News December 11, 2024

தக்காளி விலை கிலோ ரூ.20ஆக வீழ்ச்சி

image

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி விலை கிலோ ரூ.60 வரை அண்மையில் அதிகரித்திருந்தது. இந்நிலையில் வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை கிலோ ரூ.20ஆக குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக குறைந்த அளவில் தக்காளி வாங்கிய மக்கள், மீண்டும் பழையபடி கிலோ கணக்கில் வாங்கத் தொடங்கியுள்ளனர். உங்கள் பகுதியில் தக்காளி விலை என்ன? கீழே கமெண்ட் பண்ணுங்கள்.

News December 11, 2024

நம்பிக்கையில்லா தீர்மானம்: சட்ட விதிகள் சொல்வது என்ன?

image

அரசியல் சட்டத்தின் 67பி பிரிவின் படி, ராஜ்யசபா தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும். இத்தீர்மானம் பெரும்பான்மையுடன் இரு சபைகளிலும் நிறைவேற வேண்டும். இதனை ஏற்க 14 நாள்கள் அவகாசம் தர வேண்டும். குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 20ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அத்துடன், இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லாததால், தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

News December 11, 2024

2024 கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்

image

2024ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய வீரர்கள் 2 பேர் இடம் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் இந்திய ஸ்டார் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா 7வது இடம் பிடித்துள்ளார். இந்தாண்டு நடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல ஹர்திக் முக்கிய காரணமாக இருந்தார். அதைப்போல் ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய(uncapped) வீரர் ஷஷாங்க் சிங் 9வது இடத்தில் உள்ளார்.

News December 11, 2024

இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் எது தெரியுமா?

image

2024ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் Indian Premiere League (IPL) முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் T20 World Cup, மூன்றாவது இடத்தில் Barathiya Janatha Party ஆகியவை உள்ளன. Election Results 2024 நான்காவது இடத்தை பிடித்த நிலையில், மறைந்த ரத்தன் டாடா ஏழாவது இடத்தில் இருக்கிறார்.

News December 11, 2024

கொரோனா நிதி ₹265 கோடி பயன்படுத்தப்படவில்லை

image

தமிழகத்திற்கு வழங்கப்பட்ட கொரோனா நிதியில் ₹265 கோடி நிதியை செலவிடப்படவில்லை என CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடரை சமாளிக்க மத்திய அரசின் ₹1,435 கோடி, மாநில அரசின் ₹351 கோடி என மொத்தம் ₹1,787 கோடி நிதியை தேசிய சுகாதார இயக்கம் வாங்கியது. இதில் ₹264.48 கோடி நிதி பயன்படுத்தப்படவில்லை. அதேபோல, 3,757 ஆக்சிஜன் செறிவூட்டிகளில் 147 பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 11, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 11, 2024

மகாராஷ்டிரா CM உடன் அதானி சந்திப்பு

image

மகாராஷ்டிரா CM தேவேந்திர ஃபட்னவிஸை தொழிலதிபர் கெளதம் அதானி மும்பையில் சந்தித்து பேசியுள்ளார். அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து விசாரணை கோரி எதிர்க்கட்சி MPக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அம்மாநில அரசு கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

News December 11, 2024

லாபத்தை அள்ளி தந்த தங்கப் பத்திரம்

image

2019-20ஆம் நிதியாண்டில் வெளியிட்ட 7ஆம் கட்ட தங்கப்பத்திர கணக்கை முதிர்வுக்கு முன்னதாக முடிக்க விண்ணப்பித்தவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ₹7,644 வழங்கப்படும் என RBI அறிவித்துள்ளது. இது வெளியிடப்பட்ட விலையை விட 101% அதிகமாகும். இது தவிர ஆண்டுக்கு 2.5% வட்டியும் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தங்க இறக்குமதியை குறைப்பதற்காக 2015இல் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

News December 11, 2024

பாரசிட்டமால் மாத்திரைகளில் தரமில்லை: ஆய்வில் தகவல்

image

பாரசிட்டமால் மாத்திரைகளில் தரமில்லை என்பது ஆய்வில் தெரிய வந்திருப்பதாக மத்திய சுகாதார இணையமைச்சர் அனுப்ரியா பட்டேல் தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் ஆண்டிபயாடிக் நிறுவனம், கர்நாடக ஆண்டிபயோடிக் நிறுவனம், பார்மாசூடிகல்ஸ் நிறுவனம் தயாரித்த மெட்ரானிடசோல், பாரசிட்டமால் மாத்திரைகளில் தரமில்லை என சோதனையில் தெரிய வந்ததாக அவர் கூறினார். அந்நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

News December 11, 2024

கீர்த்தி சுரேஷுக்கு நாளை டும், டும், டும்….

image

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், அவரது காதலர் ஆண்டனி தட்டிலுக்கும் கோவாவில் நாளை திருமணம் நடைபெறவுள்ளது. முதலில் நாளை காலையில் 2 பேரும் இந்துமத வழக்கப்படி திருமணம் செய்யவுள்ளனர். இதையடுத்து மாலையில் கிறிஸ்தவ மத வழக்கப்படி இன்னொரு முறை திருமணம் செய்யவுள்ளனர். 2 பேரின் திருமணத்திற்கும் திரையுலக பிரபலங்கள், 2 பேரின் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!