News December 8, 2024

IND-ஐ ஏமாற்றி வென்றதா AUS?

image

இந்தியாவின் ஆட்டத்திறனுக்கு ஏற்ற மைதானமாக அடிலெய்ட் கருதப்படுகிறது. ஆசியாவில் இருப்பது போன்று இந்த மைதானம் இருக்கும். இங்கு பலமுறை IND வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதை உணர்ந்து கொண்டு, IND வீரர்களுக்கு போதிய அனுபவம் இல்லாத பிங்க் நிற பந்து போட்டியை AUS கிரிக்கெட் வாரியம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. அடிலெய்டில் பிங்க் நிற பந்து டெஸ்ட்டில் AUS ஒரு போதும் தோற்றது கிடையாது.

News December 8, 2024

‘புஷ்பா-2’ பாக்ஸ் ஆபிஸில் வசூல் சுனாமி

image

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா-2’ பாக்ஸ் ஆபிஸில் வசூல் சுனாமியை ஏற்படுத்தி வருகிறது. படம் வெளியான மூன்றே நாட்களில் ₹621 கோடி வசூலித்து, அனைத்து சாதனைகளையும் முறியடித்து புதிய சரித்திரம் படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், டிக்கெட் கட்டணம் அதிகளவில் வசூல் செய்யப்படுவதால், இவ்வளவு பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் வந்துள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

News December 8, 2024

EWS இடஒதுக்கீடு தவறானது: முன்னாள் நீதிபதி

image

உயர்வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமில்லாது, தார்மீக ரீதியாகவும் தவறானது என முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரோகிண்டன் நாரிமன் தெரிவித்துள்ளார். 10% இடஒதுக்கீடு பெறும் உயர்வகுப்பினர், வரலாற்று ரீதியாக எந்த ஒடுக்குமுறைகளையும் அனுபவித்தது இல்லை எனவும், சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆளானவர்களுக்காகவே இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

News December 8, 2024

இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக் இது: செல்லூர் ராஜு

image

கனிமொழி, சேகர்பாபு தெரிவித்துள்ள கருத்தை சுட்டிக்காட்டி செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்தார். 2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்லும் என கனிமொழியும், சேகர்பாபுவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜு, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக் இதுதான் எனத் தெரிவித்தார். மேலும், அதிமுகவை போல திமுகவால் தனித்து நிற்க முடியுமா எனவும் அவர் சவால் விடுத்தார்.

News December 8, 2024

இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை!

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2024

சாம்பியன் பட்டத்தை பறிகொடுத்த இந்தியா

image

U19 Asia Cup இறுதிப்போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த BAN 198 ரன்கள் எடுத்தது. இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய IND, வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 139 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற BAN, தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

News December 8, 2024

இவர்களை நாடு மன்னிக்காது: பிரேமலதா

image

மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை நாடு மன்னிக்காது என பிரேமலதா கூறியுள்ளார். மாணவியை வன்கொடுமை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், பாலியல் வன்கொடுமைகள் நடக்காமல் பார்க்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் மனநலம் பாதித்த பெண்ணை 7 பேர் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியானது.

News December 8, 2024

உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்: ரோஹித் ஷர்மா

image

2ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலியா தங்களை விட சிறப்பாக விளையாடியதாக ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், அதை தாங்கள் பயன்படுத்த தவறிவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்தார். குறைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு IND மீண்டும் வெற்றிப்பாதைக்கு செல்லும் என்றும், அதற்கான அனைத்து முயற்சிகளையும் அடுத்த போட்டியில் செய்வோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News December 8, 2024

அதிமுக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியம்

image

பாஜக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். விஜய் வருகையால் 2026 சட்டமன்ற தேர்தலில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், மாற்றுக்கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்க ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இன்று செந்தில் பாலாஜி முன்னிலையில் அதிமுக கிளைக் கழக செயலாளர் முதல் பாஜக மாவட்ட துணை தலைவர்கள் வரை 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.

News December 8, 2024

அரசு விழாவில் ₹12 லட்சம் அபேஸ்.. ஷாக்கான CM..!

image

திருவிழா கூட்டத்தில் திருட்டு என்பதை கேள்வி பட்டிருக்கோம், ஆனால் PM மோடி உள்ளிட்டோர் பங்கேற்ற அரசு விழாவில் பல லட்சம் பொருட்கள் அபேஸ் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த 5ஆம் தேதி நடந்த MH முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள், சினிமா ஸ்டார்களின் செல்போன், பணம், நகை என ₹12 லட்சம் பொருட்கள் திருடப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!