News December 12, 2024

இங்கு சாப்பிட காசு வேண்டாம்.. குப்பை போதும்!

image

சத்தீஸ்கரில் அம்பிகாபூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஹோட்டலில், பிளாஸ்டிக் கழிவுகள் கொடுத்தால் உணவுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கால் கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இட்லி உள்ளிட்ட டிபன் வகைகளும், 1 கிலோ கழிவுகளுக்கு ஃபுல் மீல்ஸும் கொடுக்கிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பசியோடு யாரும் இருக்கக்கூடாது என்ற நோக்கில் இந்த Garbage Cafe செயல்பட்டு வருகிறதாம்.

News December 12, 2024

ரூ.33 லட்சம் கோடிக்கு சொத்து… உலக உச்சம் தொட்ட மஸ்க்

image

உலகில் நம்பர் 1 கோடீஸ்வரராக உள்ளார் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க். தற்போது அவரின் சொத்து மதிப்பு சட்டென இந்திய மதிப்பில் ரூ.4.50 லட்சம் கோடி (50 பில்லியன் டாலர்)அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன்மூலம் அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.33.92 லட்சம் கோடியாக (439.2 பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளது. உலக அளவில் தனிநபர் ஒருவருக்கு மிக அதிக அளவு சொத்து இருப்பது இதுவே முதல்முறை.

News December 12, 2024

பதவி உயர்வுக்காக மத்திய அரசுக்கு தன்கர் ஜால்ரா: கார்கே

image

மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பதவி உயர்வுக்காக மத்திய அரசுக்கு ஜால்ரா போடுவதாக கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் தன்கர் பள்ளித் தலைமை ஆசிரியர் போல செயல்படுவதாகவும், எதிர்கட்சிகள் தரப்பில் முக்கியமான விவகாரம் குறித்து பேச முயன்றால் தன்கர் அனுமதிப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் போல தன்கர் செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.

News December 12, 2024

தனுஷ் எனது FRIEND.. மனம் திறந்த நயன்தாரா

image

திருமண ஆல்பம் ஓடிடியில் வெளியான விவகாரத்தால் தனுஷ், நயன்தாரா இடையே மோதல் நிலவுகிறது. நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் வழக்கும் தொடுத்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா, தனுஷும், தாமும் முன்பு நல்ல பிரெண்ட்சாகத்தான் இருந்ததாகவும், ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அவை அனைத்தும் மாறி விட்டதாகவும் கூறியுள்ளார். இதற்கு தனுசுக்கு என சில காரணங்கள், தனக்கும் சில காரணங்கள் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

3ஆவது டெஸ்டில் மழை குறுக்கிட வாய்ப்பு

image

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான BGT கோப்பை 3ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வருகிற 14ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில், பிரிஸ்பேனில் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் 3ஆவது போட்டியில் பதிலடி கொடுக்க நினைத்திருந்த இந்தியாவின் இலக்கு தவிடுபொடு ஆகிவிட்டது. WAY2NEWS பயனாளர்களே டெஸ்ட் குறித்த தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

News December 12, 2024

பாரதியார் பொன்மொழிகள்

image

*மனமே கேள்! விண்ணின் இடி முன் விழுந்தாலும் பான்மை தவறி நடுங்காதே, பயத்தால் ஏதும் பயனில்லை
*கவலை துறந்து இங்கு வாழ்வது வீடு!
*கடமை அறியோம் தொழில் அறியோம்; கட்டென்பதனை வெட்டென்போம்!
*சென்றது இனி மீளாது, சென்றதனைக் குறிக்காமல் ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று எண்ணி வாழ்வீர்!
*அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால், அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்.

News December 12, 2024

கனமழை: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்று மாலை முதலே விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மேலும் நாளை கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி, காரைக்காலில் இன்று கல்வி நிறுவனங்கள் விடுமுறை விடப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

வாட்ஸ் அப், பேஸ்புக் சேவை பாதிப்பு

image

வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் முதல் இந்த தளங்களில் செய்தியை யாராலும் அனுப்ப முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் லட்சகணக்கான மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து அந்த தளங்களின் தாய் நிறுவனமான மேட்டா தரப்பில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இப்பிரச்சினை ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் சரி செய்யப்படும் எனக் கூறியுள்ளது.

News December 12, 2024

காலை 4 மணி வரை 17 மாவட்டங்களில் மழை

image

இன்று காலை 4 மணி வரை 17 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

News December 12, 2024

டிசம்பர் 12: வரலாற்றில் இன்று

image

*1911 – இந்தியாவின் தலைநகரம் டெல்லிக்கு மாற்றப்பட்டது.
1931: மூத்த நடிகை சவுகாரு ஜானகி காலமானார்
1940: என்சிபி நிறுவனர் சரத்பவார் பிறந்தார்
*1940 – விடுதலை வீரர் தியாகி விஸ்வநாததாஸ் மறைந்தார்
*1941 – யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை ஹிட்லர் அறிவித்தார்
1950: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தார்
1981: முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்தார்

error: Content is protected !!