News December 14, 2024

மேலும் ஒரு சாதனை பட்டியலில் கோலி

image

ஆஸி., அணிக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் கோலி இன்று அரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது ஆஸி.,க்கு எதிராக டி20, டெஸ்ட், ODI என அனைத்து வித கிரிக்கெட்டிலும் மொத்தம் 100 போட்டிகளில் ஆடியுள்ளார். இதுவரை 49 ஒருநாள், 23 டி20 மற்றும் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,326 ரன்களுடன் உள்ளார். இதில் 17 சதங்களும், 27 அரை சதங்களும் அடங்கும். முதலிடத்தில் சச்சின் 110 போட்டிகளில் 6,707 ரன்கள் எடுத்துள்ளார்.

News December 14, 2024

இன்று நெல்லைக்கு ரெட் அலர்ட்

image

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கான, ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழகம் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News December 14, 2024

₹800 கோடிக்கு வீடு வாங்கும் மஸ்க்

image

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சுமார் ₹800 கோடியில் பிரம்மாண்ட பீச் ஹவுஸ் ஒன்றை மஸ்க் வாங்க திட்டமிட்டுள்ளராம். 19 ஆயிரம் சதுர அடியில், 25 அடுக்குகளை கொண்ட இந்த ஹவுசில் ஜிம்மில் தொடங்கி நீச்சல் குளங்கள், ஸ்பாக்கள் போன்றவை உள்ளன. அமெரிக்கா அதிபராகும் டிரம்ப்பின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் மஸ்க், அவரின் வீட்டருகே குடிபோகும் நோக்கில் இதனை வாங்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

News December 14, 2024

ட்ரோன் கப்பலை கட்டிய ஈரான்

image

ஈரான் புதிதாக ட்ரோன்களை சுமந்து செல்லும் கப்பலை கட்டமைத்திருப்பது செயற்கைக்கோள் படம் மூலம் தெரிய வந்துள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் அந்நாட்டிற்கும் போர் பதற்றம் நிலவுகிறது. இச்சூழலில், ட்ரோன்களை சுமந்து செல்லும் கப்பலை கட்டுவித்திருப்பது புகைப்படம் மூலம் உறுதியாகியுள்ளது. விமானந்தாங்கி கப்பல் போல இக்கப்பல் ட்ரோன்களை கடலில் சுமந்து செல்லும் வல்லமை கொண்டது எனக் கூறப்படுகிறது.

News December 14, 2024

புடவையில் அசத்தும் மாளவிகா மோகனன்

image

ரஜினியின் பேட்டை, விஜய்யின் மாஸ்டர், விக்ரமின் தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். தற்போது அவர் சேலை கட்டி, தாமரை குளத்தின் பின்னணியில் எடுத்த புகைப்படங்களை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள், அவரின் அழகை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். நீங்கள் அந்த படங்களை காண வேண்டுமா? மேலே கிளிக் செய்து பாருங்கள்.

News December 14, 2024

தமிழகத்தில் கனமழைக்கு 7 பேர் பலி

image

தமிழகத்தில் கனமழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கனமழையால் வீட்டு சுவர் இடிந்து ஒருவர் பலியானார். பண்ருட்டியில் ஒருவரும், வடலூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவரும் பலியாகினர். ரெட்டிச்சாவடி மேல்அழிஞ்சிப்பட்டையில் செல்போனுக்கு சார்ஜ் போட்ட மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாகை, வேதாரண்யம், அரியலூரிலும் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.

News December 14, 2024

2,500 குழந்தைகளுக்கு வீடு தேடி இன்சுலின்

image

தமிழகத்தில் டைப் 1 நீரிழிவால் பாதிக்கப்பட்ட 2,500 குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டு வருவதாக மினிஸ்டர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 49.46 லட்சம் சர்க்கரை நோயாளிகள், 44.46 லட்சம் BP நோயாளிகள் பயன்பெறுவதாகக் கூறினார். உலகளவில் நீரிழிவு நோயாளிகளை பாதுகாப்பதில் தமிழகம் முன்மாதிரியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

News December 14, 2024

இந்தியாவுக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது சுவிஸ்

image

இரட்டை வரிவிதிப்பு விதியின்கீழ் இந்தியாவுக்கு அளித்த மிகவும் விரும்பத்தக்க நாடு அந்தஸ்தை சுவிட்சர்லாந்து ரத்து செய்துள்ளது. சுவிட்சர்லாந்து நிதித்துறையின் அறிவிப்பில், நெஸ்லே விவகாரத்தில் 2023இல் இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவால் இருதரப்பு வர்த்தகம், முதலீடு பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

News December 14, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 14, 2024

சனி தொல்லையில் இருந்து பாதுகாக்கும் அனுமன் வழிபாடு

image

சனிக்கிழமையில் அனுமனை வழிபட்டால், சனி பகவானின் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. காலையில் குளித்து அருகில் உள்ள அனுமன் அல்லது அனுமன் சன்னதி இருக்கும் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அனுமன் சாலிசாவை 11 முறை கூறி, அனுமனின் சன்னதியை சுற்றி வரவும். மல்லிகைப்பூ எண்ணெய் படைப்பது உகந்ததாகும். அனுமனுக்கு பிடித்த ராம நாமத்தை மனதில் நிலைநிறுத்த வேண்டும்

error: Content is protected !!