News December 13, 2024

பெரியார் பொன்மொழிகள்

image

*எதிரிகளுடன் போராடுவது முக்கிய வேலை தான் ஆயினும் அதைவிட முக்கியம் துரோகிகளை ஒழிக்க போராடுவது ஆகும்
*வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் மனைவிக்கு வேறு சட்டம் இருக்கிறது
*நிந்தனையான பேச்சுக்கள் எப்போதும் ஒரு விஷயத்துக்கு நியாயமான பதிலாக முடியாது
*கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகிறோமோ அது போலவே மனைவி இழந்த புருசனை விதவன் என்று கூப்பிட வேண்டும்.

News December 13, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News December 13, 2024

13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

image

13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக MET தெரிவித்துள்ளது. 16ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழையும், 17ஆம் தேதி 3 மாவட்டங்களில் மிக கனமழை, 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

News December 13, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News December 13, 2024

திமுகவை சரியான நேரத்தில் மக்கள் தண்டிப்பர்: பாமக

image

திமுகவை சரியான நேரத்தில் மக்கள் தண்டிப்பார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 18 நாள்கள், தொடருக்கு 2 நாள்கள் மட்டுமே சட்டமன்றம் நடந்ததாகவும், சட்டப்பேரவைதான் ஜனநாயகத்தின் நாற்றங்கால்கள், அதையே கருகச் செய்து ஜனநாயகத்தை வளர விடாமல் அழிக்கும் பணியை திமுக அரசு செய்கிறது என்றும் சாடியுள்ளார். அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

News December 13, 2024

ஆதாரை இலவசமாக திருத்த நாளையுடன் அவகாசம் நிறைவு

image

ஆதாரில் இலவசமாக திருத்தம் செய்ய அளிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. ஆதாரில் தகவலை இலவசமாக திருத்தம் செய்ய வருகிற 14ஆம் தேதி வரை UIDAI அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. இந்த அவகாசத்துக்குள் தகவலை திருத்தினால் இலவசம் ஆகும். அதன்பிறகு திருத்தம் செய்ய ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். இந்தத் தகவலை பகிருங்க.

News December 13, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால்.
▶குறள் இயல்: குடியியல்.
▶அதிகாரம்: குடிசெயல்வகை.
▶குறள் எண்: 125 ▶குறள்: அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை
▶பொருள்: போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.

News December 13, 2024

WAY2NEWS TAMILஇல் தி.மலை மகாதீபம் நேரலை

image

கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மிகப்பெரும் ஆன்மிக நிகழ்வாக திருவண்ணாமலை மலை மீது மகாதீபம் ஏற்றும் வைபவம் கருதப்படுகிறது. இந்த வைபவம் இன்று மாலை திருவண்ணாமலையில் நடைபெறவுள்ளது. இதை திருவண்ணாமலைக்கு நேரில் சென்று வழிபட முடியாதோர், வீட்டில் இருந்தபடியே நேரலையாக WAY2NEWS TAMILஇல் வழிபட முடியும். ஆதலால் WAY2NEWS TAMIL-லுடன் இன்று இணைந்திருங்கள்.

News December 13, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶நாள்- டிசம்பர்- 13 ▶கார்த்திகை – 28 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்:12:15 AM – 1:15 AM, 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை:7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: மேற்கு▶பரிகாரம்: வெல்லம்▶பிறை: வளர்பிறை ▶சுபமுகூர்த்தம்: இல்லை ▶நட்சத்திரம்: பரணி ▶சந்திராஷ்டமம் : ஹஸ்தம்

News December 13, 2024

மகளை வன்கொடுமை செய்த குற்றவாளியை கொன்ற தந்தை

image

குவைத்தில் பணியாற்றும் ஆஞ்சநேயா என்பவரின் மகள்(12), ஆந்திராவில் உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தார். இந்நிலையில், உறவினர் (59) ஒருவர், சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். போலீஸில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லாததால், குவைத்தில் இருந்து ஆந்திரா வந்த ஆஞ்சநேயா, அந்நபரை கொலை செய்துவிட்டு குவைத் திரும்பிவிட்டார். பெண் குழந்தை மீது கை வைப்பவர்களுக்கு இது எச்சரிக்கை என்றும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!