India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புத்தக வாசிப்பு கற்பனைகளை வளர்க்கும். வாசிப்பு பழக்கத்தை மீண்டும் கொண்டுவர ரத்தன் டாடாவின் Trusted Manager சாந்தனு நாயுடு ஊர் ஊராக சென்று Bookies Meet நடத்துகிறார். மும்பை, புனே, பெங்களூர் டிச.8இல் ஜெய்ப்பூரில். பொது இடங்களில் ஒன்றுகூடி அமைதியாக வாசிக்கும் நிகழ்வு இது. சமூகமாக ஒரு விஷயத்தை செய்ய ஆரம்பித்தால் அது எளிதாக பழக்கமாகும் என்கிறார். உங்களுக்கு பிடித்த புத்தகம் எது?
ஆண்களுக்கு சிறுவயது, இளம்பருவத்தில் உடல்பருமன் அதிகமாக இருந்தால், அது எதிர்காலத்தில் அவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட காரணமாகலாம் என்கிறது ஆய்வு. சிறுவயதில் உடல்பருமன் அதிகமாக இருந்தால், அவர்கள் உடலில் இன்சுலின் ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதுடன், விரைப்பையின் கொள்ளளவும் குறைகிறது. இதனால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையும் ஆபத்து ஏற்படுமாம். ஆகவே, ஆண்பிள்ளைகள் உடல்பருமனை தவிர்ப்பது மிக மிக அவசியம்.
உலக அளவில் மக்களை அதிகம் கவர்ந்த டாப் 100 நகரங்களில், இந்தியாவின் ஒரே ஒரு நகரமாக டெல்லி மட்டுமே இடம் பிடித்துள்ளது. Euromonitor International நடத்திய ஆய்வில் டெல்லி 74ஆவது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து 4ஆவது ஆண்டாக பாரிஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. மேட்ரிட் 2ஆம் இடத்திலும், டோக்கியோ 3, ரோம் 4, மிலன் 5ஆம் இடத்திலும் உள்ளது. எகிப்தின் தலைநகரமான கெய்ரோ கடைசி இடத்தில் உள்ளது.
➤மேஷம் – செலவு ➤ ரிஷபம் – பாராட்டு ➤மிதுனம் – வரவு ➤கடகம் – கவலை ➤சிம்மம் – மேன்மை ➤கன்னி – தாமதம் ➤துலாம் – நோய் ➤விருச்சிகம் – ஆதரவு ➤தனுசு – வெற்றி ➤மகரம் – பக்தி ➤கும்பம் – நன்மை ➤மீனம் – அமைதி.
வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தும் திட்டத்தை TNEB, அதானிக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை சுட்டிக்காட்டி, ஸ்டாலின் தன் நண்பர் அதானிக்கு தமிழக மின் துறையை தாரை வார்த்து விட்டார் என ராகுல்காந்தி கூறுவாரா என பாஜகவின் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதானிக்கு ஒப்பந்தம் அளிக்க துடிக்கிற திமுகவுடன் இனி கூட்டணி இல்லை என கம்யூ., வெளியேறுவார்களா எனவும் அவர் வினவியுள்ளார்.
புரோ கபடி லீக் தொடரின் இன்று நடைபெற்ற தபாங் டெல்லி – உ.பி. யோத்தாஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா ஆனது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. இதை தொடர்ந்து மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – யு மும்பா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த தொடரில் 62 புள்ளிகளுடன் ஹரியானா அணி முதலிடத்தில் உள்ளது.
கடலூர், விழுப்புரம், தி.மலை மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டப்படி, அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. எனவே, அனைத்து வகுப்புகளுக்கும் முடிக்கப்படாமல் இருந்த பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மழை நீர் வடிந்த பிறகு, முறையாக பள்ளி திறக்கும்போது, செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரே ஒலிம்பிக்ஸில் 2 பிரிவுகளில் பதக்கம் வென்ற முதல் பெண் வீராங்கனை ஆனார் மனு பாக்கர். பாரா ஒலிம்பிக்ஸில் 2 தங்கங்களை வென்ற முதல் வீராங்கனை அவனி லெகரா. ஃபேஷன் டிசைனரான நான்சி தியாகி, Cannes திரைப்பட விழாவில் அறிமுகமானதன் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தை பெற்றார். போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெயரை மோகனா சிங் பெற்றார். ராணுவ ஹாஸ்பிடலில் முதல் பெண் இயக்குனராக சக்சேனா நாயர் நியமிக்கப்பட்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், தி.மலை 3 மாவட்டங்களில் மட்டும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு ஜன.2 – 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. டிச.24 – ஜன.1 வரை (9 நாள்) தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறை வருகிறது. ஜன.2 பள்ளிகள் திறந்த உடன் 3 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படுகிறது.
3ஆவது டி20 போட்டியில் கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி ஜிம்பாப்வே திரில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய PAK 20 ஓவரில் 132/7 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அதிகபட்சமாக சல்மான் 32 ரன்கள் அடித்தார். தொடர்ந்து விளையாடிய ZIM, 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 43 ரன்கள் அடித்தார். முதல் இரண்டு டி20 போட்டிகளில் பாக். வென்ற நிலையில், ZIM அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
Sorry, no posts matched your criteria.