India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் பேசியதைப் பார்த்தால், அவர் கட்சி ஆரம்பித்ததே எங்களுடன் கூட்டணி சேரத்தான் என எண்ணத் தோன்றுவதாக விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது எனவும், இதையெல்லாம் பார்க்கும் போது ரஜினியை கட்சி தொடங்க சொன்னவர்கள் தான் விஜய்யிடமும் சொல்லியிருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
செலவின அதிகரிப்பால் ஜன. 1இல் கார்கள் விலையை ரூ.25,000 வரை உயர்த்த இருப்பதாக ஹ்யுண்டாய் அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், மாருதி சூசுகியும் விலையை 4% வரை ஜன. 1இல் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகம் கார்கள் விற்பனை செய்யும் முதலிரண்டு நிறுவனங்களாக மாருதி சூசுகி, ஹ்யுண்டாய் உள்ளன. இந்த நிறுவனங்களின் அறிவிப்பு, கார்கள் வாங்க இருப்போரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Christmas என்றாலே பரிசுப் பொருள்கள் தான் நினைவுக்கு வரும். அவற்றை தருபவர் Santa Claus. 4-ம் நூற்றாண்டில் பிஷப்பாக இருந்த செயின்ட் நிக்கோலஸை வைத்து உருவான தொன்மம்தான் Santa. நிக்கோலஸின் எலும்புக்கூடு மற்றும் அவர் பற்றிய பாடல் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி Santa Claus உருவத்தை 3டி-ல் வடிவமைத்து உள்ளனர். இந்த கிறிஸ்மஸ் தாத்தா AI தயவில் விரைவில் பேசினாலும் ஆச்சரியமில்லை.
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தொடர்பாக விஜய் பேசியதை ஏற்கவில்லை என அக்கட்சி எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் கூறியுள்ளார். கூட்டணி நிர்பந்தத்தால் திருமாவளவன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று விஜய் எந்த அடிப்படையில் கூறுகிறார் என்று கேள்வி எழுப்பிய அவர், திருமாவை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே இதை பார்ப்பதாகவும் சாடியுள்ளார்.
➤மேஷம் – மகிழ்ச்சி ➤ ரிஷபம் – தாமதம் ➤மிதுனம் – சுகம் ➤கடகம் – வரவு ➤சிம்மம் – சிக்கல் ➤கன்னி – முயற்சி ➤துலாம் – எதிர்ப்பு ➤விருச்சிகம் – வெற்றி ➤தனுசு – ஆதரவு ➤மகரம் – பயம் ➤கும்பம் – நட்பு ➤மீனம் – தடங்கல்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டில் விசிக ஆதவ் அர்ஜுனா குறித்த வீடியோ ஒளிபரப்பானது. அதில், 2015 மற்றும் 2019-ல் திமுகவுக்கு தேர்தல் வியூகங்கள் வகுக்கும் பணியில் ஆதவ் செயல்பட்டதாகவும் 2021 தேர்தலில் பணியாற்ற I-PAC பிரசாந்த் கிஷோரை இங்கு அழைத்து வந்தது அவரென்றும், பின்னர் விசிகவுடன் கைகோர்த்து செயல்பட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது. ARISE நிதி நிறுவனத்தில் இவர் பொறுப்பு வகித்ததும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் துணைவர் உங்களை கட்டுப்படுத்த (அ) தவிர்க்க நினைக்கிறார் என்பதை பின்வரும் அறிகுறிகள் உணர்த்தலாம்: *குடும்பத்தினர், உறவினர்கள் & நண்பர்களிடமிருந்து உங்களை தனிமைப்படுத்துவது. *சின்ன விஷயங்களுக்கும் உங்களையே குறைகூறுவது. *தன் தவறை ஒப்புக்கொள்ளாமல் உங்களையே காரணமாக்குவது. *குடும்பம், குழந்தைகள், வசதி இவற்றை காட்டி உளவியல் ரீதியாக அச்சுறுத்துவது. *உங்கள் சாதனைகளை அங்கீகரிக்காதது. உங்க கருத்து?
‘தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. ஹெச். வினோத் இயக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ் நடித்து வருகின்றனர்.
திமுக கூட்டணிக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா பேசி வருவது உண்மை தான் என்று திருமா ஒப்புக்கொண்டுள்ளார். அவரின் பேச்சு விசிகவின் கருத்து இல்லை, அவரின் தனிப்பட்ட கருத்து. ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்ட பிறகு, கலந்து பேசி முடிவெடுக்கப்படும் எனக் கூறிய அவர், விஜய் சொல்வது போல் கூட்டணிக் கட்சிகளால் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. திமுக கூட்டணியில் தொடர்கிறோம்; தொடருவோம் என்று தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் மீது பாக். அரசு நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தியுள்ளது. அசார் தங்கள் நாட்டில் இல்லை என பாக். கூறிவரும் நிலையில், சமீபத்தில் அங்கு நடந்த கூட்டத்தில் அசார் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், தீவிரவாத நடவடிக்கைகளை பாக். ஆதரிப்பதாக அர்த்தம் என MEA செய்தி தொடர்பாளர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.