India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். VCKவில் யார் தவறு செய்தாலும் முகாந்திரத்தை ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கட்சி நலனுக்கு எதிராக இருப்பதாக நிர்வாகிகள் உணர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார். VCK புதிய கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். அப்போது இருவரும் சண்டையிடுவது போல் மோதி கொண்டனர். இச்சம்பவம் சர்ச்சையான நிலையில் இதுகுறித்து பேசிய சிராஜ் ” ஹெட் ‘நன்றாக பந்து வீசினாய்’ என்று சொல்லவில்லை. அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பொய் சொல்கிறார். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். அவர் பேசும் விதம் தவறாக இருந்தது, எனக்கு அது பிடிக்கவில்லை அதனால் தான் அப்படி நடந்து கொண்டேன்’ என்றார்.
‘life time settlement’ என்ற வார்த்தையை நிஜமாக்கும் வகையில் UAEக்கு வேலைக்கு போன இடத்தில், இந்தியர் ஒருவருக்கு பணமழை கொட்டியுள்ளது. அபுதாபியில் உள்ள கடை ஒன்றில் சேல்ஸ் மேனாக வேலை செய்யும் கேரளாவை சேர்ந்த அரவிந்த் அப்புக்குட்டனுக்கு பிக் லாட்டரியில் ₹57 கோடி பரிசு அடித்துள்ளது. இப்போ சொந்தமாக கடை வைக்கும் அளவுக்கு அப்புக்குட்டன் கோடீஸ்வரராகியுள்ளார். ஆனாலும் லாட்டரி போதை ரொம்ப ரிஸ்க் பாஸ்..
TASMAC கடைகளில் நுகர்வோர் கேட்கும் மதுபானத்தை ரசீதுடன் வழங்குமாறு பணியாளர்களுக்கு TASMAC நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மதுபானங்களை முன் கூட்டியே ஸ்கேன் செய்து வைத்து விற்பனை செய்யக்கூடாது எனவும், விற்பனை புள்ளி விவரத்திற்கும், கையடக்க கருவி புள்ளி விவரத்திற்கும் வேறுபாடு இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு, வேறுபாடு இருந்தால் 50% அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
சென்னையில், பல கனவுகளுடன் முதலிரவு அறை சென்ற மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. திருமணத்தில் பெண் ஒருவர் கலாட்டா பண்ண, உஷாரான மணப்பெண் உறவினர்களுடன் மாப்பிள்ளையை அடைத்து வைத்து அவரின் போனை ஆய்வு செய்துள்ளார். அதில், பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவர, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே, 3 பெண்ணை ஏமாற்றி, 4வது பெண்ணிற்கு தாலி கட்டியவருக்கு கட்டம் கட்டியுள்ளது காவல்துறை.
மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், அவர்களது குடும்பத்தினருடன், கணினி திரை வாயிலாக வீடியோ அழைப்பில் பேசும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை புழல், வேலூர், கோவை, திருச்சி, பாளையங்கோட்டை உட்பட 9 மத்திய சிறைகளில் இந்நடைமுறை அமலாகியுள்ளது. கைதிகள் 3 நாள்களுக்கு ஒருமுறை குடும்பத்தினருடன் 12 நிமிடம் கணினி மூலம் வீடியோ அழைப்பில் பேசலாம். ஒரு நிமிடத்திற்கு ₹2.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ₹2,940 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கதி சக்தி திட்டம் மற்றும் தேசிய சரக்கு கையாளுகை கொள்கையை செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் சரக்கு, சேவை ஏற்றுமதியை ₹168 லட்சம் கோடியாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் HTS கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் அங்கிருந்து தப்பிச்சென்ற அதிபர் பஷார் அல் ஆசாத் பயணித்த விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டமாஸ்கஸ் எல்லைப் பகுதியில் பஷார் ஆசாத்தின் தந்தை சிலையை உடைத்த கிளர்ச்சியாளர்கள், ஜெயிலில் இருந்து முக்கிய கைதிகளையும் வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளது.
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் அதிகாலை நடைபெற்ற விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அட்டங்கியில் இருந்து நார்கட்பள்ளிக்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2024ம் ஆண்டு அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலை சர்வதேச நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், 185 கோடீஸ்வரர்களுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 21% அதிகமாகும். அதேபோல், அவர்களின் கூட்டுச்சொத்து மதிப்பும் நடப்பாண்டில் 42.1% அதிகரித்து ₹76 லட்சம் கோடியாக உள்ளது. 835 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 427 கோடீஸ்வரர்களுடன் சீனா 2வது இடத்திலும் உள்ளன.
Sorry, no posts matched your criteria.