India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துணை ராணுவப்படைகளில் இதுவரை 730 வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாகவும், 55,000க்கும் அதிகமானோர் ராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாகவும், மாநிலங்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சொந்த காரணங்களுக்காகவே பெரும்பாலானோர் இந்த முடிவை எடுத்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களில் 80% பேர், லீவ் முடிந்து பணிக்கு திரும்பியதும் இத்தகைய சோக முடிவை எடுத்ததாகவும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் நாளை பொறுப்பேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வருக்கான ரேஸில் ஷிண்டே – ஃபட்னவிஸ் இடையே கடும் போட்டி இருந்து வந்த நிலையில், துணை முதல்வராக ஷிண்டே ஒப்புக் கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஷிண்டே கேட்ட துணை முதல்வர் பதவி மற்றும் உள்துறை அமைச்சகத்தை ஒதுக்க, ஃபட்னவிஸ் OK சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.
இந்திய அணியை சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த குழுவாகப் பார்ப்பதாக ஆஸி.வீரர் நாதன் லியோன் புகழ்ந்துள்ளார். கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு என்ற அவர், இந்திய அணியில் அது சிறப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 2ஆவது டெஸ்டில் எந்த ஒரு தனிப்பட்ட வீரர் மீதும் கவனம் செலுத்தாமல், இந்திய அணியை வெல்ல வேண்டும் என்ற இலக்கோடு விளையாட உள்ளதாகவும், நிச்சயம் தாங்கள் வெற்றி பெறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாக சைதன்யா – சோபிதா துலிபாலா திருமணம் பிரமாண்டமாக இன்று நடந்து முடிந்தது. ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மண்டபத்தில் ANR-இன் சிலை முன் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமண விழாவின் போது, மணமக்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1983ல் வாட்சில் டிவி பார்க்கும் வசதி இருந்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா? SEIKO TV வாட்ச் அப்போதே Seiko T001 என்ற பெயரில் வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், எங்கிருந்து வேண்டுமானாலும் டிவி பார்க்கலாம். இந்த வாட்ச் வெளியான போது உலகின் சிறிய டிவி என கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது. அப்போது இதன் விலை $400. இந்த வாட்ச் 1983ல் வெளியான ஜேம்ஸ் பாண்ட் படமான Octopussy படத்தில் இடம் பெற்றது.
கோடநாடு கொலை சம்பவத்தில் தன்னை தொடர்புப்படுத்தி பேசிய பத்திரிகையாளர் மேத்யூவுக்கு எதிராக ₹ 1 கோடி மானநஷ்ட வழக்கை இபிஎஸ் தொடர்ந்திருந்தார். இதையடுத்து, மேத்யூ தாக்கல் செய்த பதில் மனுவிலும் இபிஎஸ்-க்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. இதற்கு இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேத்யூ தனது பதில் மனுவில் கூறிய கருத்துகளை திரும்ப பெறுவாரா என ஐகோர்ட் விளக்கம் கேட்டுள்ளது.
சச்சின் 2010இல் 14 டெஸ்டுகளில் 1,562 ரன்கள் சேர்த்துள்ளார். இதுவே இந்திய அணி வீரர் ஓராண்டில் டெஸ்டுகளில் குவித்த அதிகபட்ச ரன் ஆகும். அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் கலக்கி வரும் ஜெய்ஸ்வால் இந்தாண்டில் 12 டெஸ்டுகளில் 1,280 ரன்கள் எடுத்துள்ளார். ஆஸி தொடரில் அவர் மேலும் 283 ரன் சேர்த்தால், சச்சின் சாதனையை தகர்க்க முடியும். அவர் சச்சின் சாதனையை முறியடிப்பாரா? உங்கள் கமெண்ட்சை கீழே பதிவிடுங்க.
தி.மலை மாவட்டம் ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதற்கிடையில், விழுப்புரம், கடலூர், காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, விருதுநகர், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வெள்ளம் பாதித்த மற்ற மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை (டிச.05) செயல்படும். மாணவர்கள், ஆசிரியர்கள் வழக்கம்போல் கல்வி நிலையங்களுக்கு வர வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் நாளை வெளியாகும் புஷ்பா- 2 படத்துக்கான எதிர்பார்ப்பு கட்டுக்கடங்காம எகிறுது. இந்த படத்துக்கான முன்பதிவு தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5 கோடியை தொட்டுள்ளது. முதல் நாள் வசூல் ரூ.8 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரெண்ட் தொடர்ந்தால் முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலை அசால்ட்டாக தூக்கிவிடுமாம் புஷ்பா 2.
Sorry, no posts matched your criteria.