News December 1, 2024

விழுப்புரம் விரையும் உதயநிதி!

image

மழை பாதிப்பு குறித்த ஆய்வு, மீட்புப் பணிக்காக DCM உதயநிதி, மூத்த அமைச்சர்கள் விழுப்புரம் விரைந்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல், மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், மரக்காணம், மயிலம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அதேபோல், புதுச்சேரி, கடலூரும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

News December 1, 2024

திருப்பதி மலையில் அரசியல் பிரசாரம், பேட்டிகளுக்கு தடை

image

திருப்பதி திருமலையில் அரசியல் பிரசாரம், பேட்டிகளுக்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. நயன்தாரா- விக்னேஷ் சிவன் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, MLA உள்ளிட்டோரின் ரீல்ஸ்களால் சர்ச்சை உருவானதாகவும், ஆதலால் திருமலையின் புனிதத்தை காக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.

News December 1, 2024

இது தான் ரோஹித் சர்மாவின் மகன் பெயர்

image

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது மகனுக்கு அஹான் சர்மா என்று பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி ரித்திகா இன்ஸ்டா பதிவில், டிசம்பர் மாதம் வந்துவிட்டதாகக் கூறி, கிறிஸ்துமஸ் சாண்டா கெட்டப்பில் ஃபேமிலியாக பொம்மைகள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு பொம்மையிலும் குடும்ப உறுப்பினர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நவ.15ம் தேதி இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

News December 1, 2024

தமிழர்களை சீண்டிய நீதிபதி.. கொந்தளித்த சீமான்

image

கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி இந்திரகுமார், ‘‘பிரிட்டிஷ் ஆட்சியில் பெங்களூருவில் தமிழர்கள் அடிமையாக இருந்தனர். கன்னடர்கள் அப்படி இல்லை’’ என பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க சீமான் வலியுறுத்தியுள்ளார். நீதிபதியின் பேச்சுக்கு தமிழக அரசு எதிர்வினை ஆற்றாதது ஏன்? அரசின் நிலைப்பாடு என்ன எனவும், கஸ்தூரியை பிடிக்க தனிப்படை அமைத்தது போல் நீதிபதிக்கும் அமைக்கப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News December 1, 2024

2 ஆண்டுகளில் நக்சல்வாதம் முடிவுக்கு வர வேண்டும்: மோடி

image

2 ஆண்டுகளில் நக்சல் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று டிஜிபிக்களுக்கு PM மோடி உத்தரவிட்டுள்ளார். புவனேசுவரத்தில் 59ஆவது டிஜிபிக்கள், ஐஜி-க்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய அவர், நக்சல் தீவிரவாதத்துக்கு எதிராக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், 2026க்குள் நக்சல் தீவிரவாதத்தை முழுவதும் அழிக்கும் இலக்குடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News December 1, 2024

சச்சினின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்

image

கிரிக்கெட் உலகில் முக்கிய டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இங்கிலாந்தின் ஜோ ரூட் இருக்கிறார். நேற்று நடைபெற்ற NZ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் நிகழ்த்திய சாதனை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. அதாவது, டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் அவர் மொத்தம் 1630 ரன்கள் எடுத்து முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதன்மூலம், 1625 ரன்கள் எடுத்திருந்த சச்சினின் சாதனையை ரூட் முறியடித்துள்ளார்.

News December 1, 2024

இந்த ஆண்டின் ‘மகாராஜா’ ஆன நித்திலன்..!

image

இந்த ஆண்டின் சிறந்த இயக்குநருக்கான நம்பிக்கை நட்சத்திர விருதை ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் வென்றுள்ளார். மலேசியாவில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது பெற்ற புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மகாராஜாவை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி தீர்த்த நிலையில், தற்போது சீன மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

News December 1, 2024

6 மணி நேரமாக நங்கூரமிட்டு நிற்கும் ஃபெஞ்சல் புயல்

image

புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக ஃபெஞ்சல் புயல் நகராமல் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூருக்கு 30 KM தொலைவிலும், விழுப்புரத்துக்கு 40 KM தொலைவிலும், சென்னைக்கு 120 kM தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கூறியுள்ளது.

News December 1, 2024

சென்னை மக்களே ஹேப்பியா..?

image

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் விரைவில் AC பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக சென்னை பீச் – செங்கல்பட்டு இடையேயான ரயில்களில் இணைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் 10 கி.மீ. தொலைவிற்கு ₹29, 11-15 கி.மீ.க்கு ₹37, 16-25 கி.மீ.க்கு ₹56 என கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது. மெட்ரோவில் குறைந்தபட்ச கட்டணமே ₹10, ஆனால் இதில் ₹29 என்பது அதிகபட்சம் என்று தற்போதே விமர்சனம் எழுந்துள்ளது.

News December 1, 2024

சென்னையில் மீண்டும் கனமழை

image

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பின்னரும் வலுவிழக்காமல் உள்ள நிலையில், சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், 2வது நாளாக இன்றும் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?

error: Content is protected !!