India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
17 மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் 1-5ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை ஆகும். நாகையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தி.மலை, வேலூர், கடலூர் மாவட்டங்களிலும் விடாது மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
90களிலேயே இந்த பாட்டை எழுதி விட்டார்கள். அப்போதே நாடறிந்த கலைஞன். அள்ள அள்ள குறையாத வசூலைக் கொடுக்கும் தமிழ் சினிமாவின் அட்சயப்பாத்திரம். இவரின் தோல்வி படங்களும் ₹200 கோடி வசூல் செய்யும். இப்போதைய பான் இந்திய ஸ்டார்களின் ஃபேவரிட் ஹீரோ. 50 ஆண்டுகள் 170 படங்களை கடந்து விட்டாலும், தமிழ் சினிமாவின் முதல் ₹1000 கோடி வசூலை இவரே செய்து முடிப்பார் என்றால், அதுவே இவரின் உச்சம். Happy Birthday Super Star
13 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக செங்கல்பட்டு, அரியலூர், காஞ்சி, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, சென்னை, விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை ஆகும். நாகூர் தர்கா சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகையிலும், கனமழையால் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆயுள் காப்பீடு வர்த்தகம் 15.67% வளர்ச்சி அடைந்துள்ளது. ஆயுள் காப்பீடு கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் புதிய ஆயுள் காப்பீடு பாலிசி வர்த்தகம் ₹2.44 லட்சம் கோடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் LIC 16.08% வளர்ச்சி கண்டு ₹1.44 லட்சம் கோடிக்கு பாலிசி விற்பனை செய்துள்ளது. மீதமுள்ள ₹1 லட்சம் கோடி வர்த்தகத்தை தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ளன.
11 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காஞ்சி, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, சென்னை, விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாகூர் தர்கா சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகையிலும், கனமழையால் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்டவற்றை இலவசமாக அப்டேட் செய்யும் வசதி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்தது. எனினும் டிசம்பர் 14ஆம் தேதி வரை அதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நீட்டித்திருந்தது. இந்த அவகாசம் நாளை மறுதினத்துடன் முடியவடையவுள்ளது. அதன்பிறகு ரூ.50 கட்டணம். ஆதலால் இந்த இலவச சேவையை பயன்படுத்தி அப்டேட் செய்யும்படி நாட்டு மக்களை UIDAI கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, சென்னை, விழுப்புரத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, விழுப்புரத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், அமெரிக்கா, கனடா, மெக்சிகோவால் கூட்டாக நடத்தப்படுகின்றன. இதையடுத்து 2030இல் அப்போட்டிகள் மொராக்கோ, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளன. சென்டினரி போட்டிகள் அர்ஜெண்டினா, பராகுவே, உருகுவே நாடுகளிலும், 2034ஆம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் சவுதி அரேபியாவிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.