News December 7, 2024

சினிமாவில் இருந்து BREAK எடுக்கிறாரா ARR?

image

சினிமாவில் இருந்து 1 ஆண்டு தற்காலிகமாக விலகியிருக்க ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அவரது மகள் கதீஜா ரஹ்மான் இது குறித்து விளக்கமளித்துள்ளார். 29 ஆண்டுகால திருமண உறவு முறிந்ததால் ஏற்பட்ட விரக்தியில், ARR இப்படி முடிவு செய்தாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், இதுபோன்ற ஆதாரமற்ற தேவையில்லாத வதந்தியை பரப்ப வேண்டாம் என கதீஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 7, 2024

INDIA கூட்டணி தலைவராகிறாரா மம்தா?

image

INDIA கூட்டணியை தலைமையேற்று வழிநடத்த தயாராக உள்ளதாக மம்தா பேசியதற்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவளித்துள்ளது. அடுத்தத்தடுத்த தோல்விகளில் இருந்து மீண்டு கூட்டணியை வலுப்படுத்த இது உதவும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. அதேபோல், காங். தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என CPI-யும் கருத்து கூறியுள்ளது. ஆனால் மம்தா பானர்ஜி தலைமைக்கு வர நினைக்கிறார், நாங்கள் அப்படி நினைக்கவில்லை என காங். தெரிவித்துள்ளது.

News December 7, 2024

புஷ்பா-2 RECORD BREAKING

image

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா-2 box-officeஇல் ALL TIME RECORD படைத்துள்ளது. படம் வெளியான 2 நாட்களில் உலகளவில் ₹449 Cr வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இன்று, நாளை வார விடுமுறை என்பதால், ₹600 Crக்கு மேல் படம் வசூலிக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

News December 7, 2024

அதிமுக மாவட்ட செயலாளர் தப்பி ஓட்டம்

image

நில மோசடி விவகாரத்தில் காரைக்கால் அதிமுக மாவட்ட செயலாளரும், EX MLAவுமான ஓமலிங்கம் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தக்கலூர் திருலோகசாமி கோயில் தேவஸ்தான இடத்தை போலி ஆவணங்கள் மூலம் வாங்கியது உறுதியான நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று முதல் தலைமறைவாகியுள்ளார். இதனால், அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

News December 7, 2024

இது விஜய்க்கு நல்லதல்ல: இயக்குநர் அமீர் எச்சரிக்கை

image

விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் திமுகவை விமர்சித்திருந்த நிலையில், இதுதொடர்பாக அமீர் பதிலடி கொடுத்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்கும் நன்மை தராது. ஆதவ் அர்ஜுனா நட்பு விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல. பிறப்பாலும், பணக்காரர்களின் வாரிசுகளை மணப்பதாலும் ஒருவரால் பணக்காரராக முடியும். ஆனால், மக்கள் ஆதரவு இல்லாமல் யாராலும் முதல்வர் ஆக முடியாது என கூறியுள்ளார்.

News December 7, 2024

மகளிர் உரிமைத்தொகை ₹1000 குறித்து அமைச்சர் சர்ச்சை

image

திமுக ஆட்சி கொடுக்கும் ₹1000 இல்லையென்றால் தமிழக மக்கள் பட்டினி தான் கிடக்க வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எச்.ராஜா, ₹1000 மகளிர் உரிமைத் தொகையை வீட்டுவரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு என திமுக அரசே பல பெயர்களில் வரியை உயர்த்தி மக்களிடம் இருந்து திரும்ப வசூலிப்பதாக விமர்சித்துள்ளார்.

News December 7, 2024

எப்படிலாம் யோசிக்கிறாங்க..!

image

படிப்பு, தேவையைப் பொறுத்து வேலைக்கு ஆட்கள் எடுப்பதை பார்த்திருப்போம். ஆனால், எப்படிலாம் யோசிக்கிறாங்க என்கிற மாதிரி, ராசி பார்த்து வேலைக்கு ஆள் எடுக்கிறது ஒரு நிறுவனம். மதுரையில் உள்ள கிளை அலுவலகத்திற்கு மிதுனம், ரிஷபம், கன்னி, தனுசு, கும்பம், மகரம், கடகம் ராசிக்காரர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வைரலாகி வருகிறது. யாரு சாமி இவங்க என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News December 7, 2024

கொலையில் முடிந்த டாய்லட் பிரச்னை

image

புது டெல்லியில் காமன் டாய்லெட்டை சுத்தமாக வைக்காததால் இரு வீட்டாருக்கு இடையே எழுந்த சண்டையில் சுதீர் என்பவர் உயிரிழந்துள்ளார். சுதீரின் சகோதரர், நண்பர் இருவரும் காயமடைந்துள்ளனர். கொலை செய்ததாக நம்பப்படும் பிகாம் சிங், மனைவி, 3 மகன்களை போலீஸ் கைது செய்துள்ளது. மூவரின் உடம்பிலும் கிட்சன் கத்தி கொண்டு தாக்கிய காயங்கள் இருந்தன. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 7, 2024

அது என்னுடைய வீடியோ இல்ல: நடிகை

image

நடிகை பிரக்யநக்ராவின் அந்தரங்க வீடியோ என கேப்சனிட்டு ஒரு வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியது. ஆனால், அது தன்னுடைய வீடியோ இல்லை எனவும், AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ எனவும் அந்நடிகை விளக்கமளித்துள்ளார். இது ஒரு கெட்ட கனவு என தான் இன்னும் நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், வேறு எந்த பெண்ணுக்கும் இதுபோல் நடக்கக் கூடாது என வேண்டிக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

News December 7, 2024

டாப் 10-ல் ஒரே தமிழ் படம்..!

image

முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 10 இந்திய படங்களின் பட்டியலில், ₹294 கோடியுடன் புஷ்பா 2 முதலிடத்தை பிடித்துள்ளது. RRR- ₹223.5 கோடி, பாகுபலி 2- ₹214.5 கோடி என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. முதல் 5 இடங்களை தெலுங்கு படங்களே ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்த லிஸ்ட்டில் ஒரே ஒரு தமிழ் படம், லியோ மட்டுமே ₹142.8 கோடியுடன் 8ஆம் இடத்தில் உள்ளது. ஜவான் ₹129.2 கோடியுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

error: Content is protected !!