India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி மயிலாடுதுறைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆயுதம் கொண்டு செல்ல உதவினால், சிரியா மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். கிளர்ச்சிப்படை ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து, சிரியா அதிபர் அல் அசாத் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். இதையடுத்து சிரியாவில் ஆட்சியைப் பிடித்த கிளர்ச்சிப் படையினருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செயல்படாத ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ரூ.14,750 கோடி பணம் தேங்கி கிடப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், நவ.20ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 54.03 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் 11.30 கோடி கணக்குகள் செயல்படாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆஸி.க்கு எதிரான 2ஆவது டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் களமிறங்கினர். இப்போட்டியில் 2 பேரும் சரியாக பேட்டிங் செய்யாமல் சொதப்பினர். இதையடுத்து நடுவரிசையில் இறங்கிய ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. எனினும், பேட்டிங் வரிசையில் மாற்றமிருக்காது. ரோஹித் நடுவரிசையில் களமிறங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டங்ஸ்டன் விவகாரத்தில் CM ஸ்டாலினை கமல் பாராட்டியுள்ளார். மக்களின் விருப்பத்துக்கு மாறாக டங்ஸ்டன் சுரங்கம் அமையக் கூடாது என்பதில் ஸ்டாலின் நெஞ்சுரத்தோடு எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு பாராட்டத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டசபையில் அவரது பேச்சு, மக்கள் மீதான அவரது அக்கறையையும், இயற்கை காக்கப்பட வேண்டும் என்பதில் இருக்கும் ஈடுபாட்டையும் காட்டுவதாகவும் கமல் கூறியுள்ளார்.
நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ICICI, அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், வருகிற 14ஆம் தேதி இரவு 11.55 மணி முதல் மறுநாள் 15ஆம் தேதி காலை 6 மணி வரை RTGS பரிவர்த்தனை சேவை கிடைக்காது எனத் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணி நடைபெற இருப்பதே இதற்கு காரணம் என்றும், ஆதலால் வாடிக்கையாளர்கள் NEFT, IMPS, UPI மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும்படி ICICI கேட்டுக் கொண்டுள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படை ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால், அடுத்து அங்கு என்ன நடைபெறுமோ என பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் சிரியாவில் வேலை உள்ளிட்ட காரணத்திற்காக தங்கியிருந்த 75 இந்தியர்கள் இந்தியத் தூதரகங்கள் உதவியுடன் மீட்கப்பட்டு லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு விமானங்களில் திருப்பி அழைத்து வரப்படவுள்ளனர்.
JIO போன் பயனாளர்களுக்காக அந்நிறுவனம் புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது. 11 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட இத்திட்ட பலன்களைப் பெற ரூ.895 ரீசார்ஜ் செய்ய வேண்டும். அந்தத் தொகையை ரீசார்ஜ் செய்தால் தினமும் அன்லிமிடெட் அழைப்பு வசதி, தினமும் 50 இலவச எஸ்எம்எஸ் வசதியை அளிக்கிறது. 11 மாதங்களுக்கு மொத்தம் 24 ஜிபி டேட்டா, ஜியோ கிளவுட், ஜியோ சினிமா ஓடிடி சேவையையும் வழங்குகிறது.
விஜய்யின் தவெக கட்சிக்கு பிரபல நடிகர் நரேன் ஆதரவு தெரிவித்துள்ளார். விஜய் நடிக்கும் கடைசி படமான “தளபதி 69” படத்தில் அவருடன் இணைந்து நரேன் நடித்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சியைத் தொடங்கி, தமிழ் சினிமாவை விட்டு விஜய் விலகுவது கஷ்டமாக உள்ளது என்றார். விஜய் அரசியலில் சாதிக்க நினைப்பதாகவும், ஆதலால் அவருக்கு ஆதரவாக இருப்போம் என்றும் குறிப்பிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882இல் டிச. 11இல் பிறந்த பாரதியார், 7ஆவது வயதிலேயே கவிதை எழுதினார். தமிழ் மட்டுமன்றி இந்தி, சமஸ்கிருதம் மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். கவிதை எழுதுபவர் கவிஞரல்ல; கவிதையை வாழ்க்கையாக உடையவர், வாழ்க்கையையே கவிதையாகப் படைப்பவரே கவிஞர் என இலக்கணம் சொன்னவர் அவர். அவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பாரதி மறைந்தாலும் இன்னும் அவரின் புகழ் மறையவில்லை.
Sorry, no posts matched your criteria.