India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நள்ளிரவு (இந்திய நேரப்படி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் (7.0 ரிக்டர்) ஏற்பட்டது. இதனால், அந்நாட்டின் மேற்கு கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நேரப்படி காலை 10.44 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இரு தினங்களுக்கு முன் ஹைதரபாத்தில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் இன்று அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.
சபரிமலை ரயில் பாதை திட்டம் தொடர்பாக டிச. 17ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனைக் மேற்கொள்கிறார். பக்தர்களின் நீண்ட கால கனவான இத்திட்டத்திற்கு 392 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி தரும்படி மாநில அரசுக்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால், 24 ஹெக்டேர் மட்டுமே மாநில அரசு கையகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தை விரைவுப்படுத்த 3 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ரயில்வேயில் (தென் கிழக்கு பிரிவு ) 1,785 காலி இடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்பு அப்ரன்டிஸ் அடிப்படையிலானவை ஆகும். கல்வி தகுதி 10, 12ம் வகுப்பில் 50% தேர்ச்சி ஆகும். வயது வரம்பு 15-24 ஆகும். வேலையில் சேர விரும்புவோர் www.rrcser.co.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு இந்த மாதம் 27ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் இறுமாப்பில் ஸ்டாலினும், உதயநிதியும் திமிரின் உச்சத்தில் செயல்பட்டு வருகிறார்கள் என்று ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் அப்பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதற்கு திமுக அரசின் நிர்வாக தோல்வியே காரணம்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கனமழை மற்றும் பெரு வெள்ளத்தில் இருந்து இன்னும் மீளாத விழுப்புரம் மாவட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள சேத மீட்புப் பணிகளை முடித்தபின்னர் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப் பணிகளை துரித கதியில் நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
சப்தமாதர்களில் நடுநாயகமாக திகழ்கிறாள் வாராஹி தேவி. வாராஹிக்கு உரிய வெள்ளிக்கிழமையில் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று, அவருக்கு ரோஜா மாலை சாத்தி, நெய் விளக்கேற்றி சந்நிதியை 12 முறை வலம் வந்து வழிபடுங்கள். ‘லூம் வாராஹி லூம் உன்மத்த; பைரவீம் பாதுகாப்பாம் ஸ்வாஹா’ எனும் இந்த வாராஹி காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி வேண்டினால் கேட்டவை அனைத்தும் கிட்டும் என்பது நம்பிக்கை.
தமிழ், தெலுங்கு படங்களில் தடம் பதித்த நடிகர் ஃபகத் பாசில் அடுத்து பாலிவுட் உலகில் காலடி எடுத்து வைக்கவுள்ளார். அவர் நடிக்க உள்ள ஹிந்தி படத்தை, ‘ஜப் வி மெட்’, ‘ராக்ஸ்டார்’, ‘ஹைவே’ உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்க உள்ளார். இந்தப் படத்தில் அனிமல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை திரிப்தி டிம்ரி அவருக்கு கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
✍அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல. அது அறிவின் மாயையே ஆகும். ✍நாம் வேடிக்கையானவர்களாக இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும். ✍மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்தி கூர்மை. ✍அமைதியான மனிதர்கள் சத்தமான மனங்களைக் கொண்டவர்கள். ✍துன்பமான நேரத்தில் சிரிக்கும் நபர், அநேகமாக ஒரு பலிகடாவை வைத்திருக்கலாம். ✍இயற்கை நோக்கம் இல்லாத பயனற்ற எதையும் செய்யாது.
டெல்லி சட்டப்பேரவை சபாநாயகரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம் நிவாஸ் கோயல் (76) தேர்தல் அரசியலை விட்டு விலகியுள்ளார். இது தொடர்பாக அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “வயது காரணமாக தேர்தல் அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன். ஆம் ஆத்மி கட்சியில் தொடர்ந்து பணியாற்றுவேன். நீங்கள் வழங்கும் எந்தப் பொறுப்பையும் நிறைவேற்ற முயற்சிப்பேன்” என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வராக ஓபிஎஸ் பதவி வகித்தபோது, அவர் அமைச்சரவையில் EPS அமைச்சராக இருந்தார். பின்னர், EPS முதல்வராக இருந்தபோது அவர் அமைச்சரவையில் ஓபிஎஸ் துணை முதல்வராக இருந்தார். அதே பாணியில், மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தற்போது துணை முதல்வராகவும், அவர் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த பட்நவிஸ் தற்போது முதல்வராகவும் பதவியேற்று உள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்தை கீழே கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.