News December 10, 2024

புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக்குங்கள்

image

பொது இடங்களில் புகைக்க தடை விதித்து கொண்டு வரப்பட்ட சட்டத்தை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்த அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2008இல் அச்சட்டத்தை தாம் கொண்டு வந்ததாகவும், ஆனால், அதை செயல்படுத்துவதில் அரசு படுதோல்வி அடைந்து விட்டதாகவும் அவர் சாடியுள்ளார். இதனால்தான், அப்பாவி பெண்களும், குழந்தைகளும் நுரையீரல் புற்று நோய்க்கு ஆளாவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

News December 10, 2024

பாேன் ஓட்டுக்கேட்பு.. இனி IG உத்தரவு வேண்டும்

image

அவசரகாலத்தில் போனை ஓட்டுக்கேட்பது (இடைமறிப்பு) தொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத் துறை புதிய வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. அதில் IG நிலையிலான காவல்துறை அதிகாரிகள் உத்தரவு இருந்தால்தான் அதை செய்ய வேண்டும், 7 நாள்களுக்குள் அதை அவர் உறுதி செய்யவில்லையேல், பதிவை வேறு எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. 2 நாள்களுக்குள் அழிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News December 10, 2024

இன்று கனமழை.. நாளை மிக கனமழை

image

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூரில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூரில் கனமழை பெய்யலாம் என கணித்துள்ளது.

News December 10, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால்.
▶குறள் இயல்: குடியியல்.
▶அதிகாரம்: குடிசெயல்வகை.
▶குறள் எண்: 1024
▶குறள்: சூழா மல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு
▶பொருள்: தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

News December 10, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶நாள்- டிசம்பர்- 10 ▶கார்த்திகை – 25 ▶கிழமை: செவ்வாய் ▶ஆண்டு: குரோதி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM, 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: தசமி▶சூலம்: வடக்கு▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை ▶;சுபமுகூர்த்தம்: இல்லை ▶நட்சத்திரம்: உத்திரட்டாதி.

News December 10, 2024

நீங்க குடிக்கிற டீயில இஞ்சி இருக்கா?

image

இஞ்சி டீயில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சுவாச பிரச்னைகளை எதிர்த்து போராடுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் செரிமானத்தை தூண்டுவதற்கு இஞ்சி டீ சிறந்த காரணியாக உள்ளது. குமட்டல் மற்றும் வாந்தியை தடுக்கும் தன்மை இதில் அதிகம் உள்ளது.

News December 10, 2024

பலவீனமாகும் எலும்புகளும்.. அறிகுறிகளும்..

image

எலும்பு திசுக்கள் ஆபத்தில் உள்ளன என்பதை சில முக்கிய அறிகுறிகள் உணர்த்தும். தொடர்ச்சியாக பல மாதங்கள் முதுகு வலி இருந்தால், அது ஆரோக்கியமற்ற எலும்புகளின் அறிகுறியாக இருக்கலாம். தோல் உரிவது, நகங்கள் உடைவது போன்றவை ஊட்டச்சத்துக் குறைபாடுகளின் அறிகுறி. மேலும் உங்களால் தூக்க முடிந்த பொருட்களைத் திடீரென தூக்க முடியவில்லை என்றாலும், அதுவும் எலும்பு பிரச்சனைகளின் அறிகுறி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News December 10, 2024

ராசி பலன்கள் (10-12-2024)

image

➤மேஷம் – ஆதாயம் ➤ ரிஷபம் – ஜெயம் ➤மிதுனம் – நன்மை ➤கடகம் – நிம்மதி ➤சிம்மம் – உதவி ➤கன்னி – அமைதி ➤துலாம் – புகழ் ➤விருச்சிகம் – சுகம் ➤தனுசு – லாபம் ➤மகரம் – வெற்றி ➤கும்பம் – வரவு ➤மீனம் – களிப்பு.

News December 10, 2024

மீண்டும் ஹாலிவுட்டில் தனுஷ்.. படம் பேரை பாருங்க!

image

மீண்டும் ஹாலிவுட் திரைப்படத்தில் தனுஷ் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஹாலிவுட்டில் வளர்ந்து வரும ஸ்டாராக உள்ள சிட்னி ஸ்வீனியுடன் இணைந்து அப்படத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. சோனி புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு STREET FIGHTER எனப் பெயரிடப்பட்டுள்ளது. எனினும், தனுஷ் தரப்பில் இருந்து இதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

News December 10, 2024

உயிரைப் பறித்த மசாஜ்: பாடகிக்கு நேர்ந்த சோகம்!

image

தாய்லாந்தில் மசாஜ் செய்துகொண்ட பாடகி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடகி பிங் சியடாவுக்கு தோள்பட்டையில் வலி இருந்துள்ளது. ஒரு மசாஜ் செய்தால் சரியாகும் என பார்லர் சென்றவருக்கு, கழுத்து சுளுக்கு எடுத்து மசாஜ் செய்யப்பட்டது. அதன்பின், அவரின் வலப்பக்க கை, கால்கள் செயலிழக்க, முடிவில் அவர் உயிரிழந்தார். கழுத்து, முதுகுத்தண்டில் மசாஜ் செய்யும்போது கவனம் தேவை என்கின்றனர் டாக்டர்கள்.

error: Content is protected !!