News December 4, 2024

தினமும் 777 பேருக்கு நாய் கடி!

image

ஒடிசாவில் கடந்த 22 மாதங்களில் நாள் ஒன்றுக்கு 777 பேரை நாய்கள் கடித்துள்ளன. ஜனவரி 2023 முதல் அக்டோபர் 2024 வரை 5 லட்சத்திற்கும் அதிகமான நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2023இல் 2,59,107 நாய் கடி சம்பவங்கள் பதிவான நிலையில், 2024 ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,43,565 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் காரணமாக தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதில் அம்மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறதாம்.

News December 4, 2024

GOOD NEWS: 1 லட்சம் பேருக்கு விரைவில் வேலை

image

மத்திய துணை ராணுவப் படைகளில் 1,00,204 பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய் தெரிவித்துள்ளார். CRPF-33,730, CISF-31,782, BSF-12,808, IDBP-9,861, SSB-8,646 மற்றும் அசாம் ரைஃபிள்ஸில் 3,377 காலியிடங்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். UPSC, SSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் மூலம் இப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம்: திருச்சி சிவா

image

இந்தி ஆதிக்கத்தை எப்போதும் எதிர்ப்போம் என திமுக மாநிலங்களவை MP திருச்சி சிவா கூறியுள்ளார். தன்னை தமிழகத்தில் இந்தி படிக்க விடவில்லை என்ற நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், எந்த மொழியை கற்கவும் திமுக தடையாக இருந்ததில்லை என்றார். ஒரு மொழி மீது மற்ற மொழி ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு எனவும், அதை தொடர்ந்து பாதுகாக்க திமுக பாடுபடும் என்றும் தெரிவித்தார்.

News December 4, 2024

புரோ கபடி லீக்: உ.பி.யோத்தாஸ் வெற்றி

image

புரோ கபடி லீக் தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை உ.பி.யோத்தாஸ் வீழ்த்தியுள்ளது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் உ.பி.யோத்தாஸ் அணி சிறப்பாக விளையாடியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 36-33 என்ற புள்ளிகள் கணக்கில் அந்த அணி வென்றது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஹரியானா அணி 61 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பாட்னா, மும்பை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

News December 4, 2024

UPI பயனாளர்களுக்கு வேற லெவல் குட்நியூஸ்..!

image

இன்டர்நெட் இல்லாத போதிலும் செல்போன் மூலமாக டிஜிட்டல் பரிமாற்றம் செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சேவையே UPI LITE. தற்போது அதில் முக்கிய மாற்றம் ஒன்றை RBI கொண்டு வந்துள்ளது. இதுவரை UPI LITE-ஐ பயன்படுத்துவோரின் wallet லிமிட் ₹2,000ஆக இருந்த நிலையில், தற்போது அது ₹5,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ஒரு பரிமாற்றத்திற்கான லிமிட் ₹500-இல் இருந்து ₹1,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

News December 4, 2024

வினேஷ் போகத்தை விடுங்க.. இந்த 2 பேர் யார் தெரியுமா?

image

BBCயின் 2024 ஆம் ஆண்டிற்கான உலகளவில் மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் வினேஷ் போகத், பூஜா ஷர்மா, அருணா ராய் ஆகிய 3 இந்திய பெண்கள் இடம்பிடித்துள்ளனர். வினேஷ் போகத் பற்றி நமக்கு தெரியும். மீதமுள்ள 2 பெண்கள் யார் தெரியுமா? இதுவரை 4,000 அநாதை பிணங்களுக்கு இறுதிச்சடங்கு செய்தவர் பூஜா. தனது அரசு வேலையை உதறிவிட்டு ஏழை மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார் அருணா.

News December 4, 2024

‘Bigg Boss தமிழ் ‘ அசோசியேட் டைரக்டர் தற்கொலை!

image

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் சீசன் 8’ நிகழ்ச்சியின் இணை இயக்குநர் ஸ்ரீதரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், தனது முடிவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் அவர் கடிதம் எழுதியுள்ளார். எந்த துறையாக இருந்தாலும் எடுத்ததுமே வெற்றி கிடைக்காது. மன உறுதியும், கடின உழைப்பும் இருந்தால் எந்த துறையிலும் கோலோச்சலாம். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.

News December 4, 2024

டார்ச் லைட் சிகிச்சை: திமுக அரசை விமர்சித்த இபிஎஸ்

image

மானாமதுரை அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் டாக்டர்கள் இன்றி ஊழியர்களே சிகிச்சை அளித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை வெளியிட்ட இபிஎஸ், மருத்துவத் துறையை திமுக அரசு அதள பாதாளத்தில் தள்ளியிருப்பதாக சாடினார். மேலும், இத்துறையின் அமைச்சரோ தனக்கொரு துறை இருப்பதையே மறந்துவிட்டு, வாரிசுக்கு பிறந்தநாள் விழா எடுப்பதில் மட்டுமே முனைப்பாக இருப்பதாகவும் விமர்சித்தார்.

News December 4, 2024

DANGER: இந்த நம்பரில் இருந்து CALL வருதா..?

image

சாதாரண செல்போன் கால்கள் மூலமாகவே மிகப்பெரிய மோசடி அரங்கேறி வருவதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். அதன்படி, +94777455913, +37127913091, +56322553736 என்ற நம்பர்களில் இருந்து கால்கள் வந்து கட் ஆகிவிடும். பின்னர், நாம் அந்த நம்பர்களை திரும்ப அழைத்தால், கம்ப்யூட்டர் வாய்ஸ் #90, #09 நம்பர்களை டயல் செய்ய சொல்லும். அவ்வாறு செய்தால் நம் வங்கிக்கணக்கு விவரங்கள் திருடப்பட்டு விடும். SHARE IT.

News December 4, 2024

அதிர்ச்சித்தகவல்: ராணுவ வீரர்களுக்கா இந்த நிலை?

image

துணை ராணுவப்படைகளில் இதுவரை 730 வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாகவும், 55,000க்கும் அதிகமானோர் ராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாகவும், மாநிலங்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சொந்த காரணங்களுக்காகவே பெரும்பாலானோர் இந்த முடிவை எடுத்துள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களில் 80% பேர், லீவ் முடிந்து பணிக்கு திரும்பியதும் இத்தகைய சோக முடிவை எடுத்ததாகவும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!