News December 9, 2024

மஞ்சள் நிற உடையில் சம்யுக்தா

image

களறி, சார் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சம்யுக்தா. இதையடுத்து மோகன்லாலின் ராம் படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். திரைப்பட படப்பிடிப்பின் இடையே மஞ்சள் நிற சேலையில் அழகாக புகைப்படங்கள் எடுத்து சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ளார். அந்த படங்கள் திரைப்பட ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன. நீங்களும் அந்தப் படங்களை காண வேண்டுமா? மேலே கிளிக் செய்து பாருங்கள். கீழே கமெண்ட் பண்ணுங்க.

News December 9, 2024

அரசு போட்டித் தேர்வு: இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு

image

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோருக்கு இன்று முதல் தமிழக அரசு சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழக அரசின் கல்வி டிவியில் இன்று முதல் 13ஆம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் பயிற்சி வகுப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. இதை பயன்படுத்தி தேர்வுக்கு தயாராக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News December 9, 2024

சுவர் விளம்பரம் தெரியும், WALKING விளம்பரம் தெரியுமா?

image

சுவர் விளம்பரம், டி.வி. விளம்பரம் பார்த்து இருப்போம். இதற்கு முற்றிலும் வித்தியாசமாக, மனிதர்கள் தங்கள் உடலில் போர்டை மாட்டிக் கொண்டு விளம்பரம் செய்த விநோதம் நடந்துள்ளது. பெங்களூரில் 10 நிமிட உணவு டெலிவரி செயலிக்காக இதுபோல 3 பேர் உடலில் போர்டை இரவில் மாட்டிக் கொண்டு நடந்து சென்றனர். யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து இக்காட்சியை வெளியிட, அது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

News December 9, 2024

டிசம்பர் 9: வரலாற்றில் இன்று

image

1945: நடிகர் சத்ருகன் சின்ஹா பிறந்தார்
1946: இந்திய அரசியலமைப்பு சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது
1946: சோனியா காந்தி பிறந்தார்
1981: இந்தி நடிகை கீர்த்தி சாவ்லா பிறந்தார்
1992: பிரிட்டன் மன்னர் சார்லஸ், டயானா விவாகரத்து அறிவித்தனர்
2009: தெலுங்கானா மாநிலம் தொடர்பாக அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவிப்பு வெளியிட்டார்.
சர்வதேச போதை ஒழிப்பு தினம்

News December 9, 2024

ரஷ்யாவில் சிரியா அதிபர் ஆசாத் தஞ்சம்

image

சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யாவில் தஞ்சமடைந்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள், டமாஸ்கசை சுற்றி வளைத்ததும் நாட்டை விட்டு அவர் தப்பியோடி விட்டதாகக் கூறப்பட்டது. பிறகு அவர் சென்ற விமானம் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஆசாத்தும், குடும்பமும் இருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

News December 9, 2024

நாளை முதல் 4 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் நாளை முதல் 13ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக MET தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூரில் கனமழை பெய்யக்கூடும். 11ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகையில் மிக கனமழையும், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

News December 9, 2024

இன்று கூடுகிறது தமிழக சட்டசபை

image

தமிழக சட்டசபை இன்று கூடவுள்ளது. இதில் அரசுக்கு இந்த நிதியாண்டில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவுகள் குறித்து சபையில் விவாதிக்கப்பட்டு, துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், மதுரை டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தியும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. 2 நாள்கள் மட்டுமே நடத்தப்படும் இக்கூட்டம், இந்த ஆண்டுக்கான கடைசிக் கூட்டமாக இருக்கும்.

News December 9, 2024

ரஷ்யாவுக்கு அடிமேல் அடி (1/2)

image

சிரியாவில் 2000 முதல் சுமார் 24 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஆசாத், துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றியதால் நாட்டை விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து கிளர்ச்சியாளர்கள் வசம், சிரியா நாடு முழுவதும் வந்துள்ளது. சிரியாவில் ரஷ்யாவுக்கு சொந்தமான 2 ராணுவ தளங்கள் உள்ளன. இந்த 2 ராணுவ தளங்களில் இருந்தே முக்கிய கடல்பகுதியான மத்திய தரைக்கடலில் ரஷ்ய கடற்படை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

News December 9, 2024

ரஷ்யாவுக்கு அடிமேல் அடி (2/2)

image

சிரிய அதிபர் ஆசாத், ரஷ்ய ராணுவ தளங்களை அனுமதித்த நிலையில், இனி கிளர்ச்சியாளர்கள் அனுமதிப்பார்களா எனத் தெரியவில்லை. ஒருவேளை அனுமதிக்கவில்லை எனில், அங்கிருந்து ரஷ்ய ராணுவம் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி வெளியேறினால், மத்திய கிழக்கு ஆசியாவில் ரஷ்யாவின் புவிசார்ந்த நலன்கள் பாதிக்கப்படும். எனவே ரஷ்யா அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை காண உலக நாடுகள் ஆவலாக உள்ளன.

News December 9, 2024

தப்புமா கவுதம் கம்பீர் பதவி?

image

ஆஸிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி வென்றதால், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சற்று நிம்மதியில் இருந்தார். இந்நிலையில், 2ஆவது டெஸ்டில் தோல்வியடையவே மீண்டும் கம்பீரின் பயிற்சியாளர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எஞ்சிய 3 டெஸ்டுகளிலும் இந்தியா வென்றாலோ (அ) தொடரை வென்றாலோதான் கம்பீரின் பயிற்சியாளர் பதவித் தப்பும். இல்லையேல் சிக்கல்தான். நீங்கள் என்ன நினைக்கிறீங்க. கீழே பதிவிடுங்க.

error: Content is protected !!