India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனது கணவர் தன்னை விட வளர்ப்பு பூனையின் மீது அதிக கவனம் செலுத்தியதால், மனைவி கோர்ட்டுக்கு போன சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. பூனையுடன் கணவர் அதிக நேரம் செலவிடும் போதெல்லாம் தம்பதிக்குள் சண்டை வந்துள்ளது. மேலும் பூனை, மனைவியை அடிக்கடி பிராண்டி வைத்தது, சண்டையை அடுத்த லெவலுக்கு, ஹைகோர்ட் வரை கொண்டு சென்றுள்ளது. ஆனால், இதை குடும்ப வன்முறையாக கருதமுடியாது என நீதிபதி தெரிவித்துவிட்டார்.
நீதிபதிகள் துறவிபோல வாழ வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 2 பெண் நீதிபதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் சமூக ஊடகங்களில் கருத்து கூறக்கூடாது. ஏனென்றால் நாளை தீர்ப்பு வழங்கும்போது, ஏற்கெனவே அந்த தீர்ப்பை மறைமுகமாக சோஷியல் மீடியாவில் கூறிவிட்டார் என்ற கருத்து எழும் எனக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
கனமழை எதிரொலியாக 5ஆவது மாவட்டமாக தேனிக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்கள் நலன் கருதி, தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
சரத்குமாரின் 150ஆவது படமான ‘தி ஸ்மைல் மேன்’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ்யாம் பர்வீன் இயக்கும் இந்த படத்தில், சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். இந்நிலையில், டிச.27இல் படம் வெளியாகும் தனது X பக்கத்தில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் நிவாரணப் பணிக்காக திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளனர். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு காசோலையாக ₹1.30 கோடியை ஸ்டாலினிடம் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வழங்கினார். முன்னதாக ஸ்டாலினும் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் கபாலி பட நாயகி ராதிகா ஆப்தே, தனக்கு குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாவில் பதிவிட்டு அறிவித்துள்ளார். “பிரசவத்துக்கு பின், ஒரு வாரக் குழந்தையுடன் முதல் அலுவல் மீட்டிங்கில்” என்ற கேப்ஷனுடன், மடியில் லேப்டாப்புடன், குழந்தைக்கு பாலூட்டும் போட்டோவை ராதிகா பகிர்ந்துள்ளார். குழந்தையின் பாலினம் குறித்து ராதிகா ஆப்தே – பெனடிக்ட் டெய்லர் தம்பதியினர் எந்த தகவலையும் பகிரவில்லை.
தானத்தில் சிறந்தது ரத்ததானம் என்பார்கள். “மேன் வித் கோல்டன் ஆர்ம்” என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் ஹாரிசன் 24 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கிறாராம். 14 வயதில் இவரது ரத்தத்தில் ஆன்டி-டி என்னும் ஆன்டிபாடி இருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து 60 ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் ரத்ததானம் செய்திருக்கிறார். தனது சேவைக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். நீங்கள் ரத்ததானம் பண்ணிருக்கீங்களா
குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கனிமொழி MP மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “WHO அறிவுறுத்தியபடி, குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்ட சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். Nestle Cerelac பவுடரில் 2.7 gm சர்க்கரை இருப்பதாக சுவிஸ் நிறுவனம் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது தொடர்பாக இயக்குநர் ராம் கோபால் வர்மா 4 கேள்விகளை எழுப்பியுள்ளார். *கோயில் திருவிழா கூட்டங்களில் பக்தர்கள் காணாமல் போனால் கடவுள் கைது செய்யப்படுவாரா? *தேர்தல் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தால் அரசியல்வாதி கைது செய்யப்படுவாரா? *ப்ரொமோஷனுக்கு வராத ஹீரோ, ஹீரோயின்கள் மீது நடவடிக்கை பாயுமா? *கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது ஹீரோவா, போலீசா? என வினவியுள்ளார்.
கனமழை எதிரொலியாக 4 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பு கருதி, தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து, சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
Sorry, no posts matched your criteria.