News December 5, 2024

மோதுவோம் வா.. திருச்சி SPக்கு சீமான் அழைப்பு

image

திருச்சி SP வருண்குமார், நாதகவை பிரிவினைவாத இயக்கம் என அண்மையில் பேசியிருந்தார். ஏற்கெனவே சீமானுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி பிறகு தணிந்திருந்தது. இந்த நிலையில், இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய சீமான், வருண்குமாருடன் தாம் மோத தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், நேருக்கு நேர் மோதுவோம் வா என்றும் வருண்குமாருக்கு சீமான் அழைப்பு விடுத்தார்.

News December 5, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000.. டோக்கன் விநியோகம்

image

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், அந்த நிவாரணத் தொகையை பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் விநியோகம் நடப்பதாகவும் அரசு கூறியுள்ளது.

News December 5, 2024

பெண்களுக்கு எதிரான தலிபான் அரசு முடிவு…ரஷீத் எதிர்ப்பு

image

ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தலிபான் அரசு தடை விதித்ததற்கு வருத்தம் தெரிவித்து அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆப்கன் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் வலியுறுத்தியுள்ளார். கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துவதாகச் சுட்டிக்காட்டி, அனைவருக்குமே கல்வி வழங்குவது சமூக பொறுப்பல்ல, அது தார்மீக கடமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 5, 2024

‘கழிவுநீர் கலந்த குடிநீர்’ இபிஎஸ் கண்டனம்

image

<<14794742>>சென்னை தாம்பரத்தில்<<>> கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதில் 3 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். புயல் கரையைக் கடந்ததும், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் கலப்பின்றி முறையாக வழங்கப்படுகிறதா என்பதை அரசு உறுதிசெய்திருக்க வேண்டும் என்றார். மெத்தனப் போக்குடன் அதை செய்யாமல் விடுத்து, சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு அரசு விளையாடியதாக கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News December 5, 2024

349 ரன்கள் குவிப்பு.. டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை

image

டி 20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் குவித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதை பரோடா அணி முறியடித்துள்ளது. சிக்கிமுக்கு எதிரான போட்டியில் 349 ரன்கள் குவித்து இந்த சாதனையை பரோடா படைத்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் பனியா 51 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார். இதில் 15 சிக்சர், 5 பவுண்டரி அடங்கும். 37 சிக்சர்கள் விளாசப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

News December 5, 2024

IND W – AUS W: இந்திய அணி நிதான ஆட்டம்

image

இந்தியா-ஆஸி. மகளிர் அணிகள் மோதும் முதலாவது ODI போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனர்கள் பிரியா புனியா (3) ரன்களுக்கும், மந்தனா (8) ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். தற்போது வரை இந்திய அணி 20 ஒவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.

News December 5, 2024

சல்மான் கானை கொல்ல ரவுடி கும்பல் திட்டமா?

image

சல்மான் கானின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அத்துமீறி நுழைந்தவருக்கு பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர். ஏப்.14ம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் சல்மானை கொல்ல திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பின்னர், அடுத்தடுத்து பல வழிகளில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஜெயிலில் இருக்கும் பிரபல ரவுடி பிஷ்னோய் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

News December 5, 2024

சென்னையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பா? 2 பேர் பலி

image

சென்னை பல்லாவரம் மலைமேடு மாரியம்மன் கோயில் தெரு, குத்தாலம்மன் கோயில் தெரு பகுதிகளில் திடீரென 30 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் திருவேதி(54), மோகன் உயிரிழந்துள்ளார். குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

News December 5, 2024

8 ஆண்டுகளாகியும் நீடிக்கும் ஜெ. மரணத்தின் மர்மம்

image

8 ஆண்டுகளாகியும் இன்னும் ஜெயலலிதாவின் மரணத்தில் மக்களுக்கு தெளிவான விடை கிடைக்கவில்லை. ஆறுமுக சாமி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்த நிலையிலும், இன்னும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஒரு முதலமைச்சருக்கு மரணம் எப்படி நேர்ந்தது என்பதற்கு விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்கும் அளவுக்கு மர்மங்கள் நீடிக்கின்றன. ஆனால், இன்றுவரை யாரும் விடை கிடைக்கவில்லை. இனியாவது பதில் கிடைக்குமா?

News December 5, 2024

Beauty Tips: முடி கொட்டும் பிரச்னைக்கு தீர்வு தரும் ஆயில்!

image

ஒரு பாத்திரத்தில் நீரூற்றி, அதன் மேலே மற்றொரு பாத்திரத்தை வைத்து கடுகு எண்ணெய்யை (200ml) ஊற்றி, கொதிக்க வைக்கவும். அதில் 10g வேம்பாளம் பட்டையை போடுங்கள். எண்ணெய் நிறம் மாறியதும் கலவையை நன்கு குளிர விடவும். பின், அதை கண்ணாடி பாட்டிலுக்கு மாற்றவும். இதை 3 நாள்கள் வெயிலில் வைத்த பிறகு பயன்படுத்துங்கள். முடி உதிரும் பிரச்னையை சரிசெய்ய இந்த மூலிகை எண்ணெய் உதவும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!