News December 7, 2024

சவுதியில் இந்த சீன் வராது..!

image

சவுதியில் ‘புஷ்பா 2’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு உலகம் முழுதும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம், ரன்னிங் டைம் 3 மணிநேரம் 20 நிமிடமாக இருப்பது குறையாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில், கலாச்சார அடிப்படையில் ’கங்கம்மா ஜத்தாரா’ என்ற காட்சியை அந்நாட்டின் சென்சார் போர்டு நீக்கியுள்ளது. இதனால், அங்கு ரன்னிங் டைம் 3 மணி நேரம் ஒரு நிமிடமாக உள்ளது.

News December 7, 2024

டிரம்புக்காக பணத்தை தண்ணியாக செலவழித்த மஸ்க்

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்காக எலான் மஸ்க் ₹2,120 கோடி செலவு செய்துள்ளார். பிரசார செலவு தொடர்பான செலவின விவரங்களில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் செனட் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த குழுக்களுக்கும், தேர்தல் பிரசார செயற்பாட்டு நிறுவனங்களுக்கும் பல கோடியை மஸ்க் அள்ளி வீசியுள்ளார். தற்போது மஸ்கின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News December 7, 2024

கோடிக்கணக்கானோருக்கு இலவச ரேஷன் கட்!

image

இலவச ரேஷன் பொருட்களை வாங்குபவரா நீங்கள்? அப்படியானால் ஜன. 1 முதல் உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போகலாம். நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களிடம் ரேஷன் கார்டு இருக்கிறது. இந்நிலையில், இலவச ரேஷன் பெறுவதற்கு தகுதியற்றவர்களைக் கண்டறியும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, ஜன. 1ஆம் தேதி முதல் கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச ரேஷன் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

News December 7, 2024

ஆடைகளுக்கான GST வரி 28% ஆக உயர்த்தப்படுமா?

image

ரெடிமேட் ஆடைகளுக்கான GST வரி விகிதத்தை மாற்றியமைத்து, 28% வரை உயர்த்த அமைச்சரவைக் குழு பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹1,500 – 5% வரி, ₹1,500 – ₹10,000 – 18% வரி, அதற்கு மேலான ரெடிமேட் ஆடைகளுக்கு 28% வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி ஏற்படும் ஜவுளித் துறையின் பல பிரிவுகளில் கடும் பாதிப்பை ஏற்படும் என துறை சார்ந்தோர் அஞ்சுகின்றனர்.

News December 7, 2024

வேணாம்டா டேய்….வேணாம்டா

image

நீ சொல்லி நான் ஏன் குடியை நிறுத்தணும் என இருப்பவர்களின் மூஞ்சில் அடிச்ச மாதிரி இந்திய மருத்துவர் ஒருவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 32 வயதான ஒருவரின் ‘Weekend Drinker’ ஒருவரின் Liver புகைப்படத்தையும், தன் மனைவியின் Liverஐ ஒப்பீடு செய்துள்ளார். அவரது மனைவியின் Liver இளஞ்சிவப்பு நிறத்தில் ஆரோக்கியமாகவும் குடிப்பவரின் Liver கருமையான நிறத்தில் இருக்கிறது. குடிக்காதீங்கடா மக்கா…

News December 7, 2024

மம்தாவின் அரசியல் வாரிசு யார்?

image

தனது அரசியல் வாரிசு குறித்து மம்தா பானர்ஜி மனம் திறந்துள்ளார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நான் என்பது கட்சியல்ல, நாங்கள்தான் கட்சி என்றார். தனது கட்சி ஒரு கூட்டு குடும்பம் எனவும், முடிவுகளை கூட்டாகதான் எடுப்போம் என்றும் தெரிவித்தார். மக்களுக்காக யார் சிறந்தவர் என்பதை கட்சி முடிவு செய்யும். கட்சியில் ஒவ்வொருவரும் மிக்கியமானவர்கள். புதிதாக வருபவர்கள் கூட நாளை மூத்த தலைவராகலாம் என்றார்.

News December 7, 2024

தாம்பரம் மக்களுக்கு மிகவும் அசுத்தமான குடிநீர்

image

சமீபத்தில் சென்னை குரோம்பேட்டை பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து மூன்று பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மிகவும் அசுத்தமானது என்று ஜூலை மாதமே வெளியான <>அறிக்கை<<>> வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில், மாதம்பாக்கம் ஏரி நீரில் அளவுக்கு அதிகமான மனித கழிவுகள் இருப்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதையெல்லாம் யார்தான் தட்டிக் கேட்பது?

News December 7, 2024

12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

image

வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி வரக்கூடும் எனவும், டிச.12ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக் கடலில் தமிழ்நாடு – இலங்கை பகுதியை அடையக்கூடும் என்றும் கூறியுள்ளது. இதனால், டிச.11, 12ல் காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News December 7, 2024

நிர்வாகிகள் விலகுவதை தடுக்கும் முயற்சியில் சீமான்

image

அடுத்தடுத்து கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவதை தடுக்கும் முயற்சியில் சீமான் இறங்கியுள்ளாராம். குறிப்பாக கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட கொங்கு பகுதிகளைச் சேர்ந்த நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகி வருகின்றனர். இதனால், அப்பகுதி நிர்வாகிகளை அழைத்து அவர் பேச்சுவார்த்தை நடத்தி தெளிவுபடுத்தி வருகிறாராம். இதனால், அதிருப்தி மனநிலையில் இருந்த நிர்வாகிகள் பலர் தங்கள் முடிவு மாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

News December 7, 2024

போதைப்பொருள் கடத்தல்… NIA குழுவுடன் RN ரவி ஆலோசனை

image

தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவுடன் தமிழக RN ரவி ரகசிய ஆலோசனை நடத்தி உள்ளார். கடந்த ஆகஸ்டில் NIA ஆலோசகர் அஜித் தோவலுடன் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே, இக்கூட்டம் நடந்ததாக தெரிகிறது. இதன்போது, தமிழகத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, தமிழக போலீசாரின் செயல்பாடுகள் குறித்து தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

error: Content is protected !!