News December 13, 2024

தென் மாவட்டங்களில் கனமழை.. CM ஸ்டாலின் ஆய்வு!

image

தென் மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் CM ஸ்டாலின் ஆய்வு செய்தார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாகப் பேசிய அவர், தற்போதைய சூழல் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அடிப்படை உதவிகளை செய்யவும் அறிவுறுத்தினார்.

News December 13, 2024

மழை காலத்தில் சளி இருமல், காய்ச்சல் வராமல் தடுக்க….

image

* நோய் கிருமிகள் ஈரப்பதத்தால் அதிகளவில் பரவும் என்பதால், இருப்பிடத்தை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும் * வெளியில் சென்று வந்த பின் கை, கால்களை கழுவவும் * காய்ச்சிய நீரை பருகவும் * உணவில் சுக்கு, மஞ்சள் தூள், சீரகம், மிளகு தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம் * வெளியில் வாங்கி உண்பதை தவிர்ப்பது நல்லது * நோய் தொற்றை பரப்பும் கொசுவை விரட்ட வேப்பிலை, துளசி, நொச்சி போன்ற இலைகளை புகை மூட்டம் போடலாம்.

News December 13, 2024

குகேஷை வாழ்த்திய செஸ் ’GOAT’

image

இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு, இந்திய செஸ் லெஜெண்ட் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது X பதிவில், “குகேஷின் சிறு வயதின் போது அவருக்கு கோப்பை கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து ‘ராஜாவான சிறுவன்’ என பதிவிட்டுள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்திடம் இருந்து பறிக்கப்பட்ட சாம்பியன் பட்டத்தை மீண்டும் கொண்டு வந்து அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

News December 13, 2024

தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு!

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு ₹55 குறைந்து ₹7,230க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ₹3 குறைந்து, ₹101க்கும், கிலோ வெள்ளி ₹101,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக ஏற்றத்திலிருந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது.

News December 13, 2024

ஒரே நாளில் 3 படங்கள் ரிலீஸ்

image

இன்று ஒரே நாளில் 3 படங்கள் திரைக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ‘சூது கவ்வும்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகம் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல சித்தார்த் நடிப்பில் ‘Miss You’, பரத் நடிப்பில் ‘Once Upon a time in Madras’ என்ற படமும் திரைக்கு வந்துள்ளது. இதில் நீங்கள் பார்க்க விரும்பும் திரைப்படம் எது?

News December 13, 2024

திமுக எம்பிக்களுக்கு முக்கிய உத்தரவு

image

DMK எம்.பிக்கள் இன்றும், நாளையும் கட்டாயம் பார்லிமெண்ட் வர வேண்டும் என அக்கட்சியை சேர்ந்த இரு அவைகளின் கொறடாக்கள் ஆணையிட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, டிச.13, 14 என 2 நாள்கள் அரசியலமைப்பு சட்டத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. இதில் PM மோடி பதிலளிக்க உள்ளார்.

News December 13, 2024

கனமழைக்கு மூன்று பேர் பலி

image

தமிழகத்தில் 3 நாள்களாக பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். நாகையில் நேற்று வீட்டின் சுவர் இடிந்து 9ஆம் வகுப்பு மாணவன் கவியழகன் உயிரிழந்தார். இன்று காலை பரமகுடியில் சுவர் இடிந்து சிறுமி கீர்த்திகா மரணம் அடைந்தார். மேலும், அரியலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வேங்கையன் என்ற 75 வயது முதியவர் உயிரிழந்தார்.

News December 13, 2024

சுவாமிமலையில் தேரோட்டம் ரத்து

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் கனமழை பெய்து வருவதால் சுவாமிமலை முருகன் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று நடைபெறவிருந்த தேரோட்டம் ரத்தானது. அலங்கரிக்கப்பட்ட தேர் தயாராக இருந்த நிலையில், ரத்தானதால் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

News December 13, 2024

நண்பனுக்கு தோள் கொடுத்த சச்சின்!

image

ஓய்வூதியம் ரூ.30,000த்தில் தான் காலத்தை கடத்தி வருவதாக வினோத் காம்ப்ளி கூறியுள்ளார். பேட்டி ஒன்றில், “ சிறுநீரக கோளாறால் அவதியடைந்து வரும் என்னை, என் குடும்பம் தான் பார்த்துக் கொள்கிறது. சச்சினும் கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டு அறுவை சிகிச்சைகளில் உதவியிருக்கிறார் என்ற அவர், கபில்தேவ் கூறியபடி மறுவாழ்வு மையத்திற்கு செல்ல தயாராக உள்ளேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு நிவாரணம்

image

திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டிருக்கிறார் CM ஸ்டாலின். மேலும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுவோருக்கு தலா ₹1 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு தலா ₹50 ஆயிரமும் வழங்க ஆணையிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!