India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விமல் நடித்துள்ள ‘சார்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ் வெங்கட் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கல்வியின் முக்கியத்துவத்தையும், கல்வி அனைவருக்கும் சமமான ஒன்று என்றும் ஆழமாக இப்படம் கூறியிருந்தது. அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படம் வரும் 6ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த சூழலில், ‘லக்கி பாஸ்கர்’ படத்தை பார்த்ததாகவும், படம் அருமையாக இருப்பதாகவும் உதயநிதி பாராட்டியுள்ளதாக ஒரு பிரபல தொலைக்காட்சியின் கார்டு பரவியது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில், அது போலியான விளம்பர கார்டு என்பது உறுதி செய்யப்பட்டது.
கனமழை, வரத்துக் குறைவு மற்றும் ஐயப்ப பக்தர்களின் விரத காலம் காரணமாக தமிழகம் முழுவதும் காய்கறிகள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் (கிலோவில்): பெரிய வெங்காயம் – ₹ 90, பீன்ஸ் – ₹ 110, கத்தரிக்காய் – ₹ 100, முருங்கைக்காய் – ₹ 160, கேரட் – ₹ 100, பச்சை மிளகாய் – ₹ 75, தக்காளி – ₹ 70, பூண்டு – ₹ 450, உருளைக் கிழங்கு – ₹ 80-க்கு விற்பனையாகி வருகிறது.
பஞ்சாப் முன்னாள் CM சுக்பீர் பாதலுக்கு பாத்ரூமை சுத்தம் செய்யும் தண்டனையை சீக்கிய மத உயரிய அமைப்பு விதித்துள்ளது. 2015இல் அகாலிதள ஆட்சிக்காலத்தில் சீக்கிய புனித புத்தகம் அவமதிக்கப்பட்ட வழக்கை அகால் தத் விசாரித்தது. அப்போது பாதல் மன்னிப்பு கேட்டதையடுத்து அவர், முன்னாள் அமைச்சரவை சகாக்களை நாளை மதியம் 12- 1 மணிவரை சுத்தம் செய்ய உத்தரவிட்டது. பிரகாஷ் சிங் பாதலுக்கான உயரிய பட்டத்தையும் பறித்தது.
ஃபெங்கல் புயல் காரணமாக வட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. சென்னை – திருச்சி ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சில சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அவர்கள் திருவண்ணாமலை வழியாக திண்டிவனம் புறவழிச்சாலையில் சென்று தேசிய நெடுஞ்சாலையை வந்தடையலாம்.
இபிஎஸ் குற்றச்சாட்டுகளை தான் மதிப்பதில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பதிலடி தந்துள்ள இபிஎஸ், முதல்வர் ஸ்டாலின் அதிகார போதையில் பேசுவதாகவும், ஆட்சி அதிகாரம் அவரது கண்ணை மறைப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், நாட்டு மக்களை பற்றி முதல்வருக்கு கவலையில்லை என சாடிய அவர், வீட்டு மக்களுக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்பதுதான் அவரது கவலை என்றார்.
தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, காஞ்சி, தி.மலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.
கனமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் தற்போது வரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை தொடர்ந்து, திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பிரேமலதா விமர்சித்துள்ளார். எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்போம் என முதல்வர் கூறிய நிலையில், மக்கள் இன்று நடுரோட்டில் நிற்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். 2 நாள்கள் மழையையே சமாளிக்க முடியாத இந்த அரசு, மக்களை காப்பாற்றி விட்டோம் என கூறுவது அபத்தமானது எனவும், முதல்வர் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,யில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை., நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.