News December 14, 2024

இளங்கோவன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி

image

சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர், குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

News December 14, 2024

மனதில் பட்டதை பேசக்கூடியவர்: முதல்வர்

image

காங்., மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், தந்தை பெரியார், ஈ.வி.கே.சம்பத் என மிகப்பெரும் அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எனக் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் தனது மனதில் பட்டதை பேசிவிடக் கூடிய பண்புக்கு சொந்தக்காரர் எனவும் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

News December 14, 2024

அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளது

image

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை அவர், உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது உடல்நிலை Stableஆக இருப்பதாக கூறினர். இருப்பினும், அவர் அனுமதிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரியப்படுத்தவில்லை.

News December 14, 2024

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

image

அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவாகியிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறவுள்ளது. இதன் தாக்கத்தால் வரும் 16 முதல் 18ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று MET தெரிவித்துள்ளது. இன்று, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News December 14, 2024

பீகார் இளைஞர்களை பயமுறுத்தும் ‘பகட்வா விவாகம்’

image

அரசு மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், ஐஏஸ், ஐபிஎஸ் ஆபீசர்ஸ், இப்படி படித்த, அரசு வேலையில் இருக்கும் இளைஞர்களை கடத்தி, மணமுடிக்கும் வழக்கம் பீகாரில் அதிகரித்து வருகிறது. இங்கு உயர்சாதியினர் மத்தியில் பெண்ணுக்கு திருமணம் செய்ய மிக அதிக வரதட்சணை கொடுக்க வேண்டியுள்ளது. வசதியில்லாத பெண் வீட்டார், இந்த கடத்தல் வழியை பின்பற்றி திருமணத்தை நடத்திவிடுகின்றனர். எதிர்த்து கேட்டால் வரதட்சணை புகார் வருமாம்.

News December 14, 2024

இளங்கோவன் மறைவுக்கு ராகுல், கார்கே இரங்கல்

image

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், அச்சம் அறியா, கொள்கையில் உறுதி கொண்ட தலைவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். தந்தை பெரியாரின் கொள்கையில் உறுதியாக இருந்ததாகவும், தமிழகத்திற்கான அவரது அர்ப்பணிப்பு என்றென்றும் உத்வேமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அதேபோல, நேர்மையான, தைரியமான தலைவர் என மல்லிகார்ஜுன கார்கே புகழாரம் சூட்டியுள்ளார்.

News December 14, 2024

சாலை விபத்துகளில் தமிழ்நாடு No.1

image

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக MoRTH தெரிவித்துள்ளது. அதன் தரவுகளின்படி, 2018-22 காலக்கட்டத்தில் நாட்டில் மொத்தம் 21.73 லட்சம் விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 2.99 லட்சம் விபத்துகள் நடத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ம.பி. 2.50 லட்சம், உ.பி. 1.98 லட்சம், கர்நாடகா 1.90 லட்சம், கேரளா 1.86 லட்சம் விபத்துகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

News December 14, 2024

இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா?

image

EVKS இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலில், விஜய் தலைமையிலான தவெக களம் இறங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி மாநாடு நடத்தியிருக்கும் விஜய், தேர்தல் அரசியலில் எப்படி செயல்பட போகிறார் என்று தமிழ்நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

News December 14, 2024

டிம் சவுதிக்கு GUARD OF HONOUR வழங்கிய இங்கிலாந்து

image

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் NZ வீரர் டிம் சவுதிக்கு ENG வீரர்கள் GUARD OF HONOUR மரியாதை அளித்தனர். இந்த போட்டியுடன் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற உள்ளார். 106 போட்டிகளில் 389 விக்கெட்களும், 2,220 ரன்களும் எடுத்துள்ளார். இன்று நடைபெற்று வரும் போட்டியிலும் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி என 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

News December 14, 2024

சிவாஜி ரசிகரான EVKS இளங்கோவன்

image

திராவிட இயக்க குடும்ப பின்னணி இருந்தாலும், EVKS இளங்கோவன் காங்கிரஸிலேயே தன் அரசியலை தொடங்கினார். நடிகர் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரான இவர், அவரது சிபாரிசில் காங்கிரஸில் சீட் பெற்று 1984-ல் சத்தியமங்கலம் தொகுதி MLA ஆனார். சிவாஜி காங்கிரஸில் இருந்து வெளியேறியபோது, அவருடன் சென்ற MLAக்களில் இளங்கோவனும் ஒருவர். அதன்பின், சிவாஜி தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியிலும் இணைந்தார் இளங்கோவன்.

error: Content is protected !!