளது.
உக்ரைனுக்கு ஆயுதங்களை ஏற்றி வந்த நேட்டோ ரயிலை ஏவுகணை வீசி ரஷ்யா அழித்து விட்டது. போரில் உக்ரைனுக்கு ஆரம்பம் முதல் இங்கிலாந்து, அமெரிக்கா உதவி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா அனுப்பிய நவீன ஏவுகணைகளுடன் நேட்டோ ரயில் உக்ரைனுக்கு வந்தது. ரூமேனியாவில் இருந்து வந்த அந்த ரயில் மீது ரஷ்யா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஏவுகணைகளும், ரயிலும் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
1963: நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது. 1954: ஆர்வலர் மேதா பட்கர் பிறந்தநாள்.
1955: பாடகர் உதித் நாராயண் பிறந்தார்.
1971 – இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.
1980: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பிறந்தநாள்
1988 – உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்
தமிழகத்தில் காலை 7 மணி வரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், நாகை, கரூர், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது.
*வெற்றி என்பது எப்போதும் போரில் வெல்வதில்லை. ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதே வெற்றி. * அனைவரையும் ஏழைகளாக்குவதற்கான சிறந்த வழி, செல்வத்தின் சமத்துவத்தை வலியுறுத்துவதுதான். * இந்த உலகம் மிகவும் பாதிக்கப்படுவது கெட்டவர்களின் வன்முறையால் அல்ல. * நல்லவர்களின் மௌனத்தால். ஒரு தலைவரின் பணி யதார்த்தத்தை விவரிப்பது, பின்னர் நம்பிக்கையை அளிப்பது.
ஒருநாள் முழுவதும் பேருந்தில் பயணம் செய்வதே மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், 50 நாள்கள் தொடர்ந்து மக்கள் பேருந்து பயணம் செய்ததை நினைத்து பாருங்கள். ஆம், லண்டனில் இருந்து கொல்கத்தாவுக்கு 50 நாள்கள், 32,669 கி.மீ. பயணம் செய்து பலர் வந்துள்ளனர். இந்தப் பேருந்து போக்குவரத்து 1957இல் ஆரம்பித்து, 1976 வரை செயல்பாட்டில் இருந்தது. ரூ.1,933க்கு(1960இல்) உணவு, தங்குமிடம், போக்குவரத்து அடங்கும்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது X கணக்கை Delete செய்துள்ளார். இதுகுறித்து கருத்து பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், தனுஷ் பற்றி நடிகை நயன் வெளியிட்ட அறிக்கை பெரிய சர்ச்சை ஆனதால் அவரது ரசிகர்கள் விக்னேஷை வறுத்தெடுத்தனர். மேலும் பேட்டி ஒன்றில் தான் அஜித்திற்காக எழுதிய கதை நிராகரிக்கப்பட்டது குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கும் விமர்சனத்திற்கு உள்ளத்தால் Delete செய்திருக்கலாம் என பதிவிட்டு வருகின்றனர்.
18 வயதுக்கும் குறைந்த மனைவியுடன் உடல் உறவு வைப்பது ரேப் குற்றம் என்று மும்பை ஐகோர்ட் நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கொன்றை விசாரித்த கோர்ட், திருமணம் செய்த 18 வயதுக்கும் குறைந்த பெண்ணுடன் அவர் ஒப்புதலுடன் உறவு வைத்தாலும் அது ரேப்தான் என தீர்ப்பளித்தது. மேலும் ஏற்கெனவே அந்த வழக்கில் விதிக்கப்பட்ட 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையையும் உறுதி செய்து தீர்ப்பளித்தது.
Sorry, no posts matched your criteria.