News December 2, 2024

சேற்றுப்புண்ணை சரிசெய்யும் வீட்டு வைத்தியம்

image

மழைக்காலங்களில் கால் விரல்களுக்கு நடுவே பூஞ்சை போன்ற நுண்கிருமிகளால் சேற்றுப்புண்ணை ஏற்படும். அதனை வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்ய முடியுமென சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது மஞ்சள், கல் உப்பு & வேப்பிலையுடன் சேர்த்து அரைத்து சேற்றுப்புண்ணில் இரவு தூங்கும் முன் தடவவேண்டும். காலையில் எழுந்ததும் சுடுநீரில் கால்களை கழுவி விடவும். இரண்டே நாளில் மாற்றம் தெரியும் என பரிந்துரைக்கின்றனர்.

News December 2, 2024

ராசி பலன்கள் (02-12-2024)

image

➤மேஷம் – நிம்மதி ➤ ரிஷபம் – நட்பு ➤மிதுனம் – சுகம் ➤கடகம் – ஆதாயம் ➤சிம்மம் – தாமதம் ➤கன்னி – விருப்பம் ➤துலாம் – தடங்கல் ➤விருச்சிகம் – தேர்ச்சி ➤தனுசு – வெற்றி ➤மகரம் – நன்மை ➤கும்பம் – புகழ் ➤மீனம் – பக்தி.

News December 2, 2024

பிக்பாஸ் 8: இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர்தான்

image

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து, சிவக்குமார் இன்று எலிமினேட் ஆகியுள்ளார். 8வது சீசன் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. விறுவிறுப்பாகவும், அதேநேரத்தில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்துவரும் இந்த ஷோவில், வாரம் ஒருமுறை ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவர். அந்த வகையில் இந்த வாரம் மஞ்சரி, ஜாக்குலின், அன்ஷிதா உள்பட பலர் நாமினேட் ஆகியிருந்த நிலையில் சிவா வெளியேற்றப்பட்டுள்ளார்.

News December 2, 2024

10 நாள் படுத்த படுக்கையான தீரன் அதிகாரம்-1 நாயகி

image

துறு துறு நடிகை ரகுல் ப்ரீத் சிங், தான் 10 நாள்களாக படுத்த படுக்கையாக இருந்ததாக தெரிவித்துள்ளார். உடற்பயிற்சியின் போது 80 கிலோ எடை தூக்கியதால் ரகுலுக்கு முதுகில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு, பின் தீவிரமாகி எழுந்திருக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நாள்களில், தன் அருகிலேயே இருந்து கணவர் தன்னை கவனித்துக் கொண்டதாகவும், இணையரின் தேவையை அப்போது உணர்ந்ததாகவும் ரகுல் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

News December 1, 2024

இரவு 1 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை கொட்டும்

image

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவாரூர், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லையில் லேசான மழை பெய்யக்கூடும் என MET தெரிவித்துள்ளது.

News December 1, 2024

மழைக்காலத்தில் காய்ச்சல் வராமல் தடுக்க…

image

☛நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் குடியுங்கள். ☛ஓட்டல் உணவுகளை தவிருங்கள். ☛குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் உட்கொள்வதை தவிருங்கள். ☛சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தால் சளி பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். ☛தெருவில் விற்கும் உணவுகள், நீண்ட நாள் ஆன திண்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. ☛நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை இலை போன்றவற்றில் கசாயங்களை எடுப்பது நல்லது.

News December 1, 2024

பொருளாதாரத்தின் பலன் சிலருக்கு மட்டுமே: ராகுல்

image

இந்திய பொருளாதாரத்தின் பலன்கள் ஒரு சில கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே கிடைப்பதாக, ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் GDP வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், விவசாயிகள் தொழிலாளர்கள் நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகள் என அனைத்து தரப்பினரும் பல்வேறு பொருளாதார பிரச்னைகளால் சிரமப்படுவதாக குறிப்பிட்டார்.

News December 1, 2024

புஷ்பா 2 டிக்கெட் விலை ₹ 3,000..!

image

டிச.5 தான் ரிலீஸ் தேதி என்றாலும் புஷ்பா 2 ஃபீவர் இப்போதே தொடங்கிவிட்டது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் டிக்கெட் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது. மும்பையில் ₹ 3,000, டெல்லியில் ₹ 2,400, கொல்கத்தா ₹ 1,680, பெங்களூரில் ₹ 1,400 என விலை எகிறுகிறது. இதைப் பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர், பொழுதுபோக்கு என்ற பெயரில் இப்படி சுரண்டுவது நியாயமா என்று கேட்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News December 1, 2024

சிதறடித்த புயல் மழை.. பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு

image

ஃபெஞ்சல் புயல், கனமழை காரணமாக பலியானோரின் எண்ணிக்கை தற்போது 5ஆக உயர்ந்துள்ளது. வேளச்சேரியில் சூறைக்காற்றால் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த சக்திவேல் என்பவர் மரணமடைந்தார். மண்ணடியில் ATM-ல் பணம் எடுக்க சென்ற வடமாநில இளைஞர் ஒருவர், வியாசர்பாடியைச் சேர்ந்த இசைவாணன் என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், அரக்கோணத்தை சேர்ந்த 9 வயது சிறுவனும் இன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

News December 1, 2024

JIO நெட்வொர்க் முடங்கியது

image

நாடு முழுவதும் JIO நெட்வாெர்க் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JIO சிம் பயனாளர்களால் இன்று மாலை முதல் அவுட்கோயிங் அழைப்பு மேற்கொள்ளவோ, இணையதள சேவையை பயன்படுத்தவோ முடியவில்லை எனக் கூறப்படுகிறது. உங்கள் பகுதியில் JIO நெட்வொர்க் சேவை கிடைக்கிறதா? கீழே உங்கள் கமெண்ட்ஸ் பதிவிடுங்கள்.

error: Content is protected !!