News December 13, 2024

நோயாளிகளை பார்க்க வந்த உறவினர்கள் தீயில் சிக்கி பலி?

image

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் பலியான 7 பேரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள் என்றும், நோயாளிகளை பார்க்க வந்த இடத்தில் 7 பேரும் தீயிலும்,புகையிலும் சிக்கி பலியானதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது. அதேபோல் கணினியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

News December 13, 2024

ஹாஸ்பிட்டல் லிப்டில் மயங்கி கிடந்த 7 பேர் மீட்பு

image

திண்டுக்கல்லில் தனியார்<<14863166>> ஹாஸ்பிட்டல்<<>> லிப்டுக்குள் மயங்கி கிடந்த 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 4 மாடி கொண்ட மருத்துவமனையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவலின்பேரில் மீட்புக் குழு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டது. இதுவரை 32 பேரை அக்குழு மீட்டுள்ளது. மேலும் ஹாஸ்பிட்டலுக்குள் வேறு யாரும் சிக்கியுள்ளனரா என ஆய்வு நடக்கிறது.

News December 13, 2024

தூக்கம் அவசியம். ஏன் தெரியுமா?

image

தினசரி குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். போதுமான தூக்கம் *உடல் செயல்பாடுகளை சீராக்கி புத்துணர்வு அளிக்கும் *மனதை உற்சாகப்படுத்தும், மனச்சோர்வை போக்கும் *நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் *உடல் எடை அதிகரிப்பை தடுக்கும் *படிப்பு, வேலைகளில் கவனக்குவிப்பை, உற்பத்தித் திறனை அதிகரிக்கும் *இதயநோய் வரும் ஆபத்தை குறைக்கும்.

News December 13, 2024

ராசி பலன்கள் (13-12-2024)

image

➤மேஷம் – அன்பு ➤ ரிஷபம் – செலவு ➤மிதுனம் – நன்மை ➤கடகம் – ஈகை ➤சிம்மம் – முயற்சி ➤கன்னி – உதவி ➤துலாம் – சுகம் ➤விருச்சிகம் – பரிவு ➤தனுசு – பெருமை ➤மகரம் – சிக்கல் ➤கும்பம் – சினம் ➤மீனம் – தனம்.

News December 13, 2024

வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி

image

பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் அடுத்த 3 போட்டிகளிலும் IND அணி கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. அப்போதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற முடியும். இதே சூழலில்தான் AUS அணியும் உள்ளது. PCT புள்ளிகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள SA (63), AUS (60), IND (57), SL (45.4), ENG (45.2) ஆகிய அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற கடும் போட்டி நிலவுகிறது.

News December 13, 2024

அதை மட்டும் விட்றாதீங்க: ராம்கி உருக்கம் ❤️❤️

image

லக்கி பாஸ்கரில் நடித்து வேறலெவல் கம்-பேக் கொடுத்திருக்கிறார் ராம்கி. அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், 22 வயசுல ஹீரோ ஆயிட்டேன். அப்படி நடக்கலைனா, நிலைமை மோசமாயிருக்கும். ஏன்னா நான் படிக்கல. நிறைய பேரு சொல்லுவாங்க, படிக்காதவங்க ஜெயிச்சிட்டாங்கனு. ஆனா அது லட்சத்துல சில பேருதான். ஆனா படிச்சு ஜெயிச்சவங்க கோடி பேரு. ஒரு அண்ணனா சொல்றேன். படிக்குற நேரத்துல படிச்சிருங்க. நிச்சயம் ஜெயிப்பீங்க என்றார்.

News December 13, 2024

‘தங்க ரத்தம்’ பற்றி தெரியுமா?

image

உலகில் பல ரத்த வகைகள் இருக்கலாம். ஆனால் Rh-null என்ற வகைதான் மிக மிக அரிதான ரத்த வகையாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் 50க்கும் குறைவானவர்களே இந்த வகை தனித்துவமான ரத்தத்தை கொண்டுள்ளனர். அதன் காரணமாகவே இது ‘தங்க ரத்தம்’ என வர்ணிக்கப்படுகிறது. இந்த வகை ரத்தத்தை யாருக்கு வேண்டுமானாலும் செலுத்தலாம் என்பதால், மிகவும் மதிப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

News December 13, 2024

இந்து கோயில்கள் vs மசூதி: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

image

மசூதி அமைந்துள்ள இடங்களில் இந்து கோயில்கள் இருந்தனவா என்று ஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் மீது விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. வழிபாட்டுத்தலங்கள் சட்டம் தொடர்பான மனுவை விசாரித்து வருவதால், பிற நீதிமன்றங்களில் இதுதொடர்பான வழக்குகளை விசாரிக்க SC தலைமை நீதிபதி தடை விதித்துள்ளார். எனவே, குறிப்பிட்ட காலத்திற்கு இதுபோன்ற மனுக்கள் எந்த நீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய முடியாது.

News December 13, 2024

குகேஷ் சிறந்த வழிகாட்டி: சச்சின்

image

64 சதுரங்களை கொண்ட செஸ் போட்டியில், இளம் தலைமுறையினர் முடிவில்லா சாத்தியங்களை செய்ய குகேஷ் ஊக்கமளித்துள்ளதாக சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 18 வயதில் 18ஆவது உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளதாகவும், விஸ்வநாதன் ஆனந்தின் காலடித் தடங்களை பின்பற்றி, அடுத்த தலைமுறைக்கு சிறந்த வழிகாட்டியாக குகேஷ் இருப்பதாகவும் அவர் வெகுவாக பாராட்டியுள்ளார். இதேபோல், பல பிரபலங்களும் குகேஷை பாராட்டி வருகின்றனர்.

News December 12, 2024

ஒரே நாளில் 200 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு

image

கடந்த 24 மணி நேரத்தில், குர்ஸ்க் போர்க்களத்தில் 200-க்கும் மேற்பட்ட வீரர்களை உக்ரைன் ஆயுதப்படைகள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “2022 முதல் இதுவரை குர்ஸ்கில், 40,000க்கும் மேற்பட்ட வீரர்களையும், 236 பீரங்கி டாங்கிகளையும் உக்ரைன் இழந்துள்ளது. நோவோவனோவ்கா கிராமத்தை ரஷ்யா மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!