India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நவம்பர் 30ஆம் தேதி இரவு கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து கள்ளக்குறிச்சிக்கும் சங்கராபுரத்துக்கும் இடையே மையம் கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக தி.மலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெட்ரோல் விற்பனை கடந்த ஆண்டு நவம்பரில் 28.6 லட்சம் டன்னாக இருந்த நிலையில், நடப்பாண்டில் 8.30% அதிகரித்து 31 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதேபோல, டீசல் விற்பனை 5.90% உயர்ந்து, 72 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது அக்டோபரின் 65 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் 11% உயர்ந்துள்ளது.
ஃபெஞ்சல் புயலால் நவம்பர் 30ஆம் தேதி விழுப்புரம், புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பை கண்டிருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 24 செ.மீ. மழையும் திருவண்ணாமலையில் 22 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும், அங்கு மழை தொடர்ந்து கொண்டிருப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
சக்திக்கு ஆடி வெள்ளி; சிவனுக்கு கார்த்திகை திங்கள் என்பது ஆன்றோர் வாக்கு. கார்த்திகை சோமவார நாட்களில் (திங்கள்கிழமை) அதிகாலையிலேயே நீராடி, சிவாஷ்டகம் பாடி, திருநீறிட்டு சிவனுக்கு விரதமிருந்து, மாலையில் தஞ்சையை அடுத்துள்ள திருப்பனந்தாள் அருணஜதேசுவரர் கோயிலுக்கு சென்று சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டு ஈசனுக்கு வில்வ இலை மாலை சாற்றி வழிபட்டால் வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும் என்பது ஐதீகம்.
விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் ரயில் பாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் 5 ரயில்களின் சேவைகள் ரத்தாவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில், மதுரை – சென்னை வைகை விரைவு ரயில், காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில், சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில், சென்னை – மதுரை தேஜஸ் ரயில், விழுப்புரம் – தாம்பரம் விரைவு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து மேற்கு மாவட்டங்களை நோக்கி நகர்கிறது. இதனால், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் கோவையில் கல்வி நிலையங்கள் செயல்படவுள்ளன. <<14765603>>விடுமுறை மாவட்டங்களை இங்கு பார்க்கலாம்.<<>>
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்துள்ளது. ஏற்கெனவே பெய்த கன மழையால் பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில், மறு தேர்வு தேதி அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பகல் இரவு ஆட்டமாக நடைபெறவுள்ள 2-வது BGT போட்டி மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. முதல் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்திய அணி, எந்தெந்த மாற்றங்களை செய்யும் என்பதே கேள்விக்குறி. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளே வருவதால், டாப் ஆர்டர் நிச்சயமாக மாறும். அதே போல, கில் வலைப்பயிற்சிக்கு திரும்பி விட்டதால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். டீமில் யார் யார் இருக்க போறாங்க…நீங்க சொல்லுங்க?
திருவண்ணாமலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகரில் பாறை உருண்டு மண் சரிந்து வீட்டில் சிக்கியவர்கள் குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அந்த வீட்டில் வசித்துவந்த 7 பேரும் வீட்டின் உள்ளே சிக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் ஏராளமானோர் திரண்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தின் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்தின் பள்ளிக் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் இன்று கல்வி நிலையங்கள் செயல்படாது.
Sorry, no posts matched your criteria.