News December 11, 2024

BREAKING: பக்தர்கள் மலையேற அனுமதியில்லை

image

திருவண்ணாமலை மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தீபம் ஏற்றும் பக்தர்கள் மட்டுமே கட்டுப்பாடுகளோடு மேலே அனுமதிக்கப்படவுள்ளனர். அதேநேரம், கோயிலுக்கு வரும் 40 லட்சம் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News December 11, 2024

மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது

image

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நாளை பிற்பகல் 1 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடுகிறது. இதில் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக அதானி விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் பிரச்னை, நாடாளுமன்ற அவை முடக்கம் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

News December 11, 2024

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வினேஷ் போகத்

image

இந்தியாவில் 2024ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் முன்னாள் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் நிதிஷ் குமார், சிராக் பஸ்வான், ஹர்திக் பாண்டியா, பவன் கல்யாண் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதிகம் தேடப்பட்ட இடங்களின் பட்டியலில் அஜர்பைஜான் முதலிடத்திலும், பாலி, மணாலி, கஜகஸ்தான், ஜெய்ப்பூர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

News December 11, 2024

பாரதியார் சிலை பல்லக்கு தூக்கிய ஆளுநர் RN ரவி

image

சென்னையில் கிண்டி ராஜ்பவனில் நடந்த பாரதியாரின் 143ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில், பாரதியாரின் சிலையை பல்லக்கில் வைத்து கவர்னர் RN ரவி தூக்கிச் சென்றார். முன்னதாக திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்திற்கு சென்ற அவர், பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News December 11, 2024

3 நாள்களுக்கு கனமழை

image

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், ஏற்கெனவே டெல்டா, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் அடுத்த 3 நாள்களுக்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 11, 2024

சும்மா படுத்திருந்தா ₹1.16 லட்சம் பரிசு

image

சீனாவில் 8 மணிநேரம் செல்போனை தொடாமல் இருக்கும் வினோதப் போட்டி நடைபெற்றது. போட்டியாளர்கள் 8 மணி நேரம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படுக்கையில் படுத்திருக்க வேண்டும். அவ்வப்போது கழிவறை செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். உணவு, பானம் என அனைத்தும் படுக்கைக்கே வந்துவிடும். இந்த போட்டியில் பங்கேற்ற டோங் என்ற பெண், எந்தவித பதைபதைப்பும் இன்றி வெற்றி பெற்று ₹1.16 லட்சம் பரிசுத்தொகையை தட்டிச் சென்றார்.

News December 11, 2024

இந்திய வம்சாவளியினருக்கு புதிய சிக்கல்

image

USல் பிறப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்ய உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். பிறப்புரிமை குடியுரிமையை கேலிக்குரியது எனக் கூறும் அவர், பதவியேற்றதும் 150 ஆண்டுக்கு மேலாக உள்ள இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவார் எனத் தெரிகிறது. இதனால் இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. முந்தைய பதவிக்காலத்திலும் அவர் இவ்விவகாரத்தை எழுப்பியிருந்தாலும், மாற்றம் நிகழவில்லை.

News December 11, 2024

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ‘மகாராஜா’

image

இந்தியாவில் 2024ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ 6ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்த பட்டியலில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான ‘ஸ்திரீ 2’ முதலிடம் பிடித்துள்ளது. ‘கல்கி 2898ஏடி’ 2ஆவது இடத்திலும், ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ 7ஆவது இடத்திலும், ‘G.O.A.T’ 8ஆவது இடத்திலும், ‘சலார்’ 9ஆவது இடத்திலும், ‘ஆவேஷம்’ 10ஆவது இடத்திலும் உள்ளன.

News December 11, 2024

கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவிப்பு

image

2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ANI நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. X தளத்தில் இதனை மறுத்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி தேர்தலை தனியாக எதிர்கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.

News December 11, 2024

பாதி கதையை கேட்டதும் ஓகே சொல்லிட்டேன்

image

நமது வாழ்க்கையில் இதுபோன்ற ஆண்டனி எப்போது வருவார் என்ற கேள்வி ‘லக்கி பாஸ்கர்’ படத்தை பார்த்த பலருக்கும் எழுந்திருப்பதாக ராம்கி கூறியுள்ளார். இப்படம் குறித்து பேசிய அவர், ஆண்டனி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஆழமான இடத்தை பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். இயக்குநரிடம் பாதி கதையைக் கேட்டதும் ஓகே சொன்னதாகவும், இப்படம் நினைத்த மாதிரியே 5 மொழிகளிலும் ஹிட்டானது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

error: Content is protected !!