News December 14, 2024

ஒரே வருடத்தில் பிரான்ஸ் நாட்டிற்கு 4வது பிரதமர்

image

பிரான்ஸ் நாடு அரசியல் நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறது. கூட்டணி கட்சிகளின் சிக்கல், ஓய்வூதியம் திட்டத்திற்கு மக்களிடம் உருவான எதிர்ப்பு, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு போன்றவற்றால், 2024ல் 3 பிரதமர்கள் பதவி இழந்து விட்டார்கள். தற்போது பிரதமராக பிரான்சுவா பெய்ரூவை ஜனாதிபதி இம்மானுவேல் மைக்ரோன் தேர்ந்தெடுத்துள்ளார். பிரான்ஸில், ஜனாதிபதியே பிரதமரை தேர்ந்தெடுப்பார்.

News December 14, 2024

BREAKING: ரிலீஸ் ஆனார் அல்லு அர்ஜுன்

image

இரவு சஞ்சலகுடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அல்லு அர்ஜுன் காலையில் பின் வாசல் வழியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். புஷ்பா 2 படம் பார்க்க திரையரங்கிற்கு வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று பெயில் கிடைத்த நிலையிலும் ஆவணங்கள் சிறைக்கு வர தாமதமானதால் இரவு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 14, 2024

6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை எதிரொலியாக இன்று 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, தேனி, திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகள் செயல்படாது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 14, 2024

இந்தியா- ஆஸி.,: மழையால் ஆட்டம் பாதிப்பு

image

இந்தியா- ஆஸி., மோதும் 3வது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. ஆஸி., அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி நிதானமாக ஆடினர். கவாஜா 13 ரன்களுடனும், நாதன் மெக்ஸ்வீனி 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸி, அணி தற்போது வரை 5.3 ஒவர்களில் 19 ரன்கள் எடுத்துள்ளது.

News December 14, 2024

பாகிஸ்தான் வீரர் இமாத் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

image

பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம், கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆல்ரவுண்டரான அவர் முதலில் 2023 நவம்பரில் ஓய்வு அறிவித்திருந்தார். பிறகு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் அந்த முடிவை திரும்பப் பெற்று மீண்டும் திரும்பினார். டி20 உலகக் கோப்பையில் பாக். லீக் சுற்றுடன் வெளியேறியதால் ஓரங்கட்டப்பட்டதால் ஓய்வு முடிவை வெளியிட்டுள்ளார்.

News December 14, 2024

மாநிலங்களவைத் தலைவர் நடுவர் போல இருக்க வேண்டும்

image

மாநிலங்களவைத் தலைவர் தன்கருக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேக்கும் நேற்று அவையில் காரசார விவாதம் நடந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, மாநிலங்களவைத் தலைவர் எந்த பக்கமும் சாயாத விளையாட்டுப் போட்டியில் வரும் நடுவர் போல இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், அவைத் தலைவர் நட்டா 15 நிமிடம் பேசுகையில், தங்களுக்கு பேச அனுமதி தரப்படுவதில்லை என்றும் அவர் சாடினார்.

News December 14, 2024

அல்லு அர்ஜூனின் சிறை கைதி எண்: 7697

image

சாஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லு அர்ஜூனுக்கு கைதி எண் 7697 வழங்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை பலியான வழக்கில் கைதான அவருக்கு கோர்ட் ஜாமின் அளித்துள்ளது. எனினும் ஆவணங்கள் கிடைக்காததால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இதனால் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிவரை சிறை வரவேற்பறையில் இருந்தார். பிறகு முதல் வகுப்புக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

News December 14, 2024

3ஆவது டெஸ்ட்: ஜடேஜா, ஆகாஷ் சேர்ப்பு

image

பிரிஸ்பேனில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளனர். அடிலெய்டில் அடைந்த மோசமான தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பந்துவீச்சு, பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆல் ரவுண்டரான ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

News December 14, 2024

டிசம்பர் 14: வரலாற்றில் இன்று

image

*1503 – தீர்க்கதரிசி நோஸ்ராடாமஸ் பிறந்தநாள்.
*1799: அமெரிக்க முன்னாள் அதிபர் வாஷிங்டன் காலமானார்
*1924: இந்தி நடிகர் ராஜ் கபூர் பிறந்தார்
*1978: நடிகை சமீரா ரெட்டி பிறந்தார்
*1959: தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார் மறைந்தநாள்.
*2006: விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் மறைந்தார்
*1984: நடிகர் ரானா பிறந்தார்
* தேசிய எரிசக்தி சேமிப்பு தினம்

News December 14, 2024

3ஆவது டெஸ்ட்: இந்தியா பந்துவீச்சு தேர்வு

image

பிரிஸ்பேனில் நடைபெறும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தலா 1 டெஸ்டில் வென்றுள்ளன. இதனால் பிரிஸ்பேனில் நடைபெறும் 3ஆவது டெஸ்டில் வென்றால் தொடரில் 2 அணிகளில் ஏதேனும் ஒன்று முன்னிலை பெறும். ஆதலால் பிரிஸ்பேனில் நடைபெறும் 3ஆவது போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!