India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை இன்று நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி விவகாரம் குறித்த அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் மீது விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட INDIA கூட்டணி கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, சபாநாயகர் அவையை 12 மணி வரை ஒத்திவைத்துள்ளார்.
TNCDW மூலம் 11.48 லட்சம் பெண்களுக்கு நிதிசார் கல்வி பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதிசார் திறனை வளர்ப்பது, வட்டி மானியம், வங்கிக் கடன் உள்ளிட்ட சேவைகளை சுய உதவிக் குழுவினர் எளிதில் பெற இத்திட்டம் உதவி செய்யும். இதற்கான சிறப்பு முகாம்களுக்கு ₹4.50 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், பணிகள் தொடங்கியுள்ளன. வரும் 31ஆம் தேதிக்குள் இந்த பயிற்சியை முடிக்க Dy CM உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் மீன்களை வாங்கியே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வியாபாரிகள் விற்கின்றனர். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகள் அனைத்தும் நேற்று ஒன்றாக கரை திரும்பின. இதனால் வஞ்சிரம் ரூ.650, கடல் வவ்வால் ரூ.450, இறால் ரூ.300, பெரிய நண்டு, கடமா ரூ.250ஆக விலை குறைந்துள்ளது. உங்க ஏரியால என்ன விலை?
‘சூர்யா 45’ படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகியதாக கூறப்படும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ட்ரீம் வாரியர் நிறுவனம், புதிய sensation சாய் அப்யங்கரை கமிட் செய்துள்ளதாம். ‘கட்சி சேர’ பாடல் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற சாய், ஏற்கனவே LCUவில் ராகவா லாரன்ஸ் படத்திலும் கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசைப்புயலின் இடத்தை சாய் நிரப்புவாரா?
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையில் முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது மூன்றாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டிருந்தது. தற்போது, துணை முதலமைச்சராக பொறுப்பேற்றிருப்பதால் அவை முன்னவர் துரை முருகனுக்கு அருகில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இது, கட்சியிலும் ஆட்சியிலும் அவரது ஆதிக்கத்தை காட்டுவதாகும்.
அரசு சேவையை பெற 66% வணிக நிறுவனங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவது LocalCircles சர்வேயில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 159 மாவட்டங்களில் 18,000 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 46% பேர் தானாக முன் வந்து லஞ்சம் கொடுத்ததாகவும், 16% பேர் லஞ்சம் கொடுக்காமல் அரசின் சேவைகள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். டிஜிட்டல் மயம், CCTV வளர்ந்த போதிலும் இன்னும் லஞ்சம் ஒழியவில்லையே..!
சபரிமலை சீசன் தொடங்கிவிட்ட நிலையில், பக்தர்களுக்காக பல்வேறு வசதிகளை தேவசம் போர்டு மேற்கொண்டு வருகிறது. கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காரணமாக, தற்போது 18ம் படி ஏற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது நிமிடத்திற்கு 80 பக்தர்கள் மட்டுமே 18ம் படி ஏற அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிர்க்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹15 உயர்ந்து ஒரு கிராம் ₹7,130க்கும், சவரனுக்கு ₹120 உயர்ந்து ஒரு சவரன் ₹57,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வெள்ளி விலை எவ்வித மாற்றமுமின்றி கிராமுக்கு ₹100 ஆக விற்கப்படுகிறது.
டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி சகாப்தம் தொடங்கிய தினம் இன்று. கடந்த 2014-ம் ஆண்டு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் விராட் கேப்டன் பொறுப்பேற்றார். அவரின் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி உலகில் தலை சிறந்த அணியாக விளங்கியது. ஆஸி. மண்ணில் பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றி, BGT தொடரை ஆஸி. மண்ணில் வென்றது என கோலி தலையிலான இந்திய அணி மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.
கோவையில் பல கோடி ரூபாய்க்கு புதிய பங்களா வாங்கியிருப்பதாக வெளியான தகவலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார். கோவையில் பங்களா வாங்கும் அளவுக்கு தனது நிதிநிலைமை இல்லை என்றும், கோவைக்கு வரும் போதெல்லாம் தனது மாமனார் வீட்டிலேயே தங்கி வருவதாகவும் அவர் பதிலளித்துள்ளார். தன்னை காண அங்கு வருவோர் இடவசதியின்றி வெளியே நிற்கும் நிலைதான் உள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.