India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சினிமாவில் சண்டை போடுவதும் கூட ஒரு ஸ்கிரிப்ட் தான் போல. தொடர்ந்து ஒன்றாக படங்களில் பணியாற்றி வந்த பா.ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் திடீரென பிரிந்தார்கள். என்ன காரணமென ஒரு தகவலும் இல்லை. இடையில் பா.ரஞ்சித் “தங்கலான்” படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் பணியாற்றினார். இப்போது சமாதானம் ஆகிவிட்டது போல. இனி பா.ரஞ்சித் படங்களுக்கு நானே இசையமைப்பேன், இது என் கட்டளை என உரிமையுடன் சந்தோஷ் நாராயணன் பேசியிருக்கிறார்.
சேமிப்புக் கணக்கு வைத்திருப்போரை KYC அப்டேட் செய்யும்படி வங்கிகள் வலியுறுத்தி வருகின்றன. அதுபோல செய்யாதோரின் கணக்குகள் முடக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுகின்றன. இந்நிலையில் RBI பிறப்பித்த புதிய உத்தரவில், KYC அப்டேட்டுக்காக கணக்குகளை முடக்கக் கூடாது. பணம் முடங்குவதால் அக்கணக்குகளை செயலுக்கு கொண்டு வர வேண்டும். KYC முறையை எளிமைப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.
PSLV C-59 ராக்கெட் லான்ச் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சூரியனின் மேற்புற பகுதியான கரோனாவை ஆய்வு செய்ய ஐரோப்பாவின் PROBA-3 சாட்டிலைட்டுடன் PSLV C-59 இன்று மாலை 4.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. PROBA-3 சாட்டிலைட்டில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், PSLV C-59 ராக்கெட் ஏவுதலை நாளை மாலை 4.12 மணிக்கு இஸ்ரோ (ISRO) ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவி குழுவினர் இணைந்து ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு தொகை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் வரை பெறலாம் எனவும் கூறியுள்ளது. ஆதார், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் ஆவணங்களுடன் www.cmchistn.com இணையதளம், கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.
தனது அறக்கட்டளையின் இயக்குநராக மகள் சாரா டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார். லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மற்றும் பொது சுகாதார ஊட்டச்சத்தில் சாரா டெண்டுல்கர் முதுகலைப் பட்டம் பெற்றவர். இது குறித்த சச்சினின் பதிவில், குழந்தையுடன் சாரா இருக்கும் படத்தை இணைத்து விளையாட்டு, சுகாதாரம், கல்வி மூலம் இந்தியாவை வலிமையாக்க சாரா பாடுபடுகிறார் எனப் பதிவிட்டுள்ளார்.
TNPSC குரூப்-1 மெயின் தேர்வுகள் டிச. 10-13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு TNPSC அறிவுரை வெளியிட்டுள்ளது. தேர்வறைக்குள் செல், பேஜர், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச், மெமரி பவர் காெண்ட வாட்ச்-மோதிரம், ப்ளூடூத், புத்தகம், நோட்டுகள், கைடுகள் கொண்டு வரக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. தேர்வறைக்குள் பிறரிடம் பேசவோ, பிறரை பார்த்து எழுதவோ கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
1) தீர்க்க ரேகைகளின் மொத்த எண்ணிக்கை – 360 2) பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க பயன்படும் கருவி – Lactometer 3) இந்தியாவின் முதல் பெண் பல் மருத்துவர் – விம்லா சூட் 4) நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் – மீனாட்சி சுந்தரனார் 5) BDS – Bachelor of Dental Surgery 6) RBI வங்கி 1935ஆம் ஆண்டு நிறுவப்பட்டது 7) பெட்ரோலியத்தை சிதைக்கும் பாக்டீரியா – சூடோமோனாஸ்.
கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச இந்துக்களுக்கு பாதுகாப்பு தேவை என்று போராடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில் இந்துத்துவ அமைப்புகள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், அதனை மீறி ஆர்ப்பாட்டம் செய்த ஹெச்.ராஜா கைது செய்யப்பட்டார். இதேபோல், தமிழகத்தில் பல இடங்களில் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை லிட்டருக்கு ₹2 உயர்ந்துள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு மத்தியில் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப் பொருள்கள் விலையேற்றம் போன்ற காரணங்களை காட்டி ஆரோக்யா நிறுவனம், கடந்த மாதம் பால், தயிர் விலையை லிட்டருக்கு ₹2 உயர்த்தியது. இந்நிலையில், டோட்லா, ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளன.
Sorry, no posts matched your criteria.