News December 2, 2024

சீமானின் பாதை வேறு; பாஜகவின் பாதை வேறு

image

சீமானின் பாதை வேறு; பாஜகவின் பாதை வேறு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய பாதையில் பயணிக்கிறார். புதிதாக அரசியலுக்கு வருபவர்களை கண்டு நாங்கள் எப்போதும் பயப்பட மாட்டோம். சினிமா மாதிரி அரசியல் களம் கிடையாது. அரசியல் களம் என்பது வேறு” என்றார்.

News December 2, 2024

ஈராண்டுக்கு பின் ‘சாம்பியன்’ பட்டம் வென்ற PV சிந்து

image

‘சூப்பர் 300’ அந்தஸ்து பெற்ற சையது மோடி பேட்மிண்டனின் இந்திய வீராங்கனை PV சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். லக்னோவில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் அவர், சீனாவின் வு லுவோவுடன் மோதினார். அபாரமாக ஆடிய சிந்து 2-0 என்ற நேர் செட் கணக்கில் லுவோவை வீழ்த்தினார். இத்தொடரில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சர்வதேச அளவில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அவர் சாம்பியன் ஆனார்.

News December 2, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால். ▶குறள் இயல்: இல்லறவியல். ▶அதிகாரம்: நடுவு நிலைமை. ▶குறள் எண்: 116 ▶குறள்: கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். ▶பொருள்: நியாயத்தை, நீதியை நிலைநாட்டும் நடுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால், அவன் கெட்டு சீரழிந்து ஒழியப் போகிறான் என காண்போர் உணர்ந்து கொள்ளலாம்.

News December 2, 2024

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி?

image

34 ஆண்டுகளுக்கு பின்பு ரஜினி – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிச.12ஆம் தேதியன்று வெளியாகும் என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. மேலும், ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர்-2 படத்தின் புரோமோ வீடியோ & கூலி படத்தின் போஸ்டர் ஆகியவை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News December 2, 2024

நாளையே கடைசி: ரயில்வேயில் 5,647 அப்ரன்டிஸ் பணியிடம்

image

வடகிழக்கு எல்லை ரயில்வேயில் காலியாக உள்ள 5,647 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் (டிச.3) நிறைவடைகிறது. Trade Apprentice பணியில் சேர விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள். வயது வரம்பு: 15-24. கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு, ITI (50% மதிப்பெண்கள்). பயிற்சியின் போது ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும். கூடுதல் தகவலுக்கு <>இந்த<<>> லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.

News December 2, 2024

ஃபெஞ்சல்: மீட்புப் பணியை விரைவுபடுத்துங்க…

image

ஃபெஞ்சல் புயல் & கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மாநில அரசின் சார்பில் உணவு வழங்குவதை தவிர, ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் செய்யப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு, உரிய இழப்பீடு & வீடுகளுக்கு நிவாரணத் தொகை தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News December 2, 2024

பாலியல் தொழிலாளர்களுக்கு பென்ஷன்!

image

மகப்பேறு விடுப்பு, ஓய்வூதியம், மெடிக்கல் லீவ், சுகாதார காப்பீடுகள் என மற்ற துறை ஊழியர்களுக்கு கிடைக்கும் உரிமைகளை பாலியல் தொழிலாளர்களுக்கும் அளித்து முதல் நாடாக பெல்ஜியம் மாறியுள்ளது. கடந்த மே மாதத்தில் செக்ஸ் வொர்க்கர்ஸுக்கான சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2022இல் பெல்ஜியத்தில் பாலியல் தொழில் குற்றமற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

News December 2, 2024

குகேஷ்-லிரென் மீண்டும் ‘டிரா’

image

சிங்கப்பூரில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 6வது சுற்றில், இந்தியாவின் குகேஷ், சீனாவின் டிங் லிரென் மோதினர். இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பான இப்போட்டி, 46ஆவது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. இது, இத்தொடரில் தொடர்ச்சியாக பதிவான 3ஆவது ‘டிரா’. 6 சுற்றுகளின் முடிவில், ஒரு வெற்றி, 4 ‘டிரா’, ஒரு தோல்வி என, இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.

News December 2, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச. 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email: way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News December 2, 2024

இந்தியாவில் FDI முதலீடு 45% அதிகரிப்பு!

image

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு (FDI) ஆண்டுக்கு ஆண்டு 45% உயர்ந்துள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டில் ஏப் – செப்., காலாண்டில் 29.79 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கணினி, டெலிகாம், பார்மா, வன்பொருள், சேவைகள் துறைகளில் முதலீடு அதிகரித்துள்ளது. குறிப்பாக மரபுசாரா எரிசக்தித் துறையில் FDI 200 கோடி டாலராக உள்ளது. இந்த காலகட்டத்தில், அமெரிக்காவில் இருந்து ($2.57 பில்லியன்) FDI முதலீடு வரத்து அதிகரித்தது.

error: Content is protected !!