India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சி, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கடந்த நவம்பரில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு 14% குறைந்துள்ளதாக AMFI தெரிவித்துள்ளது. கடந்த நவம்பரில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மூலம் ₹35,943 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபரில் ₹41,887 கோடியாக இருந்தது. அமெரிக்க அதிபர் தேர்தல், புவிசார் அரசியல் பதற்றம் ஆகிய காரணங்களால் மிகப்பெரிய தொகையை முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாமல் இருந்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
பும்ராவுக்கு காயம் ஏற்பட்டால் BGT தொடரை வெல்லும் இந்திய அணியின் கனவு தவிடு பொடியாக விடும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்தார். மேலும் ஒரு பவுலரை மட்டுமே அணி சார்ந்து இருப்பதை இதுவரை பார்த்து இல்லை என்ற அவர், 3வது டெஸ்டில் கேப்டன் ரோஹித் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார். 2வது டெஸ்ட்டில் பந்துவீசி கொண்டிருந்த பும்ரா தீடீரென காயம் ஏற்பட்டு பின்னர் மீண்டும் விளையாடினார்.
வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் 20ம் தேதி மாவட்ட தலைநகரில் PMK போராட்டம் அறிவித்துள்ளது. உரிய தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து வரும் 24ம் தேதியோடு 1000 நாள்கள் ஆவதாகக் குறிப்பிட்டுள்ள ராமதாஸ், CM ஸ்டாலின் வன்னியர்களுக்கு பெரும் துரோகம் செய்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். காஞ்சியில் நடக்கும் போராட்டத்தில் ராமதாஸ் பங்கேற்கிறார்.
CUTE தேர்வு நடைமுறையை மாற்றியுள்ளதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த ஆண்டு முதல் 12ஆம் வகுப்பில் எந்த பாடத்தில் படித்திருந்தாலும், விரும்பிய பாடத்திற்கு தேர்வு எழுதலாம். இந்த தேர்வுக்கான பாடங்கள் 63இல் இருந்து 37 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஹைபிரிட் முறை தேர்வு நடத்துவதில் சிக்கல்கள் உள்ள காரணத்தினால், இனி கணினி வழியில் மட்டுமே க்யூட் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இன்று PM மோடியுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு மாநில அரசுடன் பேசி ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி TN பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் விதிமீறல் இல்லாமல் இயங்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ரேப்பிடோ உள்ளிட்ட பைக் டாக்ஸிகளை கண்காணிக்க சொல்லி இன்று காலை போக்குவரத்து ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இதனால், அவற்றின் சேவைகள் பாதிக்கப்படும் என்று செய்தி வெளியான நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். விதிமீறல்கள் இல்லாமல் இருப்பதை மட்டுமே கவனிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
MH தேர்தலில் EVM மெஷினில் மோசடி நடந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் ‘இந்தியா கூட்டணி’ வழக்கு தொடர திட்டமிட்டுள்ளது. நடந்து முடிந்த MH தேர்தலில், ‘மகா விகாஸ் அகாடி’ பெரும் தோல்வியை சந்தித்தது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஹடப்சர் தொகுதி NCP(SP) வேட்பாளர் பிரசாந்த் ஜக்தப் இதனை உறுதி செய்துள்ளார். ஏற்கெனவே Shiv Sena (UBT) சார்பில் SCஇல் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்கராவின் அசிஸ்டன்ட் டைரக்டர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கார் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘LIK’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில் அவரது மனைவியின் குடும்பத்தினர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன் சுபாஷ் எழுதிய 20 பக்க கடிதத்தில், அவரது மனைவி ஜீவனாம்சமாக ₹3 கோடி கேட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து, அதுலின் மனைவி, மாமனார், மாமியார், மச்சினன் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.