India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று காலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்பதை வானிலை மையம் கணித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், ராமநாதபுரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
இந்தியா கூட்டணிக்கு தற்போது காங்கிரஸ் தலைமை வகித்து வருகிறது. இந்நிலையில் அக்கூட்டணிக்கு டிஎம்சி தலைவர் மம்தா தலைமை வகிக்க லாலு பிரசாத், சரத் பவார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்பிக்களுடன் ஆலோசனை நடத்திய ராகுல், கூட்டணியில் உள்ள கட்சிகளில் இருக்கும் சாதாரண நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், அவரது காதலர் ஆண்டனி தட்டிலுக்கும் கோவாவில் இன்று திருமணம் நடைபெறவுள்ளது. முதலில் காலையில் 2 பேரும் இந்துமத வழக்கப்படி திருமணம் செய்யவுள்ளனர். இதையடுத்து மாலையில் கிறிஸ்தவ மத வழக்கப்படி இன்னொரு முறை திருமணம் செய்யவுள்ளனர். 2 பேரின் திருமணத்திற்கும் திரையுலக பிரபலங்கள், 2 பேரின் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (டிச.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (டிச.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
▶குறள் பால்: பொருட்பால்.
▶குறள் இயல்: குடியியல்.
▶அதிகாரம்: குடிசெயல்வகை.
▶குறள் எண்: 123
▶குறள்: குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
▶பொருள்: குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.
▶நாள்- டிசம்பர்- 11 ▶கார்த்திகை – 26 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 11:15 AM – 12:00 AM, 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: வடக்கு▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை ▶சுபமுகூர்த்தம்: இல்லை ▶நட்சத்திரம்: ரேவதி ▶சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்.
அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் Eras Tour சிரீஸ் நிறைவுபெற்றுள்ளது. இதன் கடைசி நிகழ்வு கனடா வான்கூவரில் நடந்தது. கான்செர்ட் வரலாற்றிலேயே ஒரு சிரீஸ் இந்தளவுக்கு வசூல் குவித்தது இல்லை. ஒட்டுமொத்தமாக 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான (ரூ.17,000 கோடி) டிக்கெட் சேல்ஸ். 1 கோடிக்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனராம். இதுவரை 149 Eras Tour கான்செர்ட்ஸ் நடத்தியுள்ளார் டெய்லர். வசூல் பாடகி!
சிரியாவில் கடந்த 48 மணிநேரத்தில் இஸ்ரேல் ராணுவம் 250-க்கும் அதிகமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. முந்தைய சிரிய அரசின் ராணுவ தளவாடங்கள், வெடிகுண்டு காப்பகங்கள், ரேடார்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளாக சிரியாவுக்குள் கால் பதிக்காத இஸ்ரேல், அந்நாட்டு அரசு கவிழ்ந்ததை அடுத்து, கிளர்ச்சியாளர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிகிறது.
காதல் திருமணம் என்றாலே ஸ்பெஷல் தான். அதிலும் 2 விஞ்ஞானிகள் கல்யாணம் என்றால், கேட்கவே வேண்டாம். பிரேம் குமார்- நிமிஷா இருவரின் அழைப்பிதழ், அறிவியல் ஆய்வுக் கட்டுரை போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதில் பாசிடிவ் சார்ஜ், எலக்ட்ரான் பரிமாற்றம் என அறிவியல் சொற்களாக வருகிறது. உங்க கல்யாணத்துக்கு வந்துர்றோம், ஆனா இத படிச்சு புரிஞ்சுக்கலாம் முடியாது என ரிலேடிவ்ஸ் அலறாத குறையாம். இது சயின்டிபிக் காதல்!
Sorry, no posts matched your criteria.