News December 9, 2024

சிராஜின் ஆவேசத்துக்கு 20% அபராதம் விதித்தது ஐசிசி

image

அடிலெய்ட் டெஸ்டின் போது இந்திய பவுலர் சிராஜும், ஆஸி., பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டும் மோதிக் கொண்டனர். சிராஜ் பந்தில் அவுட்டான ஹெட் எதையோ சொல்ல, சிராஜும் ஆவேசமாக பதிலளித்தார். இந்த செயல் ஐசிசி நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதால், சிராஜுக்கு மேட்ச் சம்பளத்தில் 20% அபராதம் விதித்துள்ள ஐசிசி, இருவருக்கும் தலா ஒரு demerit புள்ளியையும் வழங்கி எச்சரித்துள்ளது.

News December 9, 2024

பாலாவின் 25 ஆண்டு திரையுலக பயணம்

image

இயக்குநர் பாலா இயக்கி அருண்விஜய் ஹீரோவாக நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ ரிலீஸ், சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் டிச.18-ல் நடக்கவுள்ளது. பாலாவின் 25-ம் ஆண்டு கலைப் பயணத்தையும் ஆடியோ விழாவோடு சேர்த்து கொண்டாடவுள்ளது வி ஹவுஸ் புரொடக்‌ஷன். விழாவில் பாலாவின் நெருங்கிய கலையுலக நண்பர்கள் பலரும் பங்கேற்பர். பாலாவின் முதல் படமான சேது 1999-ல் வெளியானது. பாலாவின் படங்களில் உங்களை கவர்ந்தது எது?

News December 9, 2024

நீ எங்க போனாலும் நா விட மாட்டேன்

image

பாம்புகள் பழிவாங்கும் என படங்களில் காட்டுவார்கள். அது நிஜம் தான் என நம்பும் வகையில் உள்ளது இச்சம்பவம். உ.பி. மஹோபா மாவட்டத்தில் ரோஷ்னி(19) என்பவரை 11 மாதங்களில் 11 முறை ஃபாலோ பண்ணி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கடித்துள்ளது பாம்பு ஒன்று. தோட்டத்தில் இருக்கும் போது அப்பெண் ஒருமுறை மிதித்து விட்டாராம். அவ்வளவு தான், இப்போது வரையில் பழிவாங்கி வருகிறது பாம்பு. என்னதான்யா பண்றது இதற்கு…?

News December 9, 2024

RBIக்கு புதிய ஆளுநர்

image

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஆளுநர் சக்திகாந்த தாஸ் நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், மத்திய அரசின் வருவாய் துறை செயலாளராக இருக்கும் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். டிச.11ஆம் தேதி முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் RBIயில் பல மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 9, 2024

இந்திய அணிக்கு சிக்கல்

image

WTC தொடருக்கான தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தை பிடித்திருக்கிறது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் வென்றால் கூட இந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். அதன்பின், ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும். ஏற்கெனவே ஆஸ்திரேலியா நம்மைவிட அதிக புள்ளிகள் பெற்றிருப்பதால் இந்தியாவுக்கு சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது.

News December 9, 2024

கார்த்திகை தீபம் ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்

image

கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறந்தது. இதனால், தெய்வ சக்தி அதிகரிப்பதுடன், மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும் என்றும் குடும்பத்தில் குறைவில்லா மகிழ்ச்சி உண்டாகும் என்றும் புராணங்கள் கூறுகின்றன. திருக்கார்த்திகை தீபத்தன்று வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுங்கள்.

News December 9, 2024

வசூல் வேட்டையாடும் ‘புஷ்பா-2’

image

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா-2’ பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்து வருகிறது. படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ₹829 Cr வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிவேகமாக ₹800 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. கடந்த 4 நாட்களாக அதிகளவில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தெலங்கானாவில் இன்று முதல் கட்டணம் சற்று குறைக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

கால் விரல்கள் இப்படி இருக்கா? உங்க குணாதிசயம் இதுதான்!

image

அனைத்து கால் விரல்களும் ஒரே அளவிலிருந்தால், யதார்த்தமும், பிறரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருப்பீர்கள். கடுமையான உழைப்பாளி. கால் பெருவிரலை விட 2ம் விரல் நீளமாக இருந்தால், இயல்பிலேயே நீங்கள் படைப்பாளி. சாகச குணம் அதிகமாக நிறைந்திருக்கும். பெருவிரல் நீளமாகவும் மற்ற விரல்கள் வளைந்தும் இருந்தால், சுயசிந்தனை கொண்டவராக இருப்பீர்கள். பிடிவாத குணமும் நிறைந்திருக்கும். இதில் நீங்க எந்த லிஸ்ட்டு?

News December 9, 2024

அசாத்களின் வீழ்ச்சி.. முடிவுக்கு வந்தது குடும்ப ஆட்சி 1/3

image

சிரியாவை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த ஆசாத் குடும்பத்தினர், கிளர்ச்சிப் படைகள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். சிரியாவில், 2000ம் ஆண்டில் இருந்து அதிபராக இருந்து வருபவர் பஷார் அல் ஆசாத். அதற்கு முன் 30 ஆண்டுகளாக அவருடைய தந்தை ஹபீஸ் அல் ஆசாத் அதிபராக இருந்தார். கிட்டதட்ட ராணுவ ஆட்சி போல, 1970 முதல் அங்கு ஒற்றை ஆட்சி முறை தான் வழக்கத்தில் உள்ளது.

News December 9, 2024

அசாத்களின் வீழ்ச்சி.. முடிவுக்கு வந்தது குடும்ப ஆட்சி 2/3

image

ஷியா பிரிவைச் சேர்ந்த இவர்கள், அங்கு 90% இருந்த சன்னி பிரிவினர் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அரசின் அனைத்து உயர் மட்டங்களிலும் சன்னி மக்கள் அகற்றப்பட்டு, ஷியா மக்கள் அமர்த்தப்பட்டனர். இந்த 56 ஆண்டுகளில் அங்கு சரியான மருத்துவம் கிடைக்காதது, வேலைவாய்ப்பின்மை என மூன்றாம் தர நாடாக சிரியா மாறியது. இதனை எதிர்த்து தொடங்கிய உள்நாட்டு போரில், இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

error: Content is protected !!