India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில் புறப்படுவதற்கு 2 மணிநேரம் அல்ல, அதற்கு மேல் தாமதம் ஏற்பட்டால் பயணிகளுக்கு IRCTC இலவசமாக உணவு வழங்குகிறது. தற்போது ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ EXP போன்ற பிரீமியம் ரயில்களில் இச்சிறப்பு சேவை கிடைக்கிறது. டீ, காபி, பிஸ்கட், ரொட்டி, மதிய, இரவு உணவுகளை ஆர்டர் செய்யலாம். ரயில் ஏறுவதற்கு 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால், டிக்கெட்டை ரத்து செய்து பிடித்தமின்றி மொத்த கட்டணத்தையும் ரீபண்ட் பெறலாம்.
2 தெலுங்கு மாநிலங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத், ஹனுமகொண்டா, கம்மம் மற்றும் ஆந்திராவின் விஜயவாடா, ஜக்கையாபேட் பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் வீடு மற்றும் குடியிருப்புகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். சரியாக காலை 7.27 மணிக்கு 5.3 ரிக்டர் அளவில் அதிர்வு ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.
வரத்து குறைவு காரணமாக தக்காளி, பீன்ஸ், கேரட், முருங்கை உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளி விலை கிலோ ₹60ஆக விற்கப்படுகிறது. பீன்ஸ் மற்றும் கேரட் கிலோ ₹80 வரையிலும், முருங்கை கிலோ ₹350 வரையிலும் உயர்ந்துள்ளது. இதனால், ஒரு முருங்கையின் விலை ₹40 வரை விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ₹80 வரை விற்பனையாகிறது.
விடை தெரியாத முடிவாக இருந்த MH முதல்வர் நாற்காலி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது. திரை மறைவில் ஷிண்டே, பவாருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இருவரும் ஒத்துப்போகியுள்ளதால் பாஜகவின் ரூட்டு கிளியராகியுள்ளது. இதனால் பட்னவிஸ் முதல்வராகப் பதவியேற்பது குறித்த அறிவிப்பு இன்று மாலைக்கு வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஷிண்டேவும், அஜித் பவாரும் DCMஆக உள்ளனர்.
செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வங்கிகளுக்கு RBI உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், சில வங்கிகளில் மொத்த டெபாசிட்டை விட செயல்படாத A/C-களில் உள்ள டெபாசிட் தொகை அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல்களை புதுப்பிக்காததால் முடக்கப்பட்ட A/C-களை தனியாக பிரித்து, அவர்களுக்கு நலத்திட்ட நிதி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பண்டரிபாய், காஞ்சனா வரிசையில் துறவறம் பூண்ட நடிகைகள் பட்டியலில் தற்போது ‘பூனைக்கண்’ புவனேஸ்வரியும் சேர்ந்திருக்கிறார். பாய்ஸ், தலைநகரம் போன்ற பல படங்களில் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்ட இவர், தற்போது சினிமாவில் இருந்து விலகி ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு துறவு பூண்டுள்ளார். கோயில் போன்ற வழிபாட்டு தலங்களுக்கு முன்பாக ஏழைகளுக்கு உணவும் வழங்கி வரும் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. தொடர் விடுமுறை காரணமாக பல பள்ளிகளில் பாடத்திட்டத்தை முடிக்க போதிய அவகாசம் கிடைக்கவில்லை. திட்டமிட்டபடி வரும் 9ஆம் தேதி அரையாண்டுத் தேர்வுகளை தொடங்கினால் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதை கருத்தில் கொண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாததால், கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார் ஷா. இது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், பிரித்வி ஷாக்கு அளித்துள்ள மெசெஜில் விளையாட்டின் சில சிறந்த கதைகள் ‘Comeback’ பற்றியது என பதிவிட்டுள்ளார். சூப்பர் ஃபிட்னஸ் அடையும் வரை கடினமாக உழைக்க அவரது நல விரும்பிகள் பரிந்துரைக்கவும், திறமை உள்ளவன் தொழிலை இழக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் 7 பேர் உயிரிழந்த சோகத்தின் வடு இன்னும் நமது மனங்களை விட்டு அகலவில்லை. இந்நிலையில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 64 அடி உயர தங்க கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதனையடுத்து, வரும் 13ஆம் தேதி காலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றி வழிபாடு செய்யப்படவுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழக இல்லங்களில் அனைவருக்கும் பரிச்சயமான ‘நேத்ரன்’ நேற்று உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் புற்றுநோயால் அவதியுற்று வருவதாக அவரது மகள் அபிநயா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், மனைவியையும் இரண்டு மகள்களையும் தவிக்கவிட்டு நேத்ரனின் உயிர் நேற்று பிரிந்தது. இதனால், அவரது குடும்பம் மட்டுமல்லாமல் சின்னத்திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.