News December 4, 2024

EXAM ஹாலுக்குள் செல்போனுக்குத் தடை: TNPSC

image

TNPSC குரூப்-1 மெயின் தேர்வுகள் டிச. 10-13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு TNPSC அறிவுரை வெளியிட்டுள்ளது. தேர்வறைக்குள் செல், பேஜர், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச், மெமரி பவர் காெண்ட வாட்ச்-மோதிரம், ப்ளூடூத், புத்தகம், நோட்டுகள், கைடுகள் கொண்டு வரக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. தேர்வறைக்குள் பிறரிடம் பேசவோ, பிறரை பார்த்து எழுதவோ கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

News December 4, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

1) தீர்க்க ரேகைகளின் மொத்த எண்ணிக்கை – 360 2) பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க பயன்படும் கருவி – Lactometer 3) இந்தியாவின் முதல் பெண் பல் மருத்துவர் – விம்லா சூட் 4) நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் – மீனாட்சி சுந்தரனார் 5) BDS – Bachelor of Dental Surgery 6) RBI வங்கி 1935ஆம் ஆண்டு நிறுவப்பட்டது 7) பெட்ரோலியத்தை சிதைக்கும் பாக்டீரியா – சூடோமோனாஸ்.

News December 4, 2024

கோவையில் ஹெச்.ராஜா கைது

image

கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச இந்துக்களுக்கு பாதுகாப்பு தேவை என்று போராடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில் இந்துத்துவ அமைப்புகள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், அதனை மீறி ஆர்ப்பாட்டம் செய்த ஹெச்.ராஜா கைது செய்யப்பட்டார். இதேபோல், தமிழகத்தில் பல இடங்களில் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

News December 4, 2024

தனியார் பால் விலை லிட்டருக்கு ₹2 உயர்வு

image

தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை லிட்டருக்கு ₹2 உயர்ந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு மத்தியில் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப் பொருள்கள் விலையேற்றம் போன்ற காரணங்களை காட்டி ஆரோக்யா நிறுவனம், கடந்த மாதம் பால், தயிர் விலையை லிட்டருக்கு ₹2 உயர்த்தியது. இந்நிலையில், டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளன.

News December 4, 2024

TVK தலைவர் விஜயின் செயலை வரவேற்ற சீமான்

image

அரசின் நடவடிக்கைகள் வெள்ளத்தில் ஆழமாக மூழ்கிவிட்டதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில் நிருபர்களிடம் பேசிய அவர், விஜயால் களத்தில் நிற்க முடியாது அவர் சென்றால் பாதிக்கப்பட்டவர்களை விட அவரை காண ரசிகர்கள் கூட்டம் கூடும் அதனால் பிரச்னை ஏற்படும் என்பதை தவிர்க்கவே அவர் செல்லவில்லை என்றார். விஜய் சிலரை அழைத்து உதவி செய்தார். ஆனால் திமுக உதயநிதி எழுச்சி விழா கொண்டாடுகிறது என சாடியுள்ளார்.

News December 4, 2024

CBSEஇன் 2 வகை பாடங்கள் என்றால் என்ன?

image

<<14786164>>CBSE<<>>இன் “STANDARD”, “BASIC” பாடம் இடையேயான வித்தியாசத்தைத் தெரிந்து கொள்வோம். சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்காக “STANDARD”, பாஸ் ஆனால் போதும் என சுமாராக படிப்போருக்கு “BASIC” என்று கணிதத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. STANDARD திட்டமும், அதன் வினாத்தாள் கேள்வியும் கடினமாக இருக்கும். BASICஇல் பாடமும், அதன் வினாத்தாள் கேள்வியும் எளிமையாக இருக்கும்.

News December 4, 2024

எனக்கு கொலை மிரட்டல் வருது: அர்ச்சனா

image

தனக்கு கொலை மிரட்டல் வருவதாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா குற்றம் சாட்டியுள்ளார். தனது X பக்கத்தில் அவர், “வாழ்க்கை என்பது கிரிக்கெட் மாதிரி. கடந்த கேமில் நீங்கள் விளையாடியிருந்தாலும் இப்போது உங்களுக்கு பிடித்த அணியை உற்சாகப்படுத்தலாம். ஆனால், ஆசிட் வீசுவதாக மிரட்டல் வருகிறது” எனப் பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அருணுக்கு அர்ச்சனா ஆதரவு தெரிவித்திருந்தார்.

News December 4, 2024

கோட்டை விடுகிறாரா விஜய்?

image

வெள்ளப்பெருக்கால் விழுப்புரம் மாவட்டம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. விஜய்யின் முதல் அரசியல் மாநாடு நடந்த விக்கிரவாண்டியை சுற்றியுள்ள பகுதிகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த நேரத்தில் விஜய் அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு துணையாக நின்று, அவர்களது ஆதரவைப் பெறலாம். ஆனால், நடிகர் என்ற இமேஜ் அவரை களத்தில் இறங்க விடாமல் தயங்க வைப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News December 4, 2024

12ஆம் தேதி நாகை மாவட்டத்திற்கு விடுமுறை

image

நாகை பெரிய தர்காவின் கந்தூரி விழாவையொட்டி வரும் 12ஆம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் சந்தனக்கூடு திருவிழா நடைபெறவுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 21ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

News December 4, 2024

தொப்பியின் விலை ₹2.63 கோடி!

image

ஆஸி. ஜாம்பவான் டான் பிராட்மேன் 1947-48 ஆண்டில் அணிந்திருந்த தொப்பி சுமார் ₹2.63 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. சிட்னி நகரில் நடைபெற்ற ஏலத்தில் ஆஸ்திரேலியர் ஒருவர் வாங்கினார். முதல் முறை இந்திய அணி ஆஸி.யில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது, பிராட்மேன் அணிந்திருந்த தொப்பி இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் அவர், 6 இன்னிங்ஸில் 178.75 சராசரியில் 715 ரன்களை விளாச, தொடரை 4-0 என ஆஸி. வென்றது.

error: Content is protected !!