India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தி.மலை மண்சரிவில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டது நெஞ்சை பதற வைப்பதாக தவெக தலைவர் விஜய் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள அவர், புயல் மழைக்காலங்களில் பேரிடர் மீட்புப் படைகளை அரசு தயார் நிலையில் வைத்திருக்கவும், மலை அடிவாரங்கள், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலையில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். கணவன், மனைவி, அவர்களின் 2 குழந்தைகளும், கணவனின் அண்ணன் குழந்தைகள் 3 பேரும் இந்த கோர சம்பவத்தில் பலியாகினர். அவர்களின் உடல்கள் இன்று மாலை மீட்கப்பட்டன. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ₹ 5 லட்சம் நிவாரணத்தை துணை முதல்வர் உதயநிதி அறிவித்துள்ளார்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பிரதமர் மோடி பார்த்தார். நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள பாலயோகி அரங்கில் திரையிடப்பட்ட படத்தை அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்பிக்களுடன் சேர்ந்து, பிரதமர் பார்த்தார். இந்த திரைப்படத்திற்கு உ.பி, ஒடிசா, ம.பி உள்ளிட்ட மாநிலங்கள் வரி விலக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். வானிலை மையத்தின் முன்னறிவிப்பு சரியாக இருந்ததாக CM ஸ்டாலின் ஒத்துக்கொண்ட நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏன் முன்கூட்டியே செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு என்றாலே பிடிக்காது என்பதால், வடமாவட்டங்களை முதல்வர் அலட்சியப்படுத்தியதாகவும் சாடியுள்ளார்.
கனமழை எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விழுப்புரம், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தி.மலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேபாள வீரர் யுவராஜ் கத்ரி, விக்கெட் எடுத்ததை விநோதமாக கொண்டாடி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசிய அவர், முகமது ஷிகாப்பை கிளீன் போல்டாக்கினார். இதனையடுத்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவர், ஷூவை கழட்டி போன் செய்வது போல் சைகை செய்தார். 2வது விக்கெட்டை கொண்டாட முயன்றபோது, அவர் கால் இடறி கீழே விழுந்தார்.
கனமழை மற்றும் வெள்ளத்தால் விழுப்புரம், தி.மலை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில், புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ₹5000 வழங்குவதுபோல், தமிழ்நாட்டிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹5000 வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தின் 14 மாவட்டங்களை இதுவரை இல்லாத வகையில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. புயலால் ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.11 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எனவே, சேதத்தின் வீரியத்தை கருதி, ₹ 2000 கோடியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்றின் மகத்தான பவுலர்களில் ஒருவராக பும்ரா இருப்பார் என டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். மற்ற பவுலர்களை காட்டிலும் தனித்துவமாக இருப்பதாகவும், அவரை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு பேட்ஸ்மேனும் புதிய வழியை கண்டறிய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பும்ரா பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடினேன் என ஓய்வுக்கு பிறகு, பேரக்குழந்தைகளிடம் கூறுவேன் எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களில், EB கட்டணம் செலுத்த TN அரசு கால அவகாசம் அளித்துள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தி.மலை மற்றும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட மக்கள், மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் டிச.10ஆம் தேதிவரை செலுத்தலாம் என அறிவித்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.