News December 10, 2024

கோடிகளில் போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா

image

கேரளாவின் ஆலப்புழாவில் ஆல்யா சொந்தமாக ₹2 கோடிக்கு போட் ஹவுஸை ஒன்றை வாங்கியுள்ளாராம். இப்படகில் பெரிய ஹால், பெட்ரூமுடன் மிதந்து கொண்டே ஜாலியாக நேரத்தை கழிக்க DJ அறையும் உள்ளதாம். நேரத்தை செலவிட பலரும் இது போன்ற போட் ஹவுஸை தேர்ந்தெடுப்பதால், அந்த தொழிலில் முதலீடு செய்துள்ளாராம். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் “பேங்க் லோன் எடுத்துதான் வீடு கட்டினேன்” என்றார், அப்புறம் எப்படி ₹2 கோடிக்கு போட்?

News December 10, 2024

அப்போ அந்த 11.70 லட்சம் பேர் என்ன பண்றாங்க?

image

2024-25 நிதியாண்டின் முதல் 8 மாதங்களில், நாடு முழுவதும் 11.70 லட்சம் குழந்தைகள் பள்ளிக் கல்வியை பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான மத்திய அரசின் தரவுகள் அடிப்படையில், உ.பி.யில் மட்டும் 7.84 லட்சம் குழந்தைகள் பள்ளிக் கல்வியை பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதேபோல ஜார்க்கண்ட் 65,000, அசாமில் 63,000 குழந்தைகளும் பள்ளிக் கல்வியை பெறவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

News December 10, 2024

கோலி விரைவில் கம்பேக் கொடுப்பார்: ஹர்பஜன் சிங்

image

கோலி பின்னடைவில் இருந்து மீண்டு, விரைவில் கம்பேக் கொடுப்பார் என ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 3ஆவது டெஸ்டில் அவர், ஆஸி. பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ள பேக் புட் பயிற்சி எடுத்து வருவதாகவும், அடுத்த போட்டி நடக்கும் காபா மைதானத்தில் கோலிக்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அடுத்த டெஸ்டில் கோலியிடம் மிகச் சிறப்பான ஆட்டம் வெளிப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News December 10, 2024

கதாநாயகி ஆவேன் என நினைக்கல: மீனாட்சி செளத்ரி

image

ஒரு கதாநாயகி ஆவேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என நடிகை மீனாட்சி செளத்ரி தெரிவித்துள்ளார். அவர், “என் தந்தை ராணுவ வீரர் என்பதால் என்னை கட்டுப்பாடுகளோடு வளர்த்தார். அனைத்து விளையாட்டுகளிலும் என்னை பங்கேற்க வைத்தார். பேட்மிண்டனில் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அவர் என்னை ஒரு விளையாட்டு வீராங்கனையாக்க விரும்பினார் ஆனால் காலம் என்னை நடிகையாக மாற்றிவிட்டது” என்றார்.

News December 10, 2024

I.N.D.I.A கூட்டணிக்கு பாமக ஆதரவு

image

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக திடீர் திருப்பமாக, அதானி விவகாரத்தில் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதானி முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை (அ) வேறு எந்த விசாரணையோ அனைத்தையும் ஆதரிக்கத் தயார் என அறிவித்த அன்புமணி, அதானி குழுமத்திடம் தமிழ்நாடு மின்வாரியம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் முதல்வரின் பதில் என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

News December 10, 2024

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

image

TN சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றும், இன்றும் நடந்த சிறப்புக் கூட்டத்தில் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு, அதானியை சந்தித்ததாக எழுந்த சர்ச்சை, 10.5% வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்துக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

News December 10, 2024

நேரில் உருக்கமாக அஞ்சலி செலுத்திய உதயநிதி

image

உடல்நலக்குறைவால் உயிரிழந்த திமுக முன்னாள் எம்பி மோகன் உடலுக்கு உதயநிதி கண் கலங்க நேரில் அஞ்சலி செலுத்தினார். 1980இல் கோவை MPயாகவும், 1989ல் சிங்காநல்லூர் MLAவும் தேர்வு செய்யப்பட்டார். திமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர், கொங்கு மண்டலத்தில் திமுக வளர காரணமாகவும் இருந்தார். அவரது மறைவு திமுகவுக்கு பெரும் இழப்பு எனக் குறிப்பிட்ட உதயநிதி, குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

News December 10, 2024

இந்திய அணியின் பொக்கிஷம் முகமது ஷமி: ஆண்டி ராபர்ட்ஸ்

image

முகமது ஷமி இந்தியாவின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆண்டி ராபர்ட்ஸ் பாராட்டியுள்ளார். பும்ரா அளவுக்கு விக்கெட் எடுக்காமல் இருந்தாலும், பந்தை ஸ்விங் செய்வதில் ஷமியை போன்ற வீரரை பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். முகமது சிராஜ் அவரின் அருகில் கூட வரமுடியாது என்றும், இந்திய அணியில் ஷமிக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News December 10, 2024

PM மோடிக்கு CM ஸ்டாலின் அவசர கடிதம்

image

SC, ST, OBC மாணவர்கள் போஸ்ட்-மெட்ரிக், பிரீ-மெட்ரிக் ஸ்காலர்ஷிப் பெற குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை ₹2.5 லட்சத்திலிருந்து ₹8 லட்சமாக உயர்த்த வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். EWS பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பை மத்திய அரசு ₹8 லட்சமாக மாற்றி அமைத்துள்ளதையும் CM மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

News December 10, 2024

டங்ஸ்டன் சுரங்கத்தை தம்பிதுரை ஆதரித்தாரா?: EPS

image

மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை திமுக அரசு திசை திருப்ப முயல்வதாக இபிஎஸ் குற்றஞ் சாட்டியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்தாண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மசோதா தாக்கலின் போது ராஜ்ய சபாவில் ADMK எம்பி தம்பிதுரை பேசியது என்னவென்று விளக்கினார். அப்போது, மசோதாவை மட்டுமே தம்பிதுரை ஆதரித்ததாகவும், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அவர் ஆதரவளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!