India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘புஷ்பா -2’ திரைப்படத்தில், தான் ஏற்று நடித்துள்ள ஸ்ரீவள்ளி கேரக்டர் குறித்து ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதில் அவர், ஸ்ரீவள்ளி வெறும் கதாபாத்திரம் அல்ல; அது என் இதயத்திற்கு நெருக்கமான, என் உண்மையான கேரக்டர். ஸ்ரீவள்ளியை நீங்கள் இந்த அளவுக்கு கொண்டாடுவது என்னை நெகிழச் செய்கிறது. எனினும், புஷ்பா இல்லாமல் இந்த ஸ்ரீவள்ளி இல்லை எனக் கூறியுள்ளார்.
தன்னை பற்றி தவறான தகவலை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை. கனிமவள ஊழலைத் தடுப்பதற்காக ஏல முறையை மட்டுமே அவர் பேசியுள்ளார். ஆனால், உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை ஸ்டாலின் ‘X’இல் வெளியிட்டு கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது என கொந்தளித்துள்ளார்.
பான் கார்டை டிஜிட்டல்மயமாக்கும் நோக்கில் ‘பான் 2.0’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. இந்த பணியின் போது போலி பான் கார்டுகள் கண்டறியப்படும். மேலும், ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருந்தால் அவருக்கு ₹ 10,000 அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். எனவே, எக்ஸ்ட்ரா பான் கார்டு வைத்திருப்போர் உடனடியாக INCOME TAX அதிகாரியிடம் தெரிவித்து, அதை ரத்து செய்து கொள்வது நல்லது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், நாளை தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது.
விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் திமுகவை சீண்டியுள்ளார் ஆதவ் அர்ஜுன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடுக்கப்பட்டோருக்கு அதிகாரம் கிடைக்கக்கூடாது என்பதுதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை என்பதை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். அந்த மனநிலையை உடைத்தெறிய வரும் தேர்தலில் போராடுவேன். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவ(ன்) மறைவதில்லை என தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்ததை சுட்டிக்காட்டிய அவர், இதற்கு பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததுதான் காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
கருப்பு கவுனி அரிசியில் உள்ள ஃபைட்டோ நியூட்ரியண்டுகள், உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கு அவசியமானது. இதில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள், உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகின்றன. இந்த அரிசி புற்றுநோயை எதிர்த்து போராடவும், புற்றுநோய் செல்களை அழிக்கவும் வல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும் இதில் இருக்கும் புரதங்கள் மற்றும் வைட்டமின் ஈ, முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.
பொறுப்பு கிடைத்தபோது இருந்த மனநிலையிலேயே, இடைநீக்கத்தின்போதும் இருந்தேன் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்களுக்கு நன்கு தெரியும் எனக்கூறிய அவர், மீண்டும் மன்னர் ஆட்சி என்பதை குறிப்பிட்டு, கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம் என சூளுரைத்துள்ளார்.
மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர INDIA கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரியசக்தி மின்திட்டத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக, அதானி மீது புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்னையை கையிலெடுத்துள்ள எதிர்க்கட்சிகள், மாநிலங்களவை தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானம் இன்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததால், தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, இன்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி, விரைந்து ஒப்புதல் பெற அரசு திட்டமிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.