News December 7, 2024

ஒரே படத்தில் 30 முத்தக்காட்சிகளா!

image

திரைப்படங்களில், குறிப்பாக பாலிவுட் படங்களில் 2000-க்கு பிறகுதான் முத்தக் காட்சிகள் அதிகம் இடம்பெறத் தொடங்கின. 2013-ல் வெளியான 3G படத்தில் 30 lip lock காட்சிகள் இருந்தன. ஆனால், அந்த படம் பெரிய ஃபிளாப் ஆனது. அதன்பின் வெளியான Murder-ல் 20 முத்தக்காட்சிகள், Shuddh Desi Romance-ல் 27 காட்சிகளும், Befikre படத்தில் 25 முத்தக்காட்சிகளும் இடம்பெற்றன. ஆனாலும், இப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.

News December 7, 2024

டப்பிங்கை நிறைவு செய்த அஜித்

image

அஜர்பைஜானில் நடந்து வந்த ‘விடாமுயற்சி’ படத்தின் டப்பிங்கை நடிகர் அஜித்குமார் நிறைவு செய்தார். 2025 பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இறுதி கட்ட பணிகள் சூடுபிடித்துள்ளன. இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. Slow Burn Action Thriller-ஆக படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 7, 2024

அமரனில் சர்ச்சைக்குள்ளான காட்சி நீக்கம்

image

‘அமரன்’ படத்தில், இதுதான் தனது போன் நம்பர் என சாய் பல்லவி எழுதி கொடுக்கும் காட்சி நீக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட நம்பர், வாகீசன் என்ற கல்லூரி மாணவருடையது என்பதால், அவருக்கு தொடர்ந்து போன் வருவதாக புகார் தெரிவித்து இருந்தார். ஆனால், இதற்கு படக்குழு எவ்வித பதிலையும் அளிக்காததால், ₹1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் காரணமாக, OTT வெர்ஷனில் அந்த காட்சி நீக்கப்பட்டுள்ளது.

News December 7, 2024

பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

image

பண்டிகைகளை பள்ளிகளில் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இவ்விழாக்கள் பள்ளி வேலை நேரத்தில் நடைபெறக் கூடாது. ஒவ்வொரு பள்ளியிலும் கல்வியாண்டின் துவக்கத்திலேயே மாணவர்களின் கற்றல் – கற்பித்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு ஏதுமில்லாமல் இலக்கிய மன்ற விழாக்கள், கல்வி வளர்ச்சி நாள் விழா உள்ளிட்டவை நடத்த வேண்டும் உட்பட பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. <>முழு தகவல்<<>>

News December 7, 2024

UPSC Mains தேர்வு முடிவுகள் பார்ப்பது எப்படி?

image

IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் UPSC மெயின்ஸ் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்நிலை தேர்வான ப்ரிளிம்ஸ் கிளியர் செய்த 14,627 பேர் செப்., மெயின் தேர்வு எழுதினர். இதில் வெற்றி பெறுபவர்கள் இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவர். தேர்வு முடிவுகளை www.upsc.gov.in, www.upsconline.nic.in தளத்தில் தேர்வர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

News December 7, 2024

தாய் இல்லாத பிள்ளை பிரித்வி ஷா

image

ப்ரித்வி ஷா கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது முன்னாள் கோச் ராஜு, ஷாவின் துயரக் கதையை பகிர்ந்துள்ளார். வறுமையான குடும்பத்தில் பிறந்த ப்ரித்வி, கடுமையான கஷ்டங்களை சந்தித்து இந்திய அணியில் இடம்பெறும் அளவிற்கு முன்னேறியதாக ராஜு தெரிவித்துள்ளார். சிறு வயதிலேயே தாயை பறிகொடுத்ததாகவும், நல்லது, கெட்டதை சொல்லிக் கொடுக்கும் அம்மாவின் அரவணைப்பு அவருக்கு கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

News December 7, 2024

நேற்று முளைத்தவன் எல்லாம் திமுகவுக்கு சவால் விடுவதா?

image

விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் திமுகவை விமர்சித்திருந்த நிலையில், அவர்களுக்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மன்னராட்சி நடைபெறுவதாக சிலர் கூறுகிறார்கள். மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் யாராக இருந்தாலும் இங்கு ஆள முடியும். நேற்று முளைத்தவன் எல்லாம் திமுகவுக்கு சவால் விடுகிறான். திமுகவை எதிர்ப்பவன் மண்ணோடு மண்ணாகி விடுவான் என அவர் கூறினார்.

News December 7, 2024

தி.மலைக்கு நாளை முதல் 9 நாள் விடுமுறை

image

தி.மலை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் நாளை முதல் டிச.16ஆம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு பணி மற்றும் 13ஆம் தேதி தீப திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த மாவட்டத்திற்கு அரையாண்டுத் தேர்வு ஜன.2ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 7, 2024

WIFI -ஆல் இத்தனை நன்மைகளா..?

image

செல்போனை சிறிது நேரம் பார்த்தாலே சர்ர்ரென சார்ஜ் கம்மியாவதற்கு காரணம் மொபைல் டேட்டாதான் என்கின்றனர் நிபுணர்கள். மொபைல் டேட்டாவை பயன்படுத்தும் போது, சிக்னலை தேடவும், 3G, 4G, 5G-க்கு நொடிகளில் மாறவும் செல்போன் பேட்டரி அதிகம் உழைக்கிறது. ஆனால், WIFI யூஸ் செய்கையில், சிக்னல் தொடர்ந்து கிடைப்பதால் சார்ஜ் நீடிப்பதோடு, செல்போனும் நீண்டகாலம் உழைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

News December 7, 2024

₹1 கோடி சம்பளம் தந்த வேலையை விட்டது ஏன்?

image

பெங்களூரைச் சேர்ந்த வருண் ஹசிஜா, ஆண்டுக்கு ₹1 கோடி சம்பளம் தரும் வேலையை விட்டுள்ளார். ஒரு வேலை செய்யும் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும், தான் தாக்கம் ஏற்படுத்தும் அளவு சவாலானதாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். அது இல்லாத காரணத்தால் வேலையை விட்டதாக தெரிவித்துள்ளார். வேலை கிடைக்காமல் பலர் இருக்கும் நிலையில், ஒரு கொள்கையுடன் வேலை செய்யும் இவர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

error: Content is protected !!