News December 12, 2024

சென்னைக்கு மேலே என்ன இது.. சாட்டிலைட் ஃபோட்டோ பாருங்க

image

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மையம், தமிழகம் – இலங்கை கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், மாநிலத்தின் பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில், தாழ்வு மையம் வேகமாக நகர்வதால், சென்னைக்கு மேலே சுனாமி அலையை போல மழை மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. சென்னையை சுற்றி கருமேகம் படையெடுத்து நிற்பதை சாட்டிலைட் ஃபோட்டோ காட்டுகிறது.

News December 12, 2024

நாளை வெளியாகும் ‘படை தலைவன்’ டிரெய்லர்

image

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லரை, நாளை மாலை 6 மணிக்கு அனிருத் வெளியிட உள்ளார். இப்படத்தை அன்பு இயக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். ராகவா லாரன்ஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கடந்த செப்டம்பரில் வெளியாக வேண்டிய இப்படம், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதேபோல், கடந்த நவம்பரில் முதல் சிங்கிள் ‘உன் முகத்தை’ வெளியாகி வரவேற்பை பெற்றது.

News December 12, 2024

நாளை மாலை 6 மணிக்கு மேல் வீடுகளில் விளக்கு ஏற்றுங்க

image

கார்த்திகை தீபம் என்றாலே நினைவுக்கு வருவது அண்ணாமலையார் தீபம்தான். விளக்கை மாலை வேளைகளில் மட்டுமே ஏற்ற வேண்டும். அதிலும் திருவண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றிய பிறகு வீடுகளில் மாலை 6.05 மணிக்கு ஏற்றலாம். நாளை அசைவம் சாப்பிடக் கூடாது. விளக்கில் மஞ்சள் குங்குமம் இட்டு ஏற்ற வேண்டும். காமாட்சி அம்மன் விளக்கின் அடியில் காசு வைத்து ஏற்றினால் மகாலட்சுமி அருள் கிடைக்கும்.

News December 12, 2024

ஆவின் புதிய பால் அறிமுகம்.. கிரீன் மேஜிக் ப்ளஸ்

image

புதிய பால் பாக்கெட்டை ஆவின் அறிமுகம் செய்யவுள்ளது. இப்போது ஆவினில் ப்ளூ, கிரீன், ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பாக்கெட்டை ஆவின் அறிமுகம் செய்யவுள்ளது. கிரீன் கலர் பாக்கெட்டில் ‘கிரீன் மேஜிக் ப்ளஸ்’ என்ற பெயரில் அறிமுகமாகும் இந்த பாக்கெட், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலத்தில் வரும் 18-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.

News December 12, 2024

புதிய சாதனை படைத்த குகேஷ்

image

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நடப்பு சாம்பியன் டிங் லிரெனை 7.5 – 6.5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார் தமிழகத்தின் 18 வயது குகேஷ். இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பின், உலக சாம்பியனான இந்தியர் என்ற பெருமையுடன், மிக இளம்வயதில் உலக சாம்பியன் ஆன ரஷ்யாவின் காரி காஸ்பரோவின் சாதனையையும் குகேஷ் முறியடித்துள்ளார். இதன்மூலம், பல சாதனையாளர்கள் தமிழகத்தில் உருவாக குகேஷ் ஊக்கமளித்துள்ளார்.

News December 12, 2024

TNPSC குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் வெளியீடு

image

குரூப் 2, 2A தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது. வணிகவரி துணை அதிகாரி, தொழிலாளா் நலத்துறை உதவி ஆய்வாளா், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா், சாா்-பதிவாளர் உள்ளிட்ட 2,327 பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதம் நடந்த தேர்வை, 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம்.

News December 12, 2024

இந்து மதம் மீது திமுகவுக்கு தீராத வன்மம்: வானதி

image

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குறை கூறியுள்ளார். தமிழகத்தில் 23,500 கோயில்களில் அறங்காவலர் குழுக்களை தமிழக அரசால் நியமிக்க முடியவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், இந்து மதம் மீது தீராத வன்மம் கொண்ட அரசாக திமுக அரசு உள்ளதாகவும், சட்டமன்ற தேர்தலில் மக்கள், அதற்கு சரியான பதிலடி தருவார்கள் என்றும் சாடியுள்ளார்.

News December 12, 2024

ஷூட்டிங்கில் காயமடைந்த அக்‌ஷய் குமார்

image

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் HOUSEFULL 5 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று நடந்த சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது அவரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

News December 12, 2024

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தீமைகள் என்ன?

image

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ இந்திய ஜனநாயகத்தில் பல தீமைகளை ஏற்படுத்தும் என மாநில & பிராந்திய கட்சிகள் கருத்துகளை முன்வைக்கின்றன. அவை ▶சட்டப்பேரவையை விட மக்களவைக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும். ▶நாட்டின் பன்முகத்தன்மை பின்னுக்கு தள்ளப்படும். ▶பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இதுவரை இல்லாத அளவில் பல கட்டங்களாக தேர்தலை நடத்தவேண்டி வரும். ▶மக்கள்தொகை & சமூக அடிப்படையில் நிர்வாக குளறுபடிகள் ஏற்படும்.

News December 12, 2024

BREAKING: உலக சாம்பியன் ஆனார் குகேஷ்

image

உலக செஸ் போட்டியில் பட்டம் வென்றார் இந்திய வீரர் குகேஷ். சிங்கப்பூரில் நடந்த போட்டியில், 14ஆவது சுற்றில் 58ஆவது காய் நகர்த்தலில், நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரேனை குகேஷ் வீழ்த்தினார். 13 சுற்றுகள் முடிவில் இருவரும் 6.5 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில், இறுதிச்சுற்றில் அபாரமாக விளையாடி குகேஷ் வென்றார். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷ் ஆவார்.

error: Content is protected !!