News July 10, 2025

இன்று ஒரு நாள் இப்படி செய்து பாருங்கள்….

image

‣நாளை பார்த்து கொள்ளலாம் என நினைத்த காரியத்தை உடனே செய்து முடியுங்கள்
‣நீங்கள் சண்டையிட்ட ஒருவரிடம் நார்மலாக பேசுங்கள்
‣அருகிலுள்ள இடங்களுக்கு நடந்தே செல்லுங்கள்
‣தெரியாத ஒருவருக்கு ஒரு சின்ன உதவியை செய்யுங்கள்
‣ஒரு பறவைக்கோ/ விலங்கிற்கோ உணவளியுங்கள்
‣செல்போன் அல்லாமல் நேரில் சென்று நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். நிச்சயமாக மனதில் மகிழ்ச்சி நிறையும். ட்ரை பண்ணுங்க…

News July 10, 2025

2 கோடி உறுப்பினர்: தவெகவின் இலக்கு

image

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் களப்பணிகளை துவக்கிவிட்டனர். அந்த வகையில் தவெகவும் கட்சியின் கட்டமைப்பை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாம். இதன்பின்பு 2 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்காக கொண்டுள்ளதாம். வரும் செப்., மாதம் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்துக்கு செல்லும் விஜய் தொகுதி வாரியாக ஆய்வு மேற்கொண்டு வேட்பாளர்களை இறுதிசெய்ய உள்ளதாக தகவல்கள் உள்ளன.

News July 10, 2025

வார விடுமுறை… நாளை முதல் ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு

image

வார விடுமுறை நாள்களில் மக்கள் நெரிசலின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை (ஜூலை 11) முதல் ஜூலை 13 வரை முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.

News July 10, 2025

ஜூலை 10.. வரலாற்றில் இன்று!

image

*988: டப்ளின் நகரம் நிறுவப்பட்டது.
*1739: நாதிர் ஷா செங்கோட்டையை கொள்ளையடித்தார்.
*1778: பிரான்சின் லூயிஸ் XVI கிரேட் பிரிட்டன் மீது போரை அறிவித்தார்.
*1947: இந்தியாவின் முதல் PM ஜவஹர்லால் நேரு, செங்கோட்டையின் லாஹோரி வாயிலில் இந்தியக் கொடியை ஏற்றினார். *1949: தஜிகிஸ்தானின் கைடு பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி 7,200 பேர் உயிரிழந்தனர்.

News July 10, 2025

சாலை இல்லை, ₹5000 கோடி எங்கே? அண்ணாமலை கேள்வி

image

மத்திய அரசு ₹5000 கோடிக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சுமத்தியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசின் திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என அறிவிப்பு வெளியிட்டதாகவும் ஆனால் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசு நிறைவேற்றவில்லை என தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

கோர விபத்து: ரயில்வே துறை முக்கிய உத்தரவு

image

கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தைத் தொடர்ந்து, ரயில்வே முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், கேட் கீப்பர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்களின் குரல்பதிவுகளை கண்காணிக்க வேண்டும். அனைத்து ரெயில்வே கேட்கள், கேட் கீப்பர் அறைகளிலும் CCTV பொருத்த வேண்டும். 10,000-க்கும் அதிகமான வாகனங்கள் கடக்கும் ரயில்வே கேட்டுகளில் இன்டர்லாக் சிஸ்டம் நிறுவப்படும் என 11 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

News July 10, 2025

முறைகேடு புகாரில் சிக்காத தலைவரும் ராஜினாமா!

image

மதுரை மாநகராட்சி 1வது மண்டல தலைவர் வாசுகியும் பதவியை ராஜினாமா செய்தார். <<16986453>>2, 3, 4, 5வது மண்டலங்களில்<<>> சொத்து வரியை குறைத்து காட்டி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதனால் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய CM ஸ்டாலின் உத்தரவிட்டார். விசாரணையில் 1வது மண்டலத்தில் முறைகேடு நடக்கவில்லை என கூறப்பட்ட நிலையில், அவரும் ராஜினாமா செய்துள்ளார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 10, 2025

இரட்டை இலையுடன் தாமரை ஆட்சியில் மலரும்: தமிழிசை

image

வட்ட இலையுடன் தாமரை குளத்தில் மலரும், இரட்டை இலையுடன் தாமரை ஆட்சியில் மலரும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் ‘மக்களைக் காப்போம்’ நிகழ்வு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும், அதனைப் பார்த்து திமுக பயந்திருப்பதாகவும் கூறினார். நம் நாடு நன்றாக இருக்கிறது என்றால் மோடி தான் காரணம் என்றும், அவருக்காக கோவிலில் தான் பூஜை செய்வதாகவும் தெரிவித்தார்.

News July 10, 2025

பாரீஸ் நகரில் ரஷ்மிகா..!

image

Onitsuka Tiger என்பது ஒரு ஜப்பானிய ஷூ மற்றும் ஃபேஷன் பிராண்ட் ஆகும். இந்தியாவில் இந்த பிராண்ட்டின் விளம்பர தூதராக Pan India Actress ஆன ரஷ்மிகா மந்தனாவை கடந்த 2023-ம் ஆண்டே தேர்வு செய்தனர். தற்போது பாரீஸ் நகரில் இந்த பிராண்ட் சார்பாக நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பாரீஸ் சென்ற ரஷ்மிகா அந்த நகரில் அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News July 10, 2025

இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை: முத்தரசன்

image

சமீபத்தில் தனது சுற்றுப்பயணத்தின் போது பேசிய இபிஎஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்கின்றன. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற அளவுக்கு முகவரி இல்லாமல் இருப்பதாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த சிபிஐ கட்சியின் மாநில செயலாளார் முத்தரசன், இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை என்றும், MGR-க்கு அரசியலில் நிரந்தர முகவரி பெற்று தந்ததே சிபிஐ தான் எனவும் அவர் கூறினார்.

error: Content is protected !!