India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CUET-UG 5 தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு UGC தலைவர் ஜெகதீஷ் குமார் ஒரு நற்செய்தியை
அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “2025ஆம் ஆண்டு முதல் CUET-UG தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். 63 பாடங்களில் தேர்வு நடத்தப்படும். அதில் எந்த பாடத்திற்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்று கூறினார். இத்தேர்வானது, நாட்டின் மத்திய பல்கலைக்கழகங்கள் & பிற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது.
இந்தியா பயப்படும் அளவுக்கு AUS வலுவான அணி அல்ல என முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். இந்திய அணி அனைத்துத் துறைகளிலும் தற்போது வலுவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட்டால், 3ஆவது டெஸ்டில் ஆஸி.யை எளிதில் வீழ்த்தலாம் என்றார். கோலியை ஆஸி. வீரர்கள் வீழ்த்தும் போது, அவர்களின் விக்கெட்டுகளை நம்மால் நிச்சயம் வீழ்த்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் சட்டசபைப் கூட்டம் நடந்த நாட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. 2021- 28 நாட்கள், 2022- 35 நாட்கள், 2023- 30 நாட்கள், 2024 (தற்போதுவரை) 19 நாட்கள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இப்படி இருந்தால், எப்படி மக்களின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் விவாதிக்க முடியும். தொகுதிகளுக்கான திட்டங்களை எவ்வாறு கேட்டுப்பெற முடியும் என அதிமுக கூறியுள்ளது.
சட்டமன்றத்தில் இன்று பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தனது தொகுதிக்குட்பட்ட வரதராஜபுரம் பகுதியை மழை வெள்ளத்திலிருந்து காப்பாற்றுமாறு வலியுறுத்தினார். இல்லையெனில், தான் மீண்டும் அங்கு எம்எல்ஏவாக முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த துரைமுருகன், செல்வப்பெருந்தகை என்னிடம் வசமாக சிக்கிக் கொண்டார். இனி அவர் எம்எல்ஏ ஆவது என் கையில்தான் உள்ளது என கிண்டலாக மிரட்டினார்.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) சுமார் ₹25,500 கோடி ($3 Billion) மதிப்பிலான கடனைப் பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இது தொடர்பாக 55-க்கும் மேற்பட்ட பொதுத்துறை & தனியார் வங்கிகளுடன் RIL பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் சந்தை விரிவாக்கம், நிலுவைத்தொகை செலுத்துவதை முகேஷ் நோக்கமாக கொண்டிருப்பதாக ப்ளூம்பெர்க் தகவல் தெரிவித்துள்ளது.
கோயில் யானைகளை புத்துணர்வு முகாம்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார். மனைவிகளுக்கு எத்தனை வசதி செய்து கொடுத்தாலும், வெளியே அழைத்து செல்லாவிட்டால் குறை சொல்வார்கள், அதுபோல யானைகளையும் மாற்று இடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றார். புதுமண தம்பதிகள்தான் அப்படி நினைப்பார்கள், யானைகள் அப்படி நினைக்காது என அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.
குழந்தைகள் தொடர்ந்து மொபைல் போனில் விளையாடினால்: *பெருவிரல் வீங்கும் `video gamers thumb’ பாதிப்பு வரும் *போனுக்கு அடிமையாவர்; படிப்பு & அன்றாட செயல்கள் பாதிக்கும் *ஆன்லைன் விளையாடினால் தேவையின்றி முன்பின் தெரியாத நபர்களுடன் தொடர்பு ஏற்படும் *தூக்கமின்மை, சோர்வு, பலவீனம், கை- கால்- முதுகு- கழுத்துவலி, மன அழுத்தம், காரணமற்ற கோபம், எரிச்சல் ஏற்படும் *பொய் சொல்லுதல், ஒழுக்கக்கேடு அதிகரிக்கும்.
விசிக கொடி ஏற்றப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆதவ் அர்ஜூனா விவகாரம் அரசியலில் புயலை கிளப்பிய சூழலில், மதுரையில் விசிக கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டு, பின் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொடி ஏற்றியதை தடுக்க தவறியதால், VAO, வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது மீண்டும் ஆளும் DMK – VCK கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகையையும், மகளிர் உரிமைத் தொகையையும் சேர்த்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000-ஐ தமிழக அரசு வழங்கவுள்ளது. இதற்கான டோக்கன் டிச. 20-ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிகிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், IT செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்களை தவிர, மற்ற அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசுத்தொகை கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களை தணிக்கை செய்து வெளியிட உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவதூறான கருத்துகளும், வரம்பு மீறிய ஆபாசக் காட்சிகளும் சீரியல்களில் ஒளிபரப்பப்படுவதாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.